குப்பத்து ராஜா 2019@ விமர்சனம்

எஸ் ஃபோகஸ் பிலிம்ஸ் சார்பில்  எம் . சரவணன், சிராஜ் , டி. சரவணன் தயாரிக்க, ஜி வி பிரகாஷ், ஆர். பார்த்திபன், பாலக் பன்னீர் அடச்சே, பாலக் லால்வானி, யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர் , பூனம் பஜ்வா நடிப்பில் நடன இயக்குனர் பாபா பாஸ்கர் கதை திரைக்கதை வசனம் எழுதி நடனம் அமைத்து இயக்கி இருக்கும் படம் குப்பத்து ராஜா . 

இன்றைக்கு நாற்பது வருடம் இரண்டு வருடம் மூணு வாரம் முன்பு ரஜினி காந்த், விஜயகுமார், மஞ்சுளா , பத்ம பிரியா நடிக்க டி ஆர் ராமண்ணா இயக்கிய படத்தின் பெயரும் குப்பத்து ராஜா . ஆனால் அது ஓரளவுக்கு ஓடிய படம் .

 சரி இந்த குப்பத்து ராஜா , ராஜாவா இல்லை கூஜாவா ? பேசலாம் . 
மாநகரின் வடக்குப் பகுதி குப்பம் ஒன்றில் வாழும் துடுக்கான இளைஞன் ராக்கெட் ( ஜி வி பிரகாஷ்) அப்பா ஊர் நியாயம் ( எம் எஸ் பாஸ்கர்) அம்மா இல்லை . அங்கே பல நல்ல காரியங்கள் செய்து பெயர் வாங்கி இருக்கும் – எம் ஜி ஆர் ரசிகனான எம் . ஜி ராஜேந்திரனுக்கும் ( பார்த்திபன்) ராக்கெட்டுக்கும் ஆகறது இல்லை . 
ஆனால் ராஜேந்திரனும் ஊர் நியாயமும் நண்பர்கள் . 

குப்பத்தில் வட்டிக்கு விட்டுப் பிழைக்கும் அடாவடி பெண்மணியின் மகளுக்கும் ( பாலக் ) ராக்கெட்டுக்கும் காதல் . அது அவளது அம்மாவுக்கு பிடிக்கவில்லை . அங்கே  குடி வரும் வெள்ளை வெளேர் ஆண்ட்டி மேரி( பூனம் பஜ்வா)யைப் பார்த்து ராக்கெட் சொல் விடுவது காதலிக்கு பிடிக்கவில்லை . 

அங்கே மிட்டாய் கம்பெனி நடத்தும் சேட் ஒருவனின் கம்பெனியில் குப்பத்துப் பெண்கள் பலரும் வேலை செய்கிறார்கள் . தவணை கட்டாத வாகனங்களை தூக்கி வரும் வேலையை அதே சேட்டுக்காகத்தான் ராக்கெட் செய்கிறான் . இந்த நிலையில் அந்த கம்பெனி மிட்டாயை தின்ற ஒரு பையன் காணாமல் போகிறான் . ஒரு சிறுமியும் ஆபத்துக்கு ஆளாகிறாள் .

 அதே நேரம் ஊர் நியாயம் கொல்லப் பட , தன் அப்பனை கொன்றது ராஜேந்திரன் என்று கோபப்படும் ராக்கெட் அவரை அடிக்கிறான், குப்பம் ரெண்டு பட , குப்பத்தின் பெயரால் பிழைக்கு கவுன்சிலர் லாபம் பார்க்கிறான் . குழந்தைகள் என்ன ஆனார்கள் ? ஊர் நியாயத்தை கொன்றது யார் ? ராக்கெட் – ராஜேந்திரன் பிணக்கு என்ன ஆனது என்பதே குப்பத்து ராஜா .

 ஜி வி பிரகாஷ் படம் முழுக்க எனர்ஜியாக குதிக்கிறார் . ஆடுகிறார் . அடிக்கிறார் . நடிக்கிறார் பார்த்திபன் கெத்து காட்டுகிறார் . பூனம் பஜ்வா பார்க்க சகிக்காத இடுப்பை காட்டுகிறார் பாலக் வாயை வாயை காட்டுகிறார் . 

கூட்ட நெரிசல் உணர்வை, பின்புல உருவாக்கத்தை மகேஷ் முத்துசாமியின் சிறப்பான ஒளிப்பதிவின் துணையோடு அருமையாகக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் பாபா பாஸ்கர் . 
கதாபாத்திரப் பெயர்களில் மண் மணம். அபாரம் .

 மற்றபடி  ஆயிரத்தெட்டு தடவை பார்த்து சலித்து இளித்து புளித்த கதை காட்சிகள் . சினிமா சினிமா சினிமா பக்கா சினிமாத்தனமான  சினிமா . 

இந்த மண்ணுக்கு பிழைக்க வருபவர்கள் எப்படி இந்த மக்களின் அறியாமை மற்றும் கள்ளங்கபடமற்ற தன்மை இவற்றை இங்கே கிடைக்கும் துரோகிகள் , அற்பர்கள் துணை கொண்டு பயன்படுத்தி நம்மை ஏய்க்கிறார்கள் என்று சொல்லும் விதத்தை பாராட்டலாம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *