”பொறுப்பில்லாத மந்திரி மகன்கள்”-கோ 2 குய்யோ முறையோ !

ko 7

ஆர் எஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பால சரவணன், நாசர், பிரகாஷ் ராஜ் நடிப்பில்

சரத் இயக்கும் கோ படத்தின் படக்குழு சந்திப்பும் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னை வடபழனி  ஃபாரம் பேரங்காடியில்   நடந்தது .

லியோன் ஜேம்ஸ் இசையில் உருவான கண்ணம்மா , கோகிலா, விடாதே பிடி என்று,
ko 1 
மூன்று பாடல்கள் திரையிடப்பட்டன .
ஒரு பாடல் கர்நாடக மாநிலம் சிக்மகளூரின்  இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் எடுக்கப்பட்டு இருந்தது .
பாடல்களை மேடையில் இசைத்துப் பாடவும் செய்தனர்.
ko 3
பாடல்களுக்கு  நாயகி நிக்கி கல்ராணி  சில ஸ்டெப்ஸ் போட்டார் 
மகாகவி பாரதியின் ”தேடிச் சோறு நிதம் தின்று ..” கவிதையோடு துவங்கும் டிரைலர்,  நிறைய அரசியல் பேசியது.  முதலமைச்சரைக் கடத்தும் கதை என்பது புரிந்தது . 
ko 4
டிரைலரின் கடைசியில் முதல்வராக நடிக்கும் பிரகாஷ் ராஜிடம் “மழை என்பது ஒரு வரம் . ஆனா அதையே எங்களுக்கு சாபமா  மாத்திட்டீங்களே ” என்று கொந்தளிக்கும்  பாபி சிம்ஹா,
கடைசியில்  “ஸோ , ஒரு கிளாஸ்  தண்ணிக்காக உங்களை ஏன் நான் கொல்லக் கூடாது?” என்று கேட்கிறார் 
மேடையில் நிகழ்ச்சி நடத்துனரான ஆர் ஜே மிருதுளா ஆங்கிலத்தில் கேள்வி கேட்க , “நான் தமிழில் பேசலாமா?” என்று கேட்டு நல்ல தமிழில் பேசிய நிக்கி கல்ராணி,
 ko 5
“இது எல்லோரும் பார்க்க வேண்டிய படம் . சமூக அக்கறை உள்ள படம் . நல்ல கதை . மக்களுக்கு நல்ல செய்தி இருக்கு . இந்த படத்துல நான் நடிச்சது ரொம்ப சந்தோஷமான விஷயம் . ” என்றார் .
(அது சரி நிக்கி ? உங்க இடது தோள்பட்டையின் பின்புறத்தில் ஒரு பெயரை பச்சை குத்தி இருக்கீங்களே ? யார் அந்த …….அர்ச்சனா ?)
பால சரவணனிடம் பேசிய மிருதுளா  “இந்தப் படத்துல உங்களுக்கு மந்திரி பையன் கேரக்டரா ? பொறுப்பில்லாம சுத்துவீங்களா ?” என்று கேட்டார் . ”எப்படி சொல்றீங்க/” என்று பால சரவணன் சொல்ல,
ko 6
அதற்கு ” மந்திரி மகனுங்க எல்லாம் பொறுப்பில்லாம தானே  சுத்துவாங்க ” என்றார் மிருதுளா  “ஐயோ நான் அப்படி எல்லாம் சொல்லலீங்க ..” என்று ஜம்ப் பண்ணி ஓடினார் பாலா 
பாபி சிம்ஹா பேசும்போது ” நம்ம நாட்டுல பலரும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடாம தெருவில போடறோம் . அதை ஏதோ சலுகைன்னு நினைக்கறோம் .
ஆனா நாம எல்லோருமே  அதுக்காக 0.5 சதவீதம் வரி கட்டுறோம் . நாம ஒவ்வொருத்தரும் கட்டுறோம் . ஆனா அது வரி கட்டுற நம்மிலேயே எத்தனை பேருக்கு தெரியும்? 
ko 2
அதை இந்தப் படம் சொல்லுது. இது மாதிரி படத்துல மக்களுக்கு உபயோகமான பல நல்ல விசயங்கள் இருக்கு. 
 இது எவ்வளவு கிளாமரான கமர்ஷியலான படம் என்பது டிரைலரை பார்க்கும்போதே உங்களுக்கு தெரியும் .
அதே நேரம் படம் முடிந்து வரும்போது நாம ஏன் சமூக அக்கறை இல்லாம இருக்கோம் என்ற ஒரு குற்ற உணர்வை எல்லோருக்கும் இந்தப் படம் உருவாக்கும் .
எலக்ஷனுக்கு முன்னாடி வரும் இந்தப் படம்,  மக்களுக்கு தேவையான ஒன்று ” என்றார் .  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →