திரையரங்கத் திகிலில் ‘ நாகேஷ் திரையரங்கம்’

‘அகடம் ‘ என்ற  முழு தமிழ்ப் படத்தையும்  ஒரே  ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பெற்ற  முதல் தமிழ்  இயக்குநர் இசாக் 
 
இசாக்

அடுத்து, திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை மன்னன் நாகேஷின் பெயரில் இயக்கி இருக்கும் படம் ‘நாகேஷ் திரையரங்கம் 

 
டிரான்ஸ் இண்டியா மீடியா & என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்  சார்பில்  ராஜேந்திரா  எம்.ராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தின், 
 
ராஜேந்திரா எம் ராஜன்

கதாநாயகனாக, ஆரியும், கதாநாயகியாக ஆஷ்னா சவேரியும் நடித்திருக்கிறார்கள்.

தவிர அதுல்யா , மசூம் சங்கர் என்று மேலும் இரண்டு கதாநாயகிகள் 
 
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லதா, சித்தாரா நடிக்கிறார்கள்.
 
 காளிவெங்கட் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.  அகடம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நௌஷத் ஒளிப்பதிவு செய்ய,   கபாலி படத்தின் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர், 
 
பணிபுரியும் இந்தப் படத்தின்  பாடல்களை தாமரை, உமாதேவி,   முருகன் மந்திரம், மு.ஜெகன்சேட் எழுதுகிறார்கள். 
 

படத்தின் முதல் தோற்றத்தை இயக்குனர்கள் அமீர் மற்றும் கரு.பழனியப்பன் வெளியிட பாடல்களை சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியிட்டார். 

‘நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16 அன்று வெளியாக உள்ளது. 
 
தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் எண்ணற்ற திகில் படங்களும் பேய் படங்களும் வந்திருந்தாலும்,
 
அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கதையும் திரைக்கதையும் அமைத்துள்ளார் இயக்குனர் இசாக்.
 
திரையரங்கில் பேய் என்னும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் திகில் பட பிரியர்களை மட்டுமின்றி, 
அனைத்து தரப்பினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர்  ராஜேந்திரா எம்.ராஜன்,
 
”  கின்னஸ் ரெக்கார்டு படத்தை முதல் படமாக இயக்கிய இசாக் அதை சொந்தப் படமாகவும் எடுத்து இருந்தார் .
 
அது ஒன்றே நான் அவருக்கு படம் கொடுக்கப் போதுமானதாக இருந்தது . இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்கி உள்ளார்” என்றார் .பாடலாசிரியர் முருகன் மந்திரம் தன் பேச்சில் , ” நான் இந்தப் படத்தில் எழுதிய பாடல் டாஸ்மாக் பாடல் .
 
ஆனால் அதில் கூட குடிக்க எதிரான கருத்துகளை சொல்ல முடிந்தது மகிழ்ச்சி .
 
பெண் என்பவள் இங்கே சார்ந்து கிடக்கும் ஒரு பொருளாகவே இருக்கிறாள் . அது மாற வேண்டும் என்ற அவசியமும் அந்த வரிகளில் இழையோடும் ” என்றார் .
 
இன்னொறு பாடலாசிரியரான ஜெகன் சேட் ,
” எனக்கு நடிக்கவும் , இயக்கத்திலும் பாடல் எழுதவும் ஆர்வம் உண்டு .
 
மூன்றிலும் எனக்கு தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுத்தது மிக சந்தோஷமான விஷயம் ” என்றார் 
 
நடிகை லதா தன் பேச்சில் “நான் சினிமாவில் நடிச்சு ரொம்ப நாள் ஆச்சு. சீரியல்களில் நடிச்சுட்டு இருந்தேன் .
 
அப்போதான் இந்தப் படத்துக்கு கேட்டார்கள் . நான் கதை கேட்டேன் .
 
கதை நன்றாக இருந்தது. என் கேரக்டர் நன்றாக இருந்தது . முக்கியமாக சமூக அக்கறை விஷயம் இருந்தது .
 
அதனால் ஒத்துக்கிட்டேன் . படம் ரொம்ப நல்லா வந்திருக்கு ” என்றார் . 
 
 இயக்குனர் இசாக் பேசும்போது , “திரையரங்கை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் கதையும் களமும் புதிதாக இருக்கும்
நகைச்சுவை, காதல், மர்மம் போன்றவற்றை பின்னணியாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
 
 நிச்சயமாக நாகேஷ் திரையரங்கம் திரையரங்குகளை கவரும். 
 
படத்தின்  தயாரிப்பாளர் லதாவின் தீவிர ரசிகர் . எனினும் அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார் .
 
உங்கள் கதைக்கு தேவை என்றால் மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார் 
அப்படியே நான் எனக்கு சரி என்று பட்ட நிலையில் மட்டுமே எல்லோருக்கும் வாய்ப்புக் கொடுத்து உள்ளேன் . 
 
அவர்கள் எல்லோரும் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது . ஆனால் ஆரி செய்த உதவியை மறக்க முடியாது .
 

திண்டிவனத்தில் எங்களோடு  ஷூட்டிங்ல இருந்த ஆரி சாருக்கு வந்தது, இடி மாதிரி ஒரு  செய்தி…. அவங்க அம்மா இறந்துட்டாங்க !

ஒரு மனுசனுக்கு உச்சபட்ச அன்ப கொடுக்க கூடிய ஒரே ஜீவன் அம்மா மட்டும்தான். சாகுற அளவுக்கு கஷ்டம் வரும்போது நாம சாய நினைக்கிற ஒரே மடி அம்மா மடிதான்தகவல் எங்களுக்கு தெரிஞ்சதும் நாகேஷ் திரையரங்கம் படத் தயாரிப்பாளர் ,  நான் \என மொத்த டீமும் ஆரி சாரை உடனே கிளம்பச்  சொன்னோம்.

அப்படி கிளம்ப சொன்னாலும் எல்லாருக்கும் ஒரு விஷயம் நல்லா தெரியும்..

அதுதான் படத்தோட கடைசி நாள் ஷூட்டிங். பகல் 2 மணி கால்ஷீட்டா ஆரம்பிச்சு  மறுநாள் வரைக்கும் படப்பிடிப்பு நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம்.

இல்லன்னா  ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் சார்,  திண்டிவனம் கண்ணையா தியேட்டரை நாகேஷ் திரையரங்கமா மாத்திப் போட்ட செட்டும்,ட்ரான்ஸ் இண்டியா நிறுவனம்  இந்த ஒருநாள் ஷூட்டிங்குக்காக அள்ளி இறைத்த காசும்   வீணா  போயிடும்.

கஷ்டமான சூழ்நிலையிலும் பிறர் கஷ்டத்த நினைச்சி தன் கஷ்டத்த ஏத்துக்கிறவன் ரொம்ப பெரிய மனுசன். ஆனா ஆரி சார் ரொம்ப ரொம்ப ரொம்ப பெரிய மனுசன்.

எக்காரணத்தக் கொண்டும் சூட்டிங் நிக்கக் கூடாதுன்னு நினைச்சவரு,  தன்  அம்மாவோட சடங்குகளை தள்ளி வச்சிட்டு நடிச்சிக் கொடுத்தார்.

எனக்கு ரீடேக் சொல்லத்  தோணாத போதும்,  ஷாட் நல்லா வராத போது ஒன்மோர் போலாம் சார்னு ஆரி சாரே, தொழிலை அம்மாவின் இடத்துல வச்சார்.வேலை பாக்குற எங்களுக்கு ஒரே குற்றவுணர்வு..இந்த நேரத்துல இவரை கஷ்டப்படுத்தணுமான்னு.

“எனக்கு கிடைச்ச இந்த நடிகன் வாழ்க்கை என் அம்மா ஆசைப்பட்டது. இப்ப இதை நஷ்டத்தோட விட்டுட்டு போனேன்னா என் அம்மாவோட ஆன்மா என்னை மன்னிக்காது”ன்னு அவரே சொல்லி,

சூட்டிங் முடியுற வரைக்கும் கில்லியா நின்னார். மொத்த யூனிட்டும் நெருப்பா வேலை செஞ்சி அவரை சீக்கிரம் அனுப்பி வச்சோம். ஆரி சார் கார் பழனி நோக்கி பறந்தது.அதுவரை அவர்  அம்மாவோட ஆன்மா படப்பிடிப்பு தளத்திலேதான் இருந்தது. இப்படி பலரின் உழைப்பிலும் இழப்பிலும் தியாகத்திலும் உருவான படம் இது .

வரும் வெள்ளிக் கிழமை 16 ஆம் தேதி திரைக்கு வருகிறது ” என்றார் .

ஆரி தன் பேச்சில் , ” தமிழ் நாட்டில் தலை நகரின் விமான நிலையத்தில் தமிழுக்கு இடம் இல்லை என்பது பெரிய கொடுமை .

இந்தியாவிலேயே ஒழுங்கா வரி கட்டுபவன் தமிழன்தான் .

நாங்க எல்லாம் வரி கட்ட மறுத்தா அப்புறம் விளைவுகள் விபரீதம் ஆகும் கவனம் ” என்று நெருப்பாக ஆரம்பித்து , தொடர்ந்து , ” இந்தப் படத்தின் போது என் அம்மாவை நான் இழந்தேன் . அதை மறக்க முடியாது . ஆனால் அதைக் கூட நான் விளம்பரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டதாக திரித்து எழுதினார்கள் .

அது மனசுக்கு கஷ்டமாக இருந்தது . நான் ஒன்றும் அப்படி தரங் கெட்டவன் அல்ல . நாகேஷ் திரையரங்கம் படத்தில் நல்ல கதை , சமூக அக்கறை விஷயம் , காதல் , பேய் எல்லாம் இருக்கிறது . எல்லோரையும் கவரும் படமாக நிச்சயம் இருக்கும் ” என்றார் . 

வரும் வெள்ளிக்கிழமை அதாவது பிப்ரவரி 16 அன்று திரைக்கு வருகிறது நாகேஷ் திரையரங்கம்! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *