மொட்ட சிவா கெட்ட சிவா @ விமர்சனம்

motta 1

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் பி சவுத்ரி தயாரிக்க, ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ராணி, கோவை சரளா ஆகியோர் நடிக்க .

சிங்கம் புலி படத்தை இயக்கிய சாய் ரமணி திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா .இவன் ரசிகனுக்கு எப்படிப்பட்ட சிவா ?  பார்க்கலாம் .

வடக்கத்தி தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சரை (வி டி வி கணேஷ்) காப்பாற்றி ,

motta 6

அவர்  மூலம் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டு வருகிறார் அசிஸ்டன்ட் போலீஸ் கமிஷனர் சிவா (ராகவா லாரன்ஸ் )

ஒரு  போன் காலில் அமைச்சர் உட்பட யாரை வேண்டுமானாலும் பதவியை விட்டுத் தூக்கும் சர்வ வல்லமை வாய்ந்த, 

பணக்கார  அரசியல்வாதி தாதாவான ஜி.கே.(அஸ்வத் தோஸ்ரானா) என்பவனின் கொடூரமான சட்ட விரோத செயல்கள் அனைத்துக்கும் துணை போகிறார் சிவா .

motta 5

கமிஷனரான கிருபாகரனை (சத்யராஜ்) வெறுப்பேற்ற வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம். காரணம் ஒரு பிளாஷ் பேக்கில் சொல்லப்படுகிறது .

இதற்கிடையிலும்  ஒரு பேச்சு கேட்பு மாற்றுத் திறனாளிப் பெண்ணின் மீது சிவாவுக்கு பாசம் வருகிறது . அந்தப் பெண்ணுக்கு ஜே.கே வின் ஆட்கள் உட்பட யார் மூலம் ஆபத்து வந்தாலும் உதவுகிறார் சிவா

சிவாவுக்கும் சன் டிவி ரிப்போர்ட்டர் ஜானுவுக்கும் (நிக்கி கல்ராணி) காதல் வருகிறது .

motta 4

இந்த நிலையில் ஜே கே வின் மகனான கொடூர காமுகன் (வம்சி கிருஷ்ணா)  ஐ டி நிறுவனத்தில் வேலை முடித்து வரும் ஓர் இளம் பெண்ணை கடத்திச் சென்று கற்பழிக்க முயல,

அதன் விளைவாக சிவாவுக்கு பலத்த அதிர்ச்சியான ஓர் சம்பவம் நிகழ்கிறது . ஜே கே வுக்கு எதிராக மொட்டை அடித்துக் கொண்டு சிவாவும் கிருபாகரனும் களம் இறங்குகின்றனர் .

ஜே கே தனது சகல அஸ்திரங்களையும் பிரயோகிக்க அப்புறம் என்ன ஆனது என்பதே இந்த மொட்ட சிவா கெட்ட சிவா .

motta 3

சுத்தமான ஏ சி தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்தாலும் டஸ்ட் அலர்ஜி  உள்ளவர்களுக்கு தும்மல் வரலாம் .

அந்த அளவுக்கு முழுக்க முழுக்க புழுதி பறக்கும் கமர்ஷியல் படமாக இதை எடுத்துள்ளார்  இயக்குனர் சாய் ரமணி . ஒரு காட்சியில் ராகவா லாரன்ஸ் தானே சொல்கிற மாதிரி தரை லோக்கல் படம் இது .

வழக்கமாக அப்பாவியான பயப்படும் நபராக,  படங்களில் அறிமுகமாகி  ஒரு நிலையில் பேய் அல்லது பிசாசு காரணமாக சக்தி உள்ள ஹீரோவாக மாறுவார் ராகவா லாரன்ஸ்

motta 8

அப்படி இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே லாரன்ஸுக்கு முதன் முதலாக முழு ஹீரோ பில்ட் அப் கொடுத்து இறக்கி விடுகிறார் சாய் ரமணி .

லாரன்ஸும் வழக்கம் போல பிரம்மாதமாக ஆடுகிறார் . ரஜினி ஸ்டைலில் கிம்மிக்ஸ் கூட்டி  கண்ணாடி  சுழற்றுகிறார் சண்டைக் காட்சிகளில் இதுவரை இல்லாத வேகம் மற்றும் அதிரடி . சூப்பர்

அம்ரேஷ் இசையில் பாடல்கள் கமர்ஷியல் தன்மையோடு அமைந்து இருக்கிறது.  எல்லா பாடல்களுமே ஹிட்   பின்னணி இசையும் சிறப்பு .

motta 7

பாராட்டுக்கள் . அடுத்தடுத்து நிறைய படங்கள் வரும்  வாய்ப்பு உண்டு அம்ரேஷுக்கு. வாழ்த்துகள் !

சர்வேஸ் முராரியின் ஒளிப்பதிவில் ஃபிரேம்கள்  அழகாக இருக்கிறது.  சிறுத்தை கே கணேஷின் சண்டைப் பயிற்சி அசத்தல் .

ஐ டி ஊழியர பெண்ணை ஜே கே வின் மகன் கடத்தும் பகுதியில் வரும் திருப்பம் சபாஷ் . இது போல சில இடங்களில் திரைக்கதை கவனிக்க வைக்கிறது .

Actress Nikki Galrani Hot in Motta Siva Ketta Siva Movie Stills

நிக்கி கல்ராணி கவர்ச்சிக் குத்தகை எடுத்து இருக்கிறார் . ஒரு பாட்டுக்கு ராய் லக்ஷ்மி ஆடுகிறார் .

கோவை சரளா, சதீஷ், மயில் சாமி, மகாநதி ஷங்கர் , நான் கடவுள் ராஜேந்திரன் என்று ஒரு காமெடி பட்டாளமே படத்தில் இருக்கிறது .

வில்லனாக அஸ்வத் தோஸ்ரானா மிரட்டுகிறார்

குடி இருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற ஆடலுடன் பாடலை… ” பாட்டை ரீமிக்ஸ் செய்து இருக்கிறார்கள் .

motta 9

லாஜிக் , யதார்த்தம் பற்றி பேசுகிற படம் இல்லை இது . ஆனாலும் மொத்தமாகவே கொஞ்சம் லாஜிக்கைக் கொண்டு வந்திருக்கலாம் .

சிவாவுக்கும் கிருபாகரனுக்கும் இடையேயான பிரச்னைக்கான காரணம் வித்தியாசமாக உள்ளது . ஆனால் அது ஹீரோ மெட்டீரியல் இல்லையே .

இன்னும் சொல்லப் போனால் படம் முழுக்க ஐ  ஹேட் போலீஸ் என்று சொல்லும் வில்லனுக்குதானே அது ரொம்ப பொருந்தும் ?

மொத்தத்தில் மொட்ட சிவா கெட்ட சிவா ….  லாஜிக் இல்ல மேஜிக் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *