அறிமுக நாயகன் ஆதிக்பாபு நடிக்கும் ‘குற்றம் புரிந்தால்’!

யுவிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க,  அமராவதி பிலிம்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சுகந்தி ஆறுமுகம் தயாரிக்கும் படம் ‘குற்றம் புரிந்தால்’.
 
 ஹீரோவாக ஆதிக்பாபு அறிமுகமாகிறார். ஹீரோயினாக அர்ச்சனா அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘நாடோடிகள்’ அபினயா,
 
எம்.எஸ்.பாஸ்கர், ராம்ஸ், நிஷாந்த், அருள் டி.சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கே.எஸ்.மனோஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, கபிலன், கார்த்திக் நேத்தா ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.
 
எஸ்.பி.அஹமது படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டிஸ்னி இயக்குகிறார்.
 
படம் குறித்து இயக்குநர் டிஸ்னி கூறுகையில், “யாரென்றே தெரியாத நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்ட பிறகு,
 
மன உளைச்சளால் விரக்தியடைந்த ஒருவர் தன் கைகளில் நீதியை எடுக்கிறான். அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல், 
 
அவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்க காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறி வைக்கிறான்.
அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் கலந்து சொல்லியிருக்கிறேன்.” என்றார்.
 
 படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டிருக்கிறது. முழு படப்பிடிப்பும் முடிவடைந்து ,
 
தற்போது பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளோம்” என்கிறார். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *