‘நடிகையர் திலகம்’

வைஜயந்தி மூவீஸ் சார்பில் அஸ்வின் தத்  தயாரிக்க , கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, அனுஷ்கா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில், 

தமிழ் தெலுங்கு  மலையாளம் , இந்தி ஆகிய நான்கு மொழிகளில் உருவாகும் படம் ‘நடிகையர் திலகம்’ . 

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக வரும் இந்தப் படத்தை தமிழில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடுகிறார் 
 
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பளார்  அஸ்வின் தத் , 
“எனது  தாய் மொழி தெலுங்கு . ஆனால் நான் சென்னைக்காரன்தான். வெகுநாள் நான் சென்னையில்தான் இருந்தேன் .                                                                                                                                             சென்னையில் இருந்து  ஆந்திராவுக்கு நானும் சிரஞ்சீவியும் தான் கடைசியாக போனோம் . நான் தெலுங்கில் எடுத்த பல படங்கள் தமிழின் ரீமேக் தான். மிக சிறந்த நடிகையான சாவித்ரி தென்னக சினிமாவை கட்டி ஆண்டவர் .
அவரது வரலாற்றை படமாக எடுப்பதில் பெருமைப் படுகிறோம்  ” என்றார் .“சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு சொல்லும் ஒரு படத்தை தமிழில் வெளியிடுவதில்  மகிழ்ச்சி ” என்றார் ரவீந்திரன் . 
 
” காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் நடிகை சாவித்திரி.  அவரது நடிப்பு என்றும் மறக்க முடியாத ஒன்று. குறிப்பாக நவராத்திரி படத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் போல பொய்யாக நடிக்கும் நடிப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது .
 
இந்தப் படம் ஆரம்பிக்கும்போது கீர்த்தி சுரேஷ் இதற்கு பொருத்தமாக இருப்பாரா ? சரி வருமா ? சாவித்ரிக்கே இது கேவலம்’ என்றெல்லாம் பலரும் பேசினார்கள் . ஆனால் அதை எல்லாம் பெரிதாக நினைக்காமல் தன பங்களிப்பை சரியாக செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ் .
 
இந்தப் படத்துக்கு பாடல் எழுதியது பெருமைக்குரிய விஷயம் ” என்றார் பாடலாசிரியர் கார்க்கி . 
 
கீர்த்தி சுரேஷ் பேசும்போது ,
“தொடரி படத்தை பார்த்து விட்டு என்னை இந்தப் படத்துக்கு தேர்ந்தெடுத்ததாக இயக்குனர் சொன்னார் .
 
இந்த படத்தில் நடித்ததன் மூலம் அந்த மாபெரும் நடிகையை நெருக்கமாக உணர முடிந்தது. மேக்கப் மற்றும்  உடைகளில் மிக கவனம் செலுத்தி இருக்கிறோம் . 
 
திரைக்கு அப்பாற்பட்ட சாவித்ரியை பற்றி அதிகம் பேசும் படம் இது .
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவர் எப்படி இருப்பார் என்பது பற்றி அவரது மகள் விஜய சாமுண்டீஸ்வரி பல குறிப்புகளை சொன்னார் .
 
இது சாவித்ரியம்மாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அதே நேரத்தில் வழக்கமான வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் ” என்றார் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *