தர்ட் ஐ கிரியேஷன் சார்பில் எம் டி விஜய் தயாரிக்க தமிழ்த்தாய் கலைக்கூடம் சார்பில் ராஜலிங்கம் வெளியிட,
ரிஷி ரித்விக், ஆஷா பார்த்தலோம் நடிப்பில் எம் டி ஆனந்த் இயக்கி இருக்கும் படம் மரிஜுவானா. (கஞ்சாவின் அறிவியல் பெயர் இது).
படம் தரமான ஒரிஜினல் சரக்கா? இல்லை டுபாக்கூரா ? பார்க்கலாம்.
அமைச்சர் மகன், நர்ஸ் , ஆண்கள் விடுதி வார்டன் என்று பலரும் சைக்கோ ஒருவனால் கொல்லப்படுகிறார்கள் .
குற்றவாளியைக் கண்டு பிடிக்க நியமிக்கப்படும் காவல் அதிகாரி(ரிஷி) மிகவும் கோபக்காரர். சட்டத்தின் வழியே குற்றவாளி தப்பி விடுவான் என்று தோன்றினால் போட்டுத் தள்ளி விடுவார்.
கோபத்தில் அவரிடம் இருந்து காதலியான ஒரு பெண் போலீஸ் அதிகாரி(ஆஷா பார்த்தலோம் )மீண்டும் சேர்ந்த நிலையில் சைக்கோவால் கொல்லப் படுகிறார் .
சைக்கோ நாயகனிடம் போனில் முடிந்தால் என்னைப் பிடி என்று சவால் விடுகிறான். நாயகனால் பிடிக்க முடிந்ததா? சைக்கோவின் பின்னணி என்ன என்பதுதான் இந்த மரிஜுவானா.
கஞ்சா போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆகிறவர்கள் ஒரு நிலையில் மிருகத்தனம் வன்மம் ஏறி என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று சொல்ல முயன்று இருக்கிறார்கள் .
பின் புலம் , சக நடிகர்கள் தெரிவு எல்லாம் சிறப்பாக அமைந்து இருக்கின்றன
நாயகனாக வரும் ரிஷி ரித்விக், உயரம் , நடை உடை பாவனை என்று கேரக்டருக்கு பொருந்துகிறார். ஆனால் பேசும்போதுதான் இடிக்கிறது. வார்த்தைகளைக் கடித்தபடி பேசுகிறார் .
நாயகி ஆஷாவுக்கு வேலை கம்மி . கம்மி வேலைக்குள் ஒரு கவர்ச்சிப் பாடலும் உண்டு . முத்தக் காட்சியும் உண்டு
படத்தில் சைக்கோ வில்லனாக வருகிறவர் பொருத்தம். மதன் பிரகாஷ் குப்தாவின் கிராபிக்சும் அதற்கு உதவுகிறது.
கார்த்திக் குருவின் பின்னணி இசையும் சரணின் சண்டைக் காட்சிகளும் ஒகே ரகம்.
திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம்.
இப்போதே மக்கள் திரையரங்குக்கு வர யோசிக்கும் நிலையில் இன்னும் பயமுறுத்தும் அந்த ஒரு காட்சி தேவையா?
எனினும் சைக்கோவை உணர வைக்கிறது மரிஜுவானா .