“பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..?” – படைப்பாளிகளுக்கு நடிகர் சூர்யா கேள்வி

வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்கு குறும்படங்கள் சரியான விசிட்டிங் கார்டு என்பார்கள்.
 
அந்தவிதமாக   மூவி பஃப் ஃபர்ஸ்ட் கிளாப் சீசன்-2  குறும்பட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் அறிவித்தது. 
இதற்கான  நிகழ்வில் நடிகர் சூர்யா, 2D  என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன், மூவி பஃப் CEO செந்தில்குமார்,
 
க்யூப் சினிமா டெக்னாலஜி நிறுவனத்தின் CEO அரவிந்த் ரங்கநாதன், Knock ஸ்டுடியோஸ் நிர்வாகி கல்யாணம், எடிட்டர் ரூபன்,
சென்சார் அதிகாரி லீலா மீனாட்சி  உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழையும் பரிசுத் தொகையையும் வழங்கினார்கள்.
 
இந்த குறும்படப் போட்டியில் ‘கல்கி’ என்ற குறும்படத்தை  இயக்கிய விஷ்ணு இடவன் முதல் பரிசான ரூ.3 லட்சத்தை பெற்றார்.
அவருக்கு சூர்யாவின் 2D  நிறுவனத்தில் ஸ்கிரிப்ட் சொல்வதற்கான பொன்னான வாய்ப்பும் கிடைத்துள்ளது…
 
இவருக்கு அடுத்ததாக  ‘கம்பளிப்பூச்சி’ இயக்குனர் வி.ஜி.பாலசுப்ரமணியன் 2 லட்சம் பரிசுத்தொகையும்,
பேரார்வம்’ குறும்படத்திற்காக சாரங் தியாகு ரூ.1 லட்சமும் ,குக்கருக்கு விசில் போடு குறும்படத்தை இயக்கிய ஷ்யாம் சுந்தர்
 
மற்றும் ‘மயிர்’ குறும்படத்தை இயக்கிய யோகி ஆகியோர் தலா ரூ.25 ஆயிரமும்  பரிசுத் தொகை பெற்றார்கள்.
2D  என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன் பேசும்போது, “இப்படி ஒரு நிகழ்வில் எங்களது பங்கும் இருப்பதற்கு மகிழ்ச்சி..
 
நிறைய திறமையாளர்களால் ஆன்லைன் மூலமாக கூட தங்களது திறமையை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.
அப்படிப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியாகத்தான் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. சீசன்-3 இதைவிட பிரமாண்டமாக இருக்கும்” என்றார்.
 
மேலும் இந்த குறும்படங்களைப பார்த்து சரியான நேரத்தில் சென்சார் செய்து சான்றிதழ் தர ஒத்துழைத்த சென்சார் அதிகாரி லீலா மீனாட்சிக்கு, 
தனது நன்றியை தெரிவித்துக்கொண்ட ராஜசேகரன், ” முன்பெல்லாம் ரிலீஸ் தேதியை பிக்ஸ் செய்துவிட்டு குறித்த நேரத்தில் சென்சார் சான்றிதழ் பெறுவது, 
 
கொஞ்சம் கடினமாக இருந்தது.. இப்போது லீலா மீனாட்சி வந்தபிறகு, திரையுலகினர் தைரியமாக
எங்களது ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவிக்க முடிகிறது” என்று  பாராட்டினார். 
 
விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், “ஒரு படம் எடுப்பது .சுலபம்.ஆனால் நல்ல படம் எடுப்பது என்பது  போருக்குப் போவது மாதிரி.  அதையம் தாண்டி கல்ட் படங்கள் எடுப்பது என்பதெல்லாம் பேரதிசயம் மாதிரி.. இந்த விழாவிற்கு வந்திருப்பதை, 
 
 ஏதோ கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வந்தது போல உணர்கிறேன்.

நானெல்லாம் எழுபதுகளின் குழந்தைப்பருவத்தை பார்த்தவன்..ஆனால் இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு அனுபவம் கிடைக்கிறது.
 
‘எந்த ஒரு விஷயம் பண்ணும்போதும், இன்னும்கொஞ்சம் நன்றாக பண்ணியிருக்கலாமோன்னு நினைத்தால், 
அதை அப்போதே உடனே .சரிசெய்து விடவேண்டும்.  எங்கேயும் குறைவந்துவிடக் கூடாது’ என இயக்குனர் பாலா அண்ணன் அடிக்கடி சொல்வார்.
 
அதனால் குறும்படங்கள் என்றாலும் அதில் சிறிய குறைகூட வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் உங்கள் வாழ்நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப்போகிறது.
 
நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ இதுபோன்ற குறும்படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும்.
கம்பளிப்பூச்சி குறும்படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல, அதை பார்த்து ஒரு சில நபர்கள் மனம் திருந்தினாலே அது நமக்கு கிடைத்த வெற்றிதான்.
 
பெற்றோர், பள்ளிக்கூடம், இந்த சமூகம் சொல்லி கேட்காதவர்கள் ‘சினிமா பார்த்து திருந்தினேன்’ என்று சொன்னால் அதுதான் சினிமாவின் பலம்.
இன்று எட்டு கோடி மக்களில் 50 லட்சம் பேர் படம் பார்த்தால் படம் ஹிட்.. 80 லட்சம் பேர் பார்த்தால் அது மெகா ஹிட்.
 
கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அந்தப்படம் பார்த்தவர்கள் மத்தியில் விவசாயிகள் குறித்த பார்வையை மாற்றியிருக்கும் என்பதுதான் சந்தோசம். எது உங்கள் மனதுக்கு நெருக்கமாக அதைச் செய்யுங்கள் ..இந்த மார்க்கெட் ஓப்பனனானது.. இதில் பாலும் விற்கலாம் கள்ளும் விற்கலாம்.
 
இரண்டுமே விலைபோகும்.. ஆனால் எதை விற்கவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்” என்று  கூறினார் சூர்யா.
முன்னதாக ரசிகர்கள் என்.ஜி.கே படம் தீபாவளிக்கு வெளியாகாமல் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து சூர்யாவிடம் கேட்க,
 
“இந்த குறும்படங்களை போல ஒரு வித்தியாசமான முயற்சியாகத்தான் என்.ஜி.கே உருவாகிவருகிறது.
சில நேரங்களில் எங்களையும் மீறி ஒரு விஷயம் நடக்கும்போது நாம் அமைதியாக ஒத்துழைப்பு கொடுத்துதான் ஆகவேண்டும்.
 
உங்களுடைய ஆதங்கம் புரிகிறது.. இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க”  என்று அவர்களை அமைதிப்படுத்தினார் சூர்யா.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *