எலியும் எஸ் ஜே சூர்யாவும் — மான்ஸ்டர்

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில்  நெல்சன் இயக்கி இருக்கும்  மான்ஸ்டர் படத்தின்  பாடல் வெளியீட்டு விழா !

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் வசனகர்த்தா ஷங்கர் , “இப்படத்தில், எழுத்தில் நான் இருந்திருக்கிறேன். பாடலாசிரியர் மற்றும் எழுத்து இரண்டிலும் என் பெயர் வந்ததற்கு நன்றி. இப்படம் எனக்கு இரண்டாவது படம். நெல்சன் என்னுடைய மாணவனாக இருந்தாலும் அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். நெல்சன் இயக்கத்தில் கதாநாயகி பாதுகாப்பாக இருப்பார்கள். கதையை எப்படி அழகுப்படுத்துவதை எஸ்.ஜே.சூர்யாவிடம் கற்றுக் கொண்டேன். அனைவரிடமும் ஆலோசனை கேட்பார். தயாரிப்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்று பிரபுவிடம்  தெரிந்து கொண்டேன்” என்றார்.

நடன இயக்குநர் சாபு ஜோசப் பேசும்போது,’‘ஒரு நாள் கூத்து’ படத்தில் பணியாற்றிய குழுவுடன் இப்படத்திலும் பணியாற்றினோம். எலியை வைத்து கதையை கூறும்போது ஆர்வமாக இருந்தது. எலி மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து வரும் காட்சிகளில் தொழில்நுட்பத்தில் சவாலாக இருந்தது. இந்த காட்சிகள் நன்றாக வருவதற்கு அனைவரின் ஆலோசனையும் இருந்தது” என்றார்.

DOP கோகுல் விநாயக் பேசும்போது,”இக்கதையை கொண்டு வந்த இயக்குநருக்கு பாராட்டுக்கள். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு இப்படத்திற்கு பலம்” என்றார்.

சண்டை பயிற்சி சுதேஷ் பேசும்போது,”இதுதான் எனது முதல் படம். நான் பணியாற்ற வரும்போதே இயக்குநர் அனைத்தையும் தயாராக வைத்திருந்தார்” என்றார்.

நடன இயக்குநர் பேசும்போது,”குழந்தைகளை வைத்து வேலை வாங்க வேண்டும். அதுவும் அவர்களை எலியாக பாவித்து நடனம் அமைக்க வேண்டும் என்பது சவாலாக இருந்தது” என்றார்.

நடிகர் அனில் குமார் பேசும்போது, “சினிமாவில் ஒரு நிலைக்கு வரவேண்டுமானால் அதற்கு பல தடைகள், சவால்கள், விடாமுயற்சி இல்லாமல் வரமுடியாது. ஆனால், நான் எதுவுமே செய்யாமல் இந்த வாய்ப்புக் கொடுத்த நெல்சனுக்கு நன்றி. ஒவ்வொரு காட்சியிலும் என்னை நன்றாக காட்டியதற்கு விநாயக்கிற்கு நன்றி. எனக்கு நடிக்க கற்றுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி “என்றார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது,”இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அடுத்த படத்திலும் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுவோம். எஸ்.ஜே.சூர்யாவின் லட்சியம் தான் அவரை இன்றுவரை வெற்றியாளராக வைத்திருக்கிறது “என்றார்.

பிரியா பவானி சங்கர் பேசும்போது,”இந்த படத்தில் கிடைத்த அனுபவம், எஸ்.ஜே.சூர்யா நாயகன் என்றதும் அவருடன் எனக்கு பொருத்தமாக இருக்குமா? என்று தயங்கினேன். ஆனால் இயக்குநர் முதலில் கதை கேட்டு முடிவு செய்யுங்கள் என்று கூறினார். சங்கர் கூறியதுபோல் என்னை பாதுகாப்பாக வைத்திருந்தார்.

படக்குழுவினருடன் ஜாலியாக பணியாற்றினேன். ஜஸ்டினின் இசையில் எனக்கு ஒரு பாடல் அமைந்ததில் மகிழ்ச்சி “என்றார்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது,”பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-உடன் இது என்னுடைய இரண்டாவது படம். என் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து இப்படத்தை தயாரித்ததற்கு பிரகாஷ் பாபு, பிரபு, வெங்கடேசன் ஆகியோருக்கு நன்றி. நான் எப்போதும் வீட்டுப்பாடம் செய்துவிட்டு தான் பணிக்கு வருவேன். ஆனால் இப்படத்தில் அதெல்லாம் போதவில்லை.

இப்படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா, வில்லன் எலி என்ற புள்ளியில்தான் ஆரம்பமாகும். அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை எலி பிடிக்க ஆள் வைத்திருக்கிறார்கள். மனித இனத்திற்கு இணையாக இருக்கும் விலங்கு எலிதான். மனிதனை அழிக்கக்கூடிய ஆள் பலத்தோடு இருப்பது எலிதான்.எலிக்கு கோயிலே இருக்கிறது.
எஸ்.ஜே.சூர்யாவிடம் கதை கூறியதும் அவர் ஒரு காட்சியை நடித்துக் காண்பித்தார். காலையிலிருந்து மாலை வரை தனியாகவே நடிப்பார் எஸ்.ஜே.சூர்யா.

பிரியா பவானி ஷங்கர் இக்கதையை திரையில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன் என்றார். எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், கருணாகரன் ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் கலாட்டா செய்துக் கொண்டும், போட்டிபோட்டுக் கொண்டும் நடிப்பார்கள். இக்கதையின் கருவை கூறியதும் எழுத்தாளர் ஷங்கர் தாஸ் நம்பவில்லை. ஆனால், ஒவ்வொரு காட்சியாக எடுக்க எடுக்க என்னைவிட ஆர்வமாக முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினார்.

சிவசங்கர் நானே போதும் என்று கூறினாலும் அவர் காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக கடினமுயற்சியை மேற்கொண்டார். கோகுலுக்கும் எனக்கும் நெருக்கமான உறவு. அதேபோல், உண்மையான எலியை வைத்துதான் படப்பிடிப்பு நடத்தினோம். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் கிடையாது.

இதுவரை யாரும் பார்த்திராத எஸ்.ஜே.சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம். எங்கு சென்றாலும் பிரியா பவானி ஷங்கருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் பிரியாவின் கதாபாத்திரத்தை நன்றாக அமைத்திருக்கிறோம். ஐந்து பாடல்களும் ரசிக்கும்படியாகவும், வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று கவனத்துடன் உழைத்திருக்கிறோம். எலியுடன் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடலை எஸ்.ஜே.சூர்யாவே பாடியிருக்கிறார்.

பிரபாகரன் சினிமாவை தவிர்த்து வேறு எதையும் பேசி நான் பார்த்ததில்லை. ஒவ்வொரு காட்சியும் தரமாக வரவேண்டும் என்று எப்போதும் கூறுவார். எஸ்.ஆர்.பிரபு தேவையில்லாத அடையாளங்களை விரும்பமாட்டார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தேவையான விஷயங்களை முன்பே கூறிவிடுவார். இப்படம் நன்றாக வருவதற்கு முக்கியகாரணம் என் நண்பர்கள் தான். அதில் கமல்தான் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.

என் வீட்டில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவம் தான் இப்படம். மூன்று நாட்கள் ஒரு எலி என்னைத் தூங்க விடாமல் செய்தது. அதேபோல் அனுபவம் பெரும்பாலானோருக்கு நடந்திருக்கும். அந்த சம்பங்களின் தொகுப்பே இப்படம் என்றார்.

எஸ்.ஜே.சூர்யா பேசும்போது,”இந்த படத்தில் எனக்கு மிகப் பெரிய ஆசிர்வாதம் இருக்கிறது. எலி என்பது பிள்ளையார் வாகனம். அதிலிருந்தே எனக்கு ஆசிர்வாதம் ஆரம்பித்தது. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தான் இப்படத்தின் கதாநாயகன். மூன்று தயாரிப்பாளர்களும் கதையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அனைத்தையும் தரமானதாக வரவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் அவர்களின் படைப்புகள் வெளியாகும்.

ஒரு நாள் எஸ்.ஆர்.பிரபு,  ஒரு கதை இருக்கிறது கேட்கிறீர்களா? என்றார். கதை சொல்லவந்த நெல்சன், நீங்கள் ஒரு எலி என்று ஆரம்பித்ததும் எப்படி இருக்குமோ? என்று நினைத்தேன். கதையைக் கேட்டதும் பிடித்திருந்தது. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் காலை முதல் நள்ளிரவு வரை அயராமல் சுறுசுறுப்புடன் இருப்பார்.
குழந்தைகளுக்கும்… செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். ‘அந்தி மாலை’ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.

சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமாக அனுபவமாக இருந்தது.
இயக்குநர் ஒவ்வொரு காட்சி கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறிவார்.

நான்  நடித்து முதல் முறையாக ‘யு’ சான்றிதழ் பெற்ற படம் ‘மான்ஸ்டர்’.வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதேபோல் என் வாழ்க்கையை சீராக அமைத்து கொள்வேன்.

தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் நுணுக்கமாக பணியாற்றியிருக்கிறார்கள். 17 நாட்களுக்குள் இப்படத்தை வெளியாக முயற்சி எடுத்திருக்கிறார்கள். ‘மாயா‘, ‘மானகரம்’ , ‘மான்ஸ்டர்‘, போன்ற தரமான படத்தை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கு வாழ்த்துக்கள் “என்றார்.

எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,”இந்நிறுவனம் தொடங்கும்போது தரமான படங்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். தீபாவளி பண்டிகைக்கு எங்கள் பெற்றோர் புது உடைகள் முன்பே வாங்கி வைத்திருந்தார்கள். நாங்கள் கேட்டதும், இருக்கு ஆனால் தீபாவளியன்று குளித்ததும் தான் தருவோம் என்றனர். குளித்ததும் ஆடை உடுத்த எடுத்த போது ஜீன்ஸ் பேண்டை எலி கடித்துக் கிழிந்திருந்தது. எலி மீது கோபம் அன்று ஆரம்பித்தது என்றார்.
யாருக்கும் தீங்கு செய்யாத ஒருவனுக்கு எலி எப்படி வில்லனாக வருகிறது? இறுதியில் அதை அவன் கொன்றானா? என்பதை இப்படம் மூலம் கூறியிருக்கிறோம்.

இக்கதையை இயக்குநர் கூறியதும், மான்ஸ்டராக பார்க்கக்கூடிய எஸ்.ஜே.சூர்யாவிற்கு எலி மான்ஸ்டராக இருந்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்தோம். நம் நாட்டில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்தான். அப்படியொரு கதாபாத்திரத்திற்கு எஸ்.ஜே.சூர்யா பொருத்தமாக இருப்பார் என்று முடிவெடுத்தோம். அவரும் அவருடைய கதாபாத்திரத்தைச் சிறப்பாக செய்திருக்கிறார்.

படம் வருகிற மே 17ம் தேதி வெளியாகிறது” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *