நாகேஷ் திரையரங்கம் @ விமர்சனம்

டிரான்ஸ்இண்டியா மீடியா சார்பில் ராஜேந்திரா எம் ராஜன் தயாரிக்க , ஆரி,  ஆஸ்னா சவேரி,   எம் ஜி.ஆர் லதா, காளி வெங்கட், மசூம் சங்கர் நடிப்பில், 

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முழு நீள தமிழ்த்திரைப்படமான அகடம்  படத்தை இயக்கியதன் மூலம் கின்னஸ் சாதனை செய்த இசாக் ,
 
இரண்டாவதாக இயக்கி இருக்கும் படம் நாகேஷ் திரை அரங்கம் . ரசனை  அரங்கம் எப்படி ? பார்க்கலாம் . 
 
வீட்டு புரோக்கர் வேலையில் சொற்பமாக சம்பாதிக்கும் இளைஞனுக்கு ( ஆரி ) ,  விதவை அம்மா ( சித்தாரா) , குடும்பத்தின் சம்பாதிக்கும் நபரான ஒரு தம்பி (அபிலாஷ்) , பேச்சு மாற்றுத் திறனாளியான ஒரு தங்கை (அதுல்யா).(வேறு) ஒரு வீட்டு புரோக்கருக்கு (மனோபாலா) மகளாகப் பிறந்து , அதனால் பொது இடங்களில் கிண்டல் செய்யப்பட்டு ,
 
‘நான் ஐ டி கம்பெனியில் வேலை செய்பவனைத்தான் மணப்பேன்’ என்ற கொள்கையோடு இருக்கும் ஓர்இளம் பெண்ணுக்கும் ( ஆஸ்னா சவேரி) நாயகனுக்கும் முதலில் மோதல் ; பிறகு காதல் . 
 
பேச்சு மாற்றுத் திறனாளி  தங்கை ஒருவனை விரும்ப , அந்தக் குடும்பத்தில்  150  பவுன் நகை வரதட்சணையாக கேட்கிறார்கள். 
 
தங்கைக்காக மற்றவர்கள் சம்மதித்தாலும் , சம்பாதிக்கும் தம்பி மறுக்கிறான் . 
 
நாயகனின் இறந்து போன அப்பா ,  சொந்த ஊரில் உள்ள தனக்கு  சொந்தமான — இப்போது இயங்காமல் இருக்கிற – நாகேஷ் திரையரங்கம் – என்கிற  தியேட்டர் ஒன்றை மகள் பெயரில் மட்டும் எழுதி வைத்து இருப்பதை சொல்லும் அம்மா , 
 
அந்த தியேட்டர் டாக்குமெண்டை நாயகனிடம் கொடுத்து அதை விற்று பணம் கொண்டு வர  சொல்கிறார் . 
நண்பனுடன் (காளி வெங்கட்) கிளம்பும் நாயகன் தியேட்டரை விற்க முயல , அங்கு இருக்கும் பெண்ணின் ஆவி ஒன்று (மசூம் சங்கர்) தியேட்டரை விற்க விடாமல் தடுக்கிறது . 
 
காரணம் என்ன? தியேட்டரை விற்க முடிந்ததா ? ஆம் எனில் நடந்தது என்ன? இல்லை எனில் நிகழ்ந்தது என்ன ? என்பதே இந்த நாகேஷ் திரை அரங்கம்.
 
முழு படத்தையும் ஒரே ஷாட்டில் எடுத்து தன்னை ஓர் அபாரமான டெக்னீசியனாக அகடம் படத்தில் நிரூபித்த இசாக் இந்தப் படத்தில் பேயோடு சேர்ந்து வணிக ரீதியான சினிமாவுக்கு வந்திருக்கிறார் . 
 
இயக்குனர் இசாக்

அதில் காதல், காமெடி , கவர்ச்சி, பேய் பயம் இவற்றை சரியாக பயன்படுத்தி அசத்தி இருக்கிறார் . 

 
ஆனால் அதோடு நின்று விடாமல் , சமூக அக்கறையோடு தனித் தன்மையோடும் சென்னையில் அனாதைக் அனாதைக் குழந்தைகளை வைத்து நிஜமாகவே செய்யப் படும் ஓர் அநியாயமான குற்றத்தை வீரியத்தோடு  தோலுரித்துக் காட்டி இருக்கிறார் . 
 
உண்மையிலேயே அந்த குற்றம் அதிக அளவில் நடப்பது சென்னையில்தான் என்பது அதிர வைக்கும் உண்மை . அது தொடர்பாக படம் சொல்லும் தகவல்களும் அவற்றை இசாக் விளக்கும் விதமும் ரத்தம் கொதிக்க வைக்கின்றன . 
 
காதல் காமெடி சேர்த்து பேய் என்ற விசயத்தை சிறப்பாக பயன்படுத்தி , கடைசி வரை படத்தை சுவாரஸ்யமாக , அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு கொண்டு போயிருக்கிறார்  இசாக் 
 
திரைக்கதையில் இருக்கும் சில நுட்பமான திருப்பங்கள் ரசிக்க வைக்கின்றன . 
 
குறிப்பாக கனவையும் பேயையும் பயன்படுத்திய விதம் , எதிர்பாராத சமயத்தில் முக்கிய நபர்களாக பேயே வருவதை பயன்படுத்திய உத்திகள் அருமை .  
இப்படிப்பட்ட படத்தில் எதிர்பாராத  அட்டகாச பட்டாசுகளாக சாட் சட்டென வெடிக்கின்றன இசாக் எழுதி இருக்கும்  வசனங்கள் . 
 
“வக்கனையா பேசறவன் எல்லாம் ஜெயிக்கறது இல்ல . சைலண்டா இருக்கறவன்தான் காரியம் சாதிப்பான் ”
 
“அப்பன் சொத்துக்கு ஆசைப் படறவன் ஆம்பளையே இல்ல ” (அப்பாவின் சொத்து மகல்களுக்கானது என்ற பொருளில் )…
 
என்று  படம் முழுக்கவே இப்படி சீரியசாகாவும் காமெடியாகவும் வாழ்வியலோடு சம்மந்தப் படும் வசனங்கள் மனதாரப்  பாரட்ட வைக்கின்றன . அந்த வடக்கத்தி பொம்பளை புரோக்கர்.. இசாக்கின் குறும்பு . 
 
திரைக்கதைக்கும் பேய் வருவதற்குள் நடக்கும் காட்சிகள், கொஞ்சம் விட்டு இருந்தாலும் போர் அடித்து இருக்கும் .
 
ஆனால் பெண் பார்த்தல், புத்தக விற்பனை , ஐ ஏ எஸ் பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்விகள் என்று வெரைட்டியாக காட்சிகள் வைத்துக் கொண்டு வந்து திகிலோடு கை கோர்க்க வைத்து ,
அந்த டெம்போவை கடைசி வரை காப்பாற்றி இருக்கிறார்  இயக்குனர் இசாக் 
 
தமிழ் சினிமாவுக்கு நல்ல படங்களை தருவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும் இசாக்கிற்கு ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பு . 
 
அப்பாவித்தனம், குறும்பு, காதல் , துணிச்சல் என்று எல்லாவகையிலும் பொருத்தமாக நடித்து இருக்கிறார் ஆரி, கடைசிக் காட்சிகளில் பேயாக உழைத்து இருக்கிறார் . 
அகடம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து சாதனை படைத்த நௌஷத்தான் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு . இன்னும் சிறக்க  வாழ்த்துகள் .
 
கதாநாயகியாக  ஆஸ்னா சவேரி கொடுத்த வேலைக்கு குந்தகம் செய்யாமல் நடித்து இருக்கிறார் 
 
ஸ்ரீ(காந்த் தேவா ) இசையில் பத்திரிகையாளர் முருகன் மந்திரம் எழுதி இருக்கும், ”வாடி வாடி சங்கி மங்கி லேடி ” பாடல் தரை லோக்கலாக இறங்கி குத்துகிறது . பின்னணி இசையும் ஒகே .பேயாக நடித்து இருக்கும் மசூம் சங்கர் ஃ பிளாஷ் பேக் ஏரியாவில் இதயங்களை திருடுகிறார் . குறும்பு, அப்பாவித்தனம், கிளாமர் என்று அவரிடம் எல்லாமும் இருக்கிறது .
 
கதாபாத்திரச் செறிவான முகம் . நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கறது முக்கியம் 
 
நிஜ தியேட்டரை பாழடைந்த தியேட்டராக மாற்றிய விதத்தில் ராமலிங்கத்தின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது . 
 
காளி வெங்கட்  சிரிக்க வைக்கிறார் . பெயரில் உள்ள அடைமொழி பெயருக்கு பங்கம் தராத கேரக்டரில் கெத்தாக வருகிறார் எம்ஜிஆர் லதா . 
 
தம்பியாக வரும் அபிலாஷ் உற்சாகமாக நடிக்கிறார் . அதுல்யா , சித்தரா ஒகே 
 
சாமியாராக வரும் பத்திரிகையாளர் தேவராஜ் பொருத்தம் . 
 
அப்பாவின் சொத்துகள் பெண் குழந்தைகளுக்கே என்ற விசயத்தை கதையின் மையப்புள்ளியில் வைத்து பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்து இருக்கும்
படைப்பாளி இசாக் , கதாநாயகனின் தங்கை மட்டும் கடைசி வரை காதலித்தவனை வரதட்சணை கொடுத்துதான் மணந்து கொண்டாள் என்று படத்தை முடிப்பது சரியா ?
 
எனினும் .. 
 
நாகேஷ் திரையரங்கம் …. பயந்து ரசித்து வர , பயப்படாமல் டிக்கெட் வாங்கலாம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *