மனுஷனா நீ @ விமர்சனம்

ஹெச் 3 சினிமாஸ்  தயாரிக்க கஸ்ஸாலி , அனு கிருஷ்ணா  மனிஷா கவுர், சுப்பு பஞ்சு , காதல் சுகுமார் நெல்லை சிவா நடிக்க,  கஸ்ஸாலி இசை அமைத்து எழுதி இயக்கி இருக்கும் படம் மனுஷனா நீ ?

மருத்துவத்தை வியாபாரமாக்கி , கோடி கோடியாக பணம் சம்பாதிக்க விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள் அதற்காக பறவைகள் , மிருகங்கள் , மட்டுமல்லாது ஏழை நாடுகளில் வாழும் மக்களையும் நேரடியாக ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது உண்டு . சில  ஏழை நாடுகளில் நோய்களுக்கு மருந்து போல  பலருக்கும் கொடுத்து சோதனை செய்வது உண்டு . அதனால்  அம்மக்கள் பாதிக்கப் படுவதும்  உண்டு . 
 
அந்த வகையில் பணக்கார மனிதர்களின் ஆயுளை அவர்களது இன்றைய வயதில் இருந்து இன்னொரு நூறு வருடம் கூட்டி அதன் மூலம் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்க முயல்கின்றன  அந்த பன்னாட்டு நிறுவனங்கள் . 
 
அதற்கு அடிமையாகும் நம்ம ஊரு டாக்டர் ஒருவர் ( கஸ்ஸாலி ) மூலம்  ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கை  பாதிப்புக்கு உள்ளாகிறது . காரணம் காதலன் பெரும் அபாய நோய்க்கு ஆளாகிறான் . அவன் பிழைத்தானா ? அந்த காதல் பிழைத்ததா ?  டாக்டர் என்ன ஆனார் ? என்பதே இந்த மனுஷனா நீ ?
 
வித்தியாசமான ஆனால் அவசியமான மெடிக்கல் கிரைம் பற்றி பேசுகிறது படம் . 
 
மற்றபடி படமாக திரைக்கதை, இயக்கம், தொழில் நுட்பம் , நடிக நடிகையரிடம் வேலை வாங்குதல்  இதெல்லாம் சிறப்பாக ஒரு படத்துக்கு தேவை . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *