நட்புன்னா என்னானு தெரியுமா ? @ விமர்சனம்

லிப்ரா புரடக்ஷன்ஸ் சார்பில்  ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்க, கவின், ரம்யா நம்பீசன், ராஜூ, அருண்ராஜா காமராஜா , இளவரசு, நான் கடவுள்  ராஜேந்திரன் நடிப்பில் சிவா அரவிந்த் இயக்கி இருக்கும் படம் நட்புன்னா என்னானு தெரியுமா ?. இவங்களுக்கு ரசிகன் மன்சுன்னா என்னானு தெரியுதா ? பேசலாம் .

 சிறுவயது முதலே பள்ளிக் கூடக் காலத்தில் ஒன்றாக கூடிக் கூத்தடித்து ஒழுங்காகப் படிக்காமல் கல்வியில் தோற்றுப் போன  இளைஞர்கள்  சிவா (கவின்), ராஜு (ராஜு) , மணி ( அருண் ராஜா காமராஜா ) 

ஒரு நிலையில் மூவரும் சேர்ந்து  ஏ டு இசட் கல்யாணத்தை முடித்துத் தரும் தொழிலை துவங்குகிறார்கள் . காதலர்களை சேர்த்து வைத்து அவர்கள் பெற்றோர்களை சமாதானப்படுத்தி , அதன் மூலம் பல காதல் ஜோடிகளின் அபிமானத்தை பெற்று அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போது அந்த கல்யாணத்தை நடத்தித் தரும் ஆர்டரை பெறுகிறார்களாம் . அப்படி வளருது தொழில். 

இவர்களில் ராஜு, சுருதி என்ற பெண்ணை விரும்புகிறான் .  அவளை தானும் விரும்பும் சிவா, மணியிடம் ‘சுருதி உன்னை டாவடிக்கிறாள்’ என்று சொல்லி  நம்ப வைத்து  மணியை குழப்பி அதன்  மூலம் ராஜுவை ஏமாற்றி  ஸ்ருதியின் அன்பை பெறுகிறான் . ராஜு விஷம் குடிக்கிறான் . அவனை காப்பற்றினாலும் , விஷயம் அறிந்த நண்பர்கள் சிவாவை பிரிகிறார்கள். 

இந்நிலையில் தான் இதுவரை பெண்களை வெறுக்க காரணமே இப்போது நாம் விரும்பும் சுருதிதான்  என்று சிவா அறிகிறான் . அவளை பிரிகிறான் . பிரச்னை பெரிதாக விஷம் குடிக்கிறான் . 
சிவா பிழைத்தானா ? காதல் என்ன ஆச்சு ? நண்பர்கள் இணைந்தார்களா ? என்பதே இந்த படம்னா  என்னானு , சாரி , நட்புன்னா என்னானு தெரியுமா ?  படம் . 

சாதரணமாக ஆரம்பிக்குது படம் . எல்லாரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் . 

”எங்கப்பாவுக்கு ஸ்ட்ரோக் ”
“டூ ஸ்ட்ரோக் கா ? ஃபோர் ஸ்ட்ரோக் கா ?” 

– என்று கேட்டுக் கொண்டு நடிப்பவர்கள் மட்டும் சிரித்துக் கொள்ள முதல் பாதி முடியும்போது மரண பயத்தை உண்டு பண்ணி இருந்தார்கள் . 

ஆனால் இரண்டாம் பகுதியில் நிஜமாகவே கொஞ்சம் நகைச்சுவை வந்து ஆசுவாசப்படுத்துகிறது . 

சிவா காதலை சொன்ன உடனே சுருதி அதை ஏற்கவும் , அது தெரிந்த உடன் சிவா காதலை வெறுக்கவும் காரணமாக  மிக பொருத்தமாக  வரும் அந்த பள்ளித் தேர்வு காட்சியை பயன்படுத்திய விதம் திரைக்கதையில் சிறப்பு .

யுவராஜின் ஒளிப்பதிவு , நிர்மலின் படத் தொகுப்பு ஒகே . 
சல சல என்று படம் முழுக்க  பேசிக் கொண்டு இருப்பது போதாது என்று பின்னணி இசை என்ற பெயரில் வாசித்து அல்ல அல்ல இரைச்சல் கொடுத்து கதற வைக்கிறார் இசையமைப்பாளர். 

நடித்தவர்கள்  குறை  சொல்லும்படி செய்யவில்லை .பாரட்டும்படியும் செய்யவில்லை . 

தொண்ணூறுகளில்  வந்த ஒரு சுமாரான படம் பார்த்த உணர்வை தருகிறது இந்த படம் .

இன்னும் சிறப்பான முதல் பாதி, அக்கறையான திரைக்கதை, ஏற்றுக் கொள்ளும்படியான காட்சிகள் இருந்து இருந்தால் ஒரு சுமாரான பாடமாகவாவது வந்திருக்கும் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *