இயக்குனராகும் தயாரிப்பாளர் சி வி குமாரின் ‘மாயவன்’

c v kumar 2

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் சி.வி.குமார் . 

இது வரை 13 படங்கள் தயாரித்து , அவற்றின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் , நலன் குமார சாமி உட்பட,

 11 இயக்குனர்களை அறிமுகப்படுத்தி உள்ள சி.வி.குமார்( கார்த்திக் சுப்புராஜ் , நலன் குமாரசாமி இருவரும் தலா இரண்டு படங்களை இவருககாக இயக்கி உள்ளனர் )……

இப்போது இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார் . 

c v kumar 4

சந்தீப் கிஷன் , லாவண்யா  திரிபாதி இணையராக நடிக்க , டேனியல் பாலாஜி  , இந்தி நடிகர் ஜாக்கி  ஷெராஃப் ஆகியோர் வில்லனாக நடிக்க 

ஸ்டுடியோ கிரீன்சி ஞானவேல்வி ராஜாவுடன் சேர்ந்து தனது திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி வி குமார்  குமார் தயாரித்து இயக்கும் இந்தப் படத்தின் பெயர் மாயவன் . 

தான் இயக்குனரான விதத்தை இயல்பாக சொல்கிறார் சி வி குமார் .

c v kumar 5

” எனக்குள் தோன்றிய ஒரு கதையை .இயக்குனர் நலன்  குமாரசாமியிடம் சொல்லி அதை எழுதச் சொன்னேன் . எழுதி வந்ததும்  அவரையே இயக்கச்   சொல்லலாம் என்று முடிவு செய்து  இருந்தேன். 

அவர் எழுதிக் கொடுத்த போது,  அவரோடு சேர்ந்து திரைக்கதை எழுதினேன் 

எனது ஆர்வத்தைப் பார்த்த நலன் குமாரசாமி, ‘  நீங்களே இதை டைரக்ட் பண்ணுங்களேன்’ என்றார் .   நான் மறுத்தேன் .அவர் வற்புறுத்தினர் .  

என்னை சம்மதிக்க வைத்ததோடு மட்டும் அல்லாமல் , நான் இயக்குவதாக முடிவானதும் மேலும் மெருகூட்டி  இன்னொரு முறை எழுதிக் கொடுத்தார் .

c v kumar 6

படத்தை ஆரம்பித்தேன். தயாரிப்பில் ஞானவேல்ன்னு ராஜாவும் வந்து இணைந்தார்.   இன்னும்சி ல நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விடும் ” என்கிறார் . 

“மாயவன் என்ன மாதிரியான கதை ?”

“சீரியல் கில்லரை துப்பறிந்து கண்டு பிடிக்கும் மர்டர் மிஸ்டரி படம் . ஹீரோ ஒரு போலீஸ் அதிகாரி, ஹீரோயின் சைக்யாட்ரிக் டாக்டர் .” 

“தயாரிப்பாளராக இருந்து புரடியூசர் ஆகி விட்ட நிலையில், இனி நீங்கள் தயாரிக்க இருக்கும் படங்கள் பற்றிய உங்கப் பார்வை மாறுமா ?” என்றேன் 

c v kumar 7

“நிச்சயமாக மாறும் சார் . இதுவரை டைரக்டர்கிட்ட ‘முப்பது நாள்ல படத்தை முடிக்கணும் . நாப்பது நாள்ல முடிக்கணும்’னு கட் அண்ட் ரைட்டா சொல்லுவேன் . இப்பதான்  அதெல்லாம்  எவ்வளவு கஷ்டம்னு புரியுது .

அண்மையில்  ஒரு புது இயக்குனர் ஒரு கதையை சொல்லி ‘முப்பது நாள்ல முடிப்பே’ன்னு  சொன்னார் . ‘முப்பது நாள்ல நல்லபடியா  எடுத்து முடிக்க முடியாது .

மீறி எடுத்தா  நல்லா வராது’ன்னு சொல்லிட்டேன் ” என்கிறார் டைரக்டராய் லட்சணமாய் .

“டைரக்ஷனை தொடர்வீர்களா ?” . என்றால்

c v kumar 1

“ஆறு படம் அடுத்தடுத்து தயாரிக்க முடிவு பண்ணி இருக்கேன் . டைரக்ஷன்னு  வந்ததால அதுக்கு எல்லாம் நேரம் ஒதுக்க முடியல .

இந்த படம் ஓடினாதான் தொடர்ந்து டைரக்ஷன் செய்வேன்.  ” என்கிறார் , தயாரிப்பாளராய் லட்சணமாய் . 

முதல் படத்துக்கு பொருத்தமாதான் பேரு வச்ச்சிருக்கறாரு….’ மாயவன்’

 

 

 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *