வித்தியாசமான காதல் கதையில் “நானும் சிங்கிள் தான்“

மலேசியாவில் பண்பலை, தொலைக்காட்சி, சினிமா எனப் பலத் துறைகளில் பிரபலமான புன்னகைப் பூ கீதா . அறிந்தும் அறியாமலும், பட்டியல் ஆகிய  படங்களைத்  தயாரித்துள்ளார். தற்போது There Is A Company Production சார்பில் அவர் தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “
 
கதாநாயகனாக தினேஷ் நடித்துள்ளார். நாயகியாக  தீப்தி சதி நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ரமா, ஆதித்யா, கதிர், செல்வா  ஆகியோர் நடித்துள்ளனர்.
 
ஒளிப்பதிவு  – K.ஆனந்தராஜ்
 
இசைப்புயல் A.R.ரகுமானிடம் உதவியாளாராக இருந்த ஹித்தேஷ் மஞ்சுநாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
 
பாடல்கள்  – கபிலன் வைரமுத்து
 
எடிட்டிங் – ஆண்டனி
 
ஸ்டண்ட் –   கனல்கண்ணன், ஆடம் ரிச்சட்ஸ்
 
கலை இயக்குனர் – ஆண்டனி
 
நடனம்  – சின்னி பிரகாஷ், ரேகா சின்னி பிரகாஷ், அபிப்.RK
 
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – r.கோபி
 
டிஜிட்டல் உலகில் இளைஞர்கள் வாழ்வில் எடுக்கும் சில சிக்கலான  முடிவுகளையும், ஃபெமினிசம் தொடர்பான சில விஷயங்களையும் இப்படம் பேசியுள்ளது.   குறிப்பாக இன்று பெண்களுக்கு நடக்கும்  பாலியல் கொடுமைகளைப் மையப்படுத்தி  சில காட்சிகளும் இப்படத்தில்  வைத்துள்ளனர்.
 
வலிமையான ஹீரோயின் கதாபாத்திரம் ஒரு பாலியல் குற்றத்தை எப்படி சாமர்த்தியமாகக் கையாள்கிறார் என்பது  பெண்கள் எவ்வாரு துணிந்து நின்று செயல்பட வேண்டும் என்பதை பறைசாற்றும் விதமாக இருக்கும்   என்கிறது படக் குழு  
 
படம் பற்றி இயக்குனர் r.கோபி கூறியபோது “ஆண்கள் மேல் நம்பிக்கையே இல்லாமல் தன்னால் சிங்கிளாவே வாழ்க்கை முழுவதும் வாழமுடியும் என நினைக்கும் பெண்ணுக்கும், கனவிலும் காதல் கைகூடாமல் சிங்கிளாவே இருக்கும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் இந்த படம்.
 
இவர்களுக்கு எப்படி மொட்ட ராஜேந்திரன்  காதலுக்கு உதவுகிறார், ஹீரோ தன் புத்திசாலித்தனத்தால் காதலில் வெற்றி கொள்கிறாரா? பிடிவாதமாக இருக்கும் ஹீரோயின்  மனதை மாற்றுகிறாரா? இல்லை இவர் மனம் மாறுகிறாரா என்பது தான் கதை. 
 
என்ன தான் நாங்கள் முழுக் கதையையும் கூறினாலும் இது ஒரு கதைதான் இதுவரை சொல்லாத இன்னொரு கதையும் படத்தில் இருக்கிறது அது படம் பார்த்தால்தான் தெரியும்” என்றார் 
 
படம் இம்மாதம் 12 ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *