நாச்சியார் @ விமர்சனம்

இயக்குனர் பாலாவின்  பி ஸ்டுடியோஸ் மற்றும்  EON ஸ்டுடியோஸ் தயாரிக்க,

ஜோதிகா, ஜி வி பிரகாஷ், இவானா, தயாரிப்பாளர் தமிழ்க் குமரன் , மற்றும் ராக் லைன் வெங்கடேஷ் நடிப்பில் பாலா இயக்கி இருக்கும் படம் நாச்சியார் . இந்த நாச்சியார் வீர மங்கையா ?  பேசுவோம் . 

கூலி வேலை செய்யும்  இளம் இளைஞன் ஒருவனுக்கும் ( ஜி வி பிரகாஷ் குமார் )  வீட்டு வேலை செய்யும்  மைனர் பெண் ஒருத்திக்கும் ( அறிமுகம் இவானா)  ஏற்படும் சிநேகம் படுக்கை வரை போகிறது . அவள் கர்ப்பம் ஆகிறாள் . 
 
மைனர் பெண் என்பதால் இது பாலியல் பலாத்காரமாக கருதப்பட்டு கூலிக் காரனை ஜெயிலில்  தள்ளுகிறார்,  நேர்மையான அதிரடியான பெண் போலீஸ் அதிகாரி நாச்சியார் ( ஜோதிகா) 
 
குழந்தை பிறந்த நிலையில் நடத்தப்படும் மரபணு சோதனையில் அது அந்த இளைஞனின் பிள்ளை இல்லை என்பது தெரிகிறது . 
 
எனில் கர்ப்பம் ஆனதற்கு யார் காரணம் ? 
 
யார் நல்லவர் ? யார் தப்பானவர் ?  இந்த பிரச்னையை நாச்சியார் எப்படி தீர்த்தார் என்பதே இந்த படம் . 
கொஞ்சம் வில்லங்கமான கதை . ஆனால் படம் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே முறை தவறி உறவு கொண்ட இருவர்  மீதும்  நமக்கு கோபம் வராமல் பாசம் வருகிறது பாருங்கள் . அங்கே தெரிகிறது பாலாவின் மேக்கிங் . 
 
தமிழ் நாட்டில் சென்னையில் மொழி மத ரீதியாக தமிழர்களின் நிலை என்ன ? மற்ற மொழியினர் மற்றும் இனத்தினர் நிலை என்ன என்பதை பூடகமாக சொல்லும் அந்த சமூக அரசியல் பார்வை சூப்பர் . 
 
நாத்திகரான பாலா , இந்தப் படத்திலும் எல்லா மதங்களையும் மதத்தினரையும்  கடவுள்களையும் ஓட்டுகிறார் .  சிறு பான்மை பெரும்பான்மை மத விசயங்களில் கூட எப்படி நேக்காக உள்ளே புகுந்து கலாய்ப்பது என்பது பாலாவுக்கு கை வந்த கலை ஆகி விட்டது . சபாஷ் . 
 
கடவுள் பற்றி இன்பெக்டர் ராக் லைன் வெங்கடேஷ் பேசும் வசனமும் ஜோர் . 
 
ஜி வி பிரகாஷ்க்கு இது வித்தியாசமான படம் . புது களம் ஒன்று அமைந்துள்ளது . இனியாவது அவர் வித்தியாசமான கேரக்டர்களில் வந்தால் புண்ணியமா போகும் . 
 
ஜோதிகா நடிப்பில் நிறைய செயற்கை இருந்தாலும் கெத்தாக நடித்து விட்டுப் போகிறார் 
அறிமுகம் இவானா மனதை அள்ளுகிறார் . குறை சொல்ல முடியாத தேர்வு மற்றும் நடிப்பு .
 
மேக்கிங்கில் அசத்திய பாலா திரைக் கதையில் தொங்கி விட்டார் . 
 
ஒரு குறும்படத்துக்கான கதையை வழக்கமான சில  விசயங்களை சேர்த்து ஒரு மணி நேரம் நாற்பது இழ்ழ்ழ்ழ்ழுத்த்த்து  இருக்கிறார் .
 
 ஜோதிகா கேரக்டரை தவிர்த்து விட்டுப் பார்த்தால் பாக்யராஜின் ஆராரோ ஆரிரரோ நிழலாடுகிறது . சிதம்பரம் பத்மினி வழக்கை எடுத்துக் கொண்டு , 
 
ஒரு நல்ல பெண் போலீஸ் அதிகாரியின் கீழ் உள்ள ஜெயிலில் , அந்த பெண் அதிகாரி லீவில் போன சமயத்தில் , ஒரு அப்பாவிப் பெண்ணை போலீஸ்காரர்களே சீரழித்தார்கள் . அதன் பின்னால் அரசியல் மற்றும்  பல பலங்கள். 
 
லீவு முடிந்து வந்த நாச்சியார் குற்றவாளிகளை என்ன செய்தார் …
 
— என்ற அளவுக்காவது ஒரு மேட்டர் புடிச்சு எடுத்து,  தெறிக்க விட்டு இருக்கலாமே பாலா . 
 
நாச்சியார் .. ஆளுகை கம்மி . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *