மின் பிம்பங்கள் வழங்கும் ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ மேடை நாடகம்!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கைவண்ணத்தில் ‘கையளவு மனசு’, ‘ஜன்னல்’, ‘ரயில் சிநேகம்’,

மற்றும் பிரமிக்க வைத்த  முதல் தமிழ் மர்மத் தொடரான ‘மர்ம தேசம்’, நகைச்சுவையில் தனி முத்திரை பதித்த ‘ரமணி Vs.ரமணி’, ‘வீட்டுக்கு வீடு லூட்டி’

– போன்ற தொடர்களைப் படைத்த நிறுவனம் ‘மின் பிம்பங்கள்’.

இப்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த முறை தொலைக்காட்சித் தொடராக இல்லாமல் ஒரு மேடை நாடகத்தைத் தயாரித்திருக்கிறது.

இயக்குநர் சிகரத்திற்கு மிகவும் பிடித்தமான படைப்பு உலகமான மேடை நாடக உலகத்தை மின் பிம்பங்களும் தொட்டிருக்கிறது.இந்த முதல் நாடகத்தை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மருமகளும், மின் பிம்பங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான கீதா கைலாசம் எழுதி, இயக்கியிருக்கிறார்.

கீதா கைலாசம் எழுதி, இயக்கும் முதல் நாடகம் இதுவாகும்.

‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ – இதுதான் இந்த நாடகத்தின் தலைப்பு.

மேகா ராஜன், கணேஷ், ஹரிநாத், பத்மா, வெற்றி, அக்னிதா, நாகராஜன், கீதா, விஷ்ணு பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

நாயகியான லதாவால் தன் மனதில் தோன்றும், பயம், பரிதாபம், வருத்தம், கோபம் போன்ற உணர்வுகளை நினைத்த மாத்திரத்தில் நினைப்பவரிடம் சொல்ல முடிவதில்லை. இந்தச் சூழலில் திடீரென ‘ஒரு சில; பல நிமிடங்கள்’ அது அவளுக்குச் சாத்தியமானால்… லதாவிற்கு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்…?

அந்த மகிழ்ச்சியைப் பற்றியதுதான் இந்த நாடகம்.

முழு நீள நகைச்சுவையுடன், நிறைய சிந்திக்கவும் வைக்கக் கூடிய வகையில் இந்த ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ நாடகம் உருவாகியிருக்கிறது.

இந்த நாடகத்தின் அரங்கேற்றம் வரும் ஏப்ரல் 20-ம் தேதியன்று மாலை 6.45 மணிக்கு ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடைபெற இருக்கிறது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *