விக்ரம் பிரபு தயாரித்து, ரஜினி ரசிகராக நடிக்கும் ‘நெருப்புடா ‘- News & Gallery

IMG_9952

Picture 1 of 24

நடிப்புலக  இமயம் நடிகர்  திலகம் சிவாஜி  கணேசனின் வாரிசாக  இளைய திலகம் பிரபுவும் அவரது வாரிசாக விக்ரம் பிரபுவும் பிறந்து  வந்தது போல,  

அவர் வீட்டில் இருந்து சாந்தி  பிலிம்ஸ், சிவாஜி  புரடக்ஷன்ஸ் ,   சிவாஜி  பிலிம்ஸ் நிறுவனங்களை  அடுத்து , அடுத்த வாரிசாக  இப்போது  ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்  என்ற  தயாரிப்பு நிறுவனம் உருவாகி உள்ளது . 
ஆம் !
ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்ற என்ற அந்த  நிறுவனத்தின் பிறப்பு  விழாவும்….
_MG_3064
மேற்படி  ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் சார்பில் விக்ரம் பிரபு , சந்திரா ஆர்ட்ஸ் சார்பில்  இசக்கி  துரை , சினி இன்னோவேஷன்ஸ் சார்பில் ஆர்..கே. அஜய் குமார் ஆகியோர்  தயாரிக்க, 
விக்ரம் பிரபு , நிக்கி கல்ராணி , பொன் வண்ணன், நான் கடவுள் ராஜெந்திரன் ஆடுகளம் நரேன் ஆகியோர்   நடிக்க, 
பி.அசோக் குமார் என்ற அறிமுக இயக்குனர்  இயக்கும்   நெருப்புடா என்ற  படத்தின் துவக்க விழாவும் , 
கலைத்தாயின்  மூத்தமகன் வாழ்ந்த அந்த அன்னை  இல்லத்தில் கோலாகலமாக  நடந்தது . 
படத்துக்கு ஒளிப்பதிவாளர் – R.D. ராஜசேகர், இசை – ஷான் ரோல்டன், பாடல்கள் – ரோக்கேஷ், கலை – எம்.பிரபாகரன், படத் தொகுப்பு – தியாகு, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் – நரேன், டிஸைனர், சபீர், 
_MG_3061
திரையுலகமே  திரண்டு வந்து வாழ்த்தியது
(மேலே   உள்ள கேலரி  புகைப்படங்களில் அதை  அறிய முடியும்)
மிகுந்த சந்தொஷத்த்தில்  இருந்த பிரபு “அப்பாவின் ஆசிர்வாதத்தோடு தொடங்கும் இந்த  நிறுவனத்துக்கு — படத்துக்கு,
 அனைவரும் திரண்டு வந்து வாழ்த்துவது சந்தோஷமாக இருக்கிறது ” என்றார், நெகிழ்வும் மகிழ்வுமாக ,.
படத்தைப் பற்றி கூறிய  விக்ரம் பிரபு
_MG_3091
” தயாரிப்பாளராகவும்  ஆகி இருப்பதில் பொறுப்பு கூடி இருக்கிறது .இந்தப்  படத்தில் நான் தீயணைப்பு வீரராகவும் தீவிர ரஜினி ரசிகராகவும் நடிக்கிறேன் . 
படத்துக்கு  நெருப்பு  என்று ஒரு டைட்டிலை யோசித்து வைத்து இருந்தோம் . இந்த சமயத்தில் ரஜினி சாரின் கபாலி  படத்தின் பாடலில்  வரும் ‘நெருப்பு டா’  என்ற வார்த்தை  பிரபலமாகி விட, 
அதையே பெயராக வைத்து  விட்டோம் ” என்கிறார் . 
DSC_0280
படத்தின் இயக்குனர் அசோக்குமார் .ரோமியோ  ஜூலியட் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர் . ஒளிப்பதிவாளர்  ரவி வர்மனிடம் இரண்டு படங்களில் இணை  ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர் . 
அது மட்டுமா ?
சி என் என்,  ஐ பி என்  தொலைக்காட்சி  நிறுவனத்தில் எட்டு ஆண்டுகள் பத்திரிக்கையாளராகப் பணி புரிந்தவர் . 
பல்துறை  அனுபவம் கொண்ட  அசோக்குமார் என்ன  சொல்கிறார் ?
அறிமுக இயக்குனர்  அசோக் குமார்
அறிமுக இயக்குனர் அசோக் குமார்

“எல்லாமே ஒரு அதிசயம் போல  இருக்கிறது . 

சின்ன வயசு முதல் நான் சிவாஜி சாரின் தீவிர ரசிகன் . அவாது தமிழ் வசனங்களை  பேசி பள்ளிக்  கூடத்தில் கைதட்டலும் பரிசுகளும்  வாங்கியவன்.
(வீர பாண்டியக் கட்ட பொம்மன் படத்தில் வந்த பெரிய வசனங்களை மட்டுமல்ல , சிறு சிறு வசனங்களையும் பிசிறு தட்டாமல் அவர் பேசுவதைப் பார்க்கும்போது, ஒலிசித்திரம் கேட்பது போல இருக்கிறது) 
இன்று  அவர் பேரன் தயாரித்து நடிக்கும் படத்தை  இயக்குவது என்பது எனக்கு ஒரு சிலிர்ப்பான  உணர்வாக இருக்கிறது . 
DSC_0257
இதுவரை தமிழில் ஓரிரு  படங்களில் தீயணைப்பு வீரர் பற்றிய கதை வந்து இருக்கிறது . ஆனால் அவை எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியாக இந்த  நெருப்புடா படம் இருக்கும்  . 
நடிகர்த திலகத்தின் தங்கப் பதக்கம்  எப்படி போலீசுக்கு பெருமை சேர்த்ததோ ., அது போல இந்தப் படம் தீயணைப்பு வீரர்களுக்குப் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் . 
அந்த தீயணைப்பு வீரர் என்ற  கேரக்டருக்குள் ரஜினி ரசிகர் என்ற குணாம்சத்தை எல்லோரும் ரசிக்கும் வகையில் கலந்து இருக்கிறேன் ” என்கீறார்  அசோக் குமார் .
_MG_3122
தென்னிந்திய திரைப்பட பத்திரிகைத் தொடர்பாளர்கள் சங்கத் தலைவர் டைமண்ட் பாபு , இந்தப் படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார் .
மனமார்ந்த வாழ்த்துகள் ,  ‘நெருப்புடா’ குழுவுக்கு!  . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *