முன்னோடி @ விமர்சனம்

mun 8

ஸ்வஸ்திக் சினிவிஷன் பி.லிட் சார்பில்   சோஹம் அகர்வால்,   எஸ் .பி.டி.ஏ.ராஜசேகர் ஆகியோர் தயாரிக்க, அர்ஜுனா , யாமினி பாஸ்கர், வினு கிருத்திக் , நிரஞ்சன் , சுமன் , சுரேஷ் , பாண்டியன் , ஆகியோர் நடிப்பில்

 எஸ் .பி.டி.ஏ. குமார் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம்  “முன்னோடி” .  ரசனைக்கு முன்னோடியா பார்க்கலாம்

 2 வயதிலேயே தந்தையை இழந்தவன் சத்யா  (ஹரீஷ்).  அப்போது கர்ப்பிணியாக இருக்கும் அம்மாவுக்கு தந்தையின் மரணத்திற்குப்பிறகு  இன்னொரு ஆண் பிள்ளை பிறக்கிறது . 

அம்மாவைக் கஷ்டப்படுத்தியவன் என்ற குழந்தைத்தனமான கோபம் காரணமாகசின்ன வயதில் இருந்தே தம்பிமீது சத்யாவுக்கு ஒரு வெறுப்பு.  

mun 3

தம்பிக்கு பலவீனமான இதயம் .அதிர்ச்சியான செய்திகளையும், சம்பவங்களையும் தாங்கவே முடியாது என்ற நிலை  இதனால் தம்பியை கண்ணும், கருத்துமாய் பாதுகாத்து வருகிறார்அம்மா (சித்தாரா.)

வளர்ந்து பெரியவனான பின்பு மந்திரமூர்த்தி (அர்ஜுனா)  என்னும் ஆளும்கட்சி  மாவட்டச் செயலாளரின் அன்புத் தம்பியாக ஏவல் அடிமையாக  வாழ்கிறான் சத்யா . தம்பியோ  கல்லூரி மாணவன்

இந்த நேரத்தில் தேனுகா என்ற பெண்ணைப்பார்க்கும் சத்யாவுக்கு காதல் வருகிறது . அவளோ தம்பியின் வகுப்புத் தோழி .

தம்பியை பார்க்கப் போகும்சாக்கில் யாமினியை சந்திக்கிறான் சத்யா . அதை தவிர்க்க முடியாமல்தவிக்கிறாள் தேனுகா

mun 2

இந்த நேரத்தில் தொகுதியில்தேர்தல் வர, பொறுப்பேற்கும்தேர்தல் கால சிறப்பு துணை கமிஷனருக்கு (சிஜாய் வர்கீஸ்)  மந்திர மூர்த்தி பற்றி சொல்லப்பட,   வீடு தேடி வந்துஎச்சரிக்க செய்துவிட்டுப் போகிறார்.

 மந்திரமூர்த்தியின் பழைய எதிரி ஒருவன்  ஆட்களை அனுப்பி மந்திரமூர்த்தியைக்கொலை செய்ய முயல்கிறான். ஆனால் வந்தவர்களையே கொலை செய்கிறான் மந்திரமூர்த்தி.

இந்தக் கொலை வழக்கை விசாரிக்கிறார் துணை கமிஷனர்  துப்புக் கிடைக்கவில்லை. வழக்கும் லோக்கல் ஸ்டேஷனில் இருந்துசி.பி.சி.ஐ.டி.க்கு செல்கிறது.

மந்திரமூர்த்தியின் மைத்துனருக்கும் (பாவல்)  சத்யாவுக்கும்  இடையில் ஈகோ . ஹரீஷ்மந்திரமூர்த்தியின் வீட்டில் வளைய வருவது மைத்துனனுக்குப்  பிடிக்கவில்லை. 

சத்யாவை  எப்படியாவது மந்திரமூர்த்தியிடமிருந்து பிரித்துவிடமுயல்கிறான் அவன்

mun 4

மந்திரமூர்த்தியிடம் நல்ல பெயர்எடுக்க நினைக்கும் மைத்துனர்,  மந்திரமூர்த்தியிடம் சொல்லாமலேயே அவருடைய நீண்டநாள் எதிரியை திருநெல்வேலிக்கே தனது கூலிப்படையை அனுப்பி தீர்த்துக்கட்டுகிறான்

தான் காதலிக்கும் தேனுகா  தனதுதம்பியை விரும்புவதாகச் செய்தி வர கோபம் கொள்ளும் சத்யா  தம்பியை கொலை செய்யபோகும்போது காதலியும், தம்பியும் பேசிக் கொள்வதை கேட்க நேரிடுகிறது. 

தன் மீது தம்பி வைத்திருக்கும் உண்மையான பாசத்தை உணரும் சத்யா தம்பியைபுரிந்து கொள்கிறான் அம்மாவுடன் இணக்கமாகிறான் பாசமான, பொறுப்பானஅண்ணனாகிறான்

இந்த நேரத்தில்தான் திடீரென்று  தம்பி கொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்ததுமந்திரமூர்த்தியின் மைத்துனர்தான் என்று நினைக்கும் சத்யா மைத்துனரைக்கொலை செய்ய முயல்கிறான்

அதே நேரம் தன்னைப் பற்றிய ரகசியங்களை போலீஸுக்குபோட்டுக் கொடுப்பது சத்யாதான்  என்று நினைக்கும் மந்திரமூர்த்தி சத்யாவைத்  தீர்த்துக் கட்ட நினைக்கிறார்.

mun 5

அப்புறம் நடந்தது என்ன என்பதே மீதிக் கதை

யாரிடமும் சினிமா கற்காமல் நேரடியாக ஒரு முழுப் படம்எடுத்திருக்கிறார் எஸ்பிடிஏ குமார். வாழ்த்துகள். முதல் பாதியில் இன்னும்விறுவிறுப்பாக காட்சிகளை வைத்திருக்கலாம்.

ஆனால் இடைவேளைக்குப் பிறகு பரவாயில்லை

ஒரு சந்தர்ப்பத்தில் தான் காதலிக்கும் பெண்ணே தன்தம்பியை காதலிக்கிறாள் நினைத்து கையில் கத்தியோடு சத்யா போக ,

அங்கே உண்மைதலை கீழாக இருப்பது கண்டு மாறுவது பாசமலர் காலத்து உத்தி என்றாலும் ஓல்டுஈஸ் கோல்டு

திருநெல்வேலியில் மந்திரமூர்த்தியின் எதிரியை அந்தவிடியற்காலை பொழுதில் ரவுடிகள் போட்டுத் தள்ளும் காட்சியைபடமாக்கியிருக்கும் விதம் அழகு..

mun 6

ஹரீஷுக்கு அழுத்தமான வேடம்.அம்மாவை புரிந்து கொள்ளாமல் பேசுவது.. தம்பியை திட்டுவது.. மந்திரமூர்த்திக்காக எதிலும் அவசரப்படுவது என்று நன்றாக நடித்துள்ளார்

கிளைமாக்ஸில் மந்திரமூர்த்திமீதான பாசத்திலேயே “ஒரு நிமிஷம்ண்ணே” என்று டைம் கேட்டுக் கொண்டே வருவதும், அடி வாங்குவதும்.. கடைசியில், அந்தப் பிரச்சினையை பேசி முடிப்பதும் சிறப்பு . வாழ்த்துகள் ஹரீஷ்.

நீண்ட இடை வெளிக்குப் பிறகுசித்தாரா, அம்மாவாக !   நிறைவாகவே செய்திருக்கிறார். ஹீரோயினாக யாமினிபாஸ்கர்.இன்னும் பயிற்சி தேவை.

டப்பிங் டண்டணக்கா  ஆடுகிறது   நடிப்புக்கு பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லாததால் வந்தகாட்சிகளில் நிறைவைத் தந்திருக்கிறார்.

அர்ஜுனா , சிஜாய் இருவரின் பேச்சில் வழியில் மலையாள நெடி , மகா எரிச்சல் !

mun 9

பாடல் காட்சிகளும், , பாடலும், இசையும்மிகச் சிறப்புதான்..!அந்த கிராபிக்ஸ்பாடல் காட்சி.. சிம்ப்ளி சூப்பர் .நடனம்  அழகுஆனால் பின்னணி இசைதான் வெத்தலைக்கு சுண்ணாம்பு பத்தலகதை 

வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவில்காட்சிகள் மிகஅழகு கோவில் சண்டைகாட்சியையும், திருநெல்வேலி படுகொலை காட்சியையும் படமாக்கிய விதத்திலேயேஇந்த ஒளிப்பதிவாளரின் திறமை பளிச்சிடுகிறது..!

 போலீஸ் அதிகாரிஅவர் ஸ்பாட்டில் கொடுக்கும்  தண்டனைகள் சுவாரஸ்யம்

மந்திர மூர்த்தி என்ற அரசியல்வாதிகேரக்டரில் அர்ஜுனா மிரட்டுகிறார்  கோவிலில் தன்னை தாக்க வந்த எதிரிகளை அவர் பின்னி எடுக்கும் சண்டை அசத்தல்.

படத்தில் வரும் எல்லா சண்டைக் காட்சிகளுமே ஸ்டன்ட் மாஸ்டர்  டேஞ்சர் மணிக்கு பாராட்டுகள். கூலிப்படை காட்சிகள் பதை பதிக்க வைக்கின்றன

mun 1

அதிரடி திருப்பங்கள் என்ற பெயரில் வரும் அனர்த்தங்கள் மற்றும்  காமெடி என்ற பெயரில் கழுத்தைக் கடிக்கும் காட்சிகளுக்கு கத்தரி போட்டிருந்தால் ,

இன்னும் சிறப்பாகஇருந்திருக்கும்.வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் பிரமாதம். பிரபுசங்கரின் இசையும் கேட்கும்படி உள்ளது.

எடுத்த கதையை இன்னும் திருத்தமாக சொல்லி இருந்தால்  அழுத்தமான தடம் பதித்திருக்கலாம்

எனினும் குடும்பப் பாசத்தை முன் வைத்தும், வன்முறை எதிர்ப்பை முன் வைத்தும் இந்தப் படத்தை தயாரித்துஇயக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார். அதற்காகப் பாராட்டுகள்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *