தணிக்கை குழுவினரிடம் பாராட்டு பெற்ற ‘முந்தல்’

 
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றியுள்ள பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஜெயந்த், ‘முந்தல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
 
சமூக அக்கறைக்கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஹர்வெஸ்ட் மூன் பிக்சர்ஸ் (Harvest Moon Pictures) நிறுவனம் சார்பில் டாக்டர் கே.பாலகுமரன் தயாரித்துள்ளார். அப்பு கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில், 
ஹீரோயினாக முக்‌ஷா நடிக்க, இவர்களுடன் நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், அழகு, மகாநதி சங்கர், போண்டா மணி, வெங்கல் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரிஷா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.
 
புற்று நோயை முற்றிலுமாக குணப்படுத்த கூடிய மருந்துகளை நமது முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டாலும், வியாபார நோக்கில் அதனை சிலர் மறைத்து வைத்துவிட்டனர். அப்படி மறைக்கப்பட்ட ஒரு அபூர்வ மருந்து தயாரிக்க கூடிய பார்முலா எழுதப்பட்ட ஓலைச்சுவடியை தேடி ஹீரோ செல்ல, அதே ஓலைச்சுவடியை தேதி மேலும் பலர் பயணிக்கிறார்கள். மக்களின் நலனுக்காக அந்த ஓலச்சுவடியை ஹீரோ கைப்பற்ற முயற்சித்தாலும், சிலர் அதை வியாபார நோக்கத்திற்காக கைப்பற்ற நினைக்கிறார்கள், இறுதியில் அந்த ஓலைச்சுவடி யார் கைக்கு கிடைத்தது, என்பது தான் இப்படத்தின் கதை.
 
இந்த கதையை வெறும் கண்பனையாக மட்டும் சொல்லாமல், இதற்காக சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்ட இயக்குநர் ஜெயந்த், படத்தில் பல அறிய விஷயங்களை சொல்லியிருக்கிறார். சித்தர்கள் பற்றியும், அவர்களிடம் இருந்த மருத்துவ சக்திகள் பற்றியும் சொல்லியிருப்பவர், அதற்கான ஆதாரங்களோடு சொல்லியிருப்பது தான் தனி சிறப்பு.
 
இப்படி சமூக அக்கறையுடன் கூடிய, இந்த படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழுவினர், படத்திற்கு எந்தவித கட்டும் கொடுக்காமல் ‘யு’ சான்றிதழ் வழங்கியதோடு, படத்தை பாராட்டி இயக்குநர் ஜெயந்துக்கு இனிப்பும் வழங்கியுள்ளனர்.
 
தணிக்கை குழு அதிகாரிகளின் இத்தகைய செயல் மூலம் இயக்குநர் ஜெயந்த் உள்ளிட்ட ‘முந்தல்’ படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்படத்தை ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *