விதார்த் நடிக்கும் திரில் பேய்ப் படம் ‘நட்சத்ரா’

Preniss International (OPC) Pvt Ltd சார்பில்  பிரேம்நாத் சிதம்பரம் ,  CEO வெள்ளை சேதுவின் நிர்வாகத்தில் தயாரிக்க,
 
 தயாரிப்பாளர்களுக்கும் விநியோகதஸ்கர்களுக்கும்  லாபம் தரும் நடிகராக,  தனது வித்தியாசமான பாத்திரங்கள் மூலம்  தொடர் வெற்றிப் படங்களை தந்து  வரும்  விதார்த் ,  
 
 நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் , மற்றும்  செண்ட்ராயன், சந்தோஷ் பிரதாப், சங்கிலி முருகன், ஆடுகளம் நரேன், லக்‌ஷ்மி ப்ரியா ஆகியோர் நடிக்க அறிமுக இயக்குனர் மனோஜ் ராம் இயக்கும் படம் ‘நட்சத்ரா’
 
 பரத் ராகவன் இசையமைக்க, N.S.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணி குமரன் படத்தொகுப்பு செய்ய A.B.R கலை இயக்கம் செய்துள்ளார். சண்டைக் காட்சிகளை ராஜசேகர் வடிவமைத்துள்ளார்.  
 
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்,  மீடியா மத்தியிலும் இணைய உலகிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.    பாதுகாவலன் உடையில் மாயங்களை துப்பறியும் விதமாக விதார்த் இருக்க,  பின்னணியில் பெண் ஆவிகள் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது  பலத்த எதிர்பார்ப்பை தூண்டுகிறது. 
 
“மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘நட்சத்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஹாரர் கலந்து,  பயப்படுத்தும் அம்சமும் கொண்டிருக்கும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதைப் பற்றி  நான் கூறுவதை விட நேரில் திரையரங்கில் அந்த  ஆச்சர்யங்களை   ரசிகர்கள் அனுபவிப்பதே சரியானதாக இருக்கும். ‘நட்சத்ரா’ படம் கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களுக்கு மர்மங்கள் நிறைந்த மாய அனுபவத்தை தரும்” 
 
— என்று படம் பற்றிக் குறிப்பிடும் மனோஜ்ராம் மேலும் , 
 
“இதைச் சொல்வது வழக்கமான ஒன்றாக இருக்கும் ஆனால் இது தான் உண்மை. தயாரிப்பாளர்கள்  பிரேம்நாத் சிதம்பரம் மற்றும் வெள்ளை சேது CEO, Preniss International (OPC) Pvt Ltd இருவரும் என் மீதும் திரைக்கதை மீதும் வைத்த நம்பிக்கையால மட்டுமே இத் திரைப்படம் சாத்தியமானது.
 
இன்று இப்படம் திட்டமிட்டபடியே மிகச் சரியான முறையில் உருவாகி வந்திருப்பதில் படக்குழு மிகுந்த மிகிழ்ச்சியில் இருக்கிறது. 
 
விதார்த்தின் அர்பணிப்பும் அவர் நடிப்பின் மீது கொண்டிருக்கும் தீவிர காதலும் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேம்களிலும் பிரதிபலிக்கிறது. அவரது கதாபாத்திரம் சில வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று.  படம் முடிந்த பிறகு அனைவரது மனங்களில் நீங்காத இடம் பிடிப்பதாக அவரது கதாப்பாத்திரம் இருக்கும்.
 
 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு தேதிகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்” என்கிறார்.

 
 
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *