இளையராஜா இசை அமைக்கும் ஆங்கிலப் படம்

love-3

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய தமிழர் ஜூலியன் பிரகாஷ் . இவர் தயாரித்து இயக்கி, படத் தொகுப்பு செய்து பாடல்கள் எழுதி இயக்கி இருக்கும் ஆங்கிலப் படம் Love and Love Only .

இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார் . இளையராஜா இசை அமைக்கும் முதல் ஆங்கிலப் படம் இதுவே 

இதற்கான பத்தீர்க்கையாளர் சந்திப்பில் படத்தில் சில் காட்சிகளையும் அவற்றுக்கு இளையராஜா பின்னணி இசை அமைக்கும் காட்சியையும் போட்டுக் காட்டினார்கள் .
“இசைக்கு மொழி இல்லை . எங்கே இருந்தாலும் இசை இசைதான் . எனக்கு ஆங்கிலப் படம் தமிழ்ப்படம் எல்லாம் ஒன்றுதான் .” என்று இளையராஜா பேசி இருப்பதையும் காட்டினார்கள் 
ஜூலியன் பிரகாஷ் பேசும்போது
love-1
” இது ஆஸ்திரேலியாவில் ஒரு  வணிக அங்காடியில் வேலை பார்க்கும் ஆஸ்திரேலியப் பெண்ணுக்கும்
இந்தியாவில் இருந்து அங்கே படிக்கப் போயிருக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையேயான கலப்புக் கலாச்சாரக்  காதல் பற்றிய படம் இது . 
இந்தப் படம் ஆன் லைனில் மட்டுமே வெளிவரும் .
இதை முடிவு செய்து கொண்டு நான் ராஜா  சாரிடம் இசைக்கு போனபோது அவர் ‘தியேட்டரிலும் ரிலீஸ் பண்ணு’ என்றார் . நானும் அப்படியே யோசித்தேன் .
பிறகு அவரே ‘ நான் சொன்னதை விடு. நீ ஒரு புது வழியில் முயல்கிறாய் . உன் விருப்பபடியே செய் என்று கூறி விட்டார் . 
காதலும் இசையும் பிடிக்கும் எல்லாருக்கும் இந்தப் படம் பிடிக்கும் . 
love-2
 படம் ஆங்கிலத்தில்  இருக்கும் . இனிய பாடல்களும் உண்டு  படத்தின் பாடல்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழ் படப் பாடல்கள் பாணியில் இருக்கும் ” என்றார் . 
BOFTA உரிமையாளரான தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது ” இந்தப் படத்தை கரிகாலன் எனக்கு அனுப்பி இருந்தார் .
பார்த்த உடன் ரொம்ப பிடித்து இருந்தது . நானே அவரை வர சொல்லி தேவையான உதவிகள் செய்தேன் ” என்றார் 
For more details 
http://www.loveandloveonly.movie/

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *