ஓநாய்கள் ஜாக்கிரதை @ விமர்சனம்

எஸ் பயாஸ்கோப் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி ஜே. பி. ஆர் என்பவர் இயக்க ,

விஸ்வநாத், ரித்விகா, ஆடம்ஸ், இயக்குனர் வெங்கடேஷ், விஜய் கிருஷ்ணராஜ், நித்யா ரவீந்தர், பேபி அம்ருதா, கேசியான் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஓநாய்கள் ஜாக்கிரதை. 

ரசிகர்கள் எந்த அளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ? பேசுவோம் . 
 
பெரும் பணக்காரத் தம்பதி ஒன்றுக்கு (விஜய் கிருஷ்ணராஜ்- நித்யா ரவீந்தர்)  கல்யாணம் ஆகி பதினாறு ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில் ,
 
தவமாய் தவம் இருந்து ஒரு பெண் குழந்தை பிறக்கிறது . சிறுமியாக இருக்கும் அதன் மீது உயிரை வைத்து வளர்க்கிறார்கள் . மனைவியின் தம்பி அழகுவை (விஸ்வநாத்) தங்களில் ஒருவனாக  எண்ணி அவனுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து கம்பெனி பொறுப்பையும் ஒப்படைக்க விரும்புகிறார் கணவர் . 
 
ஆனால் மோசமான குணம் கொண்ட அவன் அதை ஒருவரிடம் இருந்து அடிமையாக இருப்பது என்று எண்ணுகிறான் . குறுக்கு வழியில் பணம்  சம்பாதித்து கோடீஸ்வரனாக விரும்புகிறான் . 
 
கடன்காரனிடம் சிக்கித் தவிக்கும் சரவணன் (ஆடம்ஸ்) , அப்பாவின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப் படும்  பாண்டி (கேசியான்) ,
 
வெளிநாட்டில் இருக்கும் ஒருவரின் பெரிய பங்களாவுக்கு வாட்ச் மேனாக தனி ஆளாக அந்த பங்களாவில் இருக்கும் நபர் ( இயக்குனர் வெங்கடேஷ்) என்று ஒரு நட்பு வட்டம்  அழகுவுக்கு 
 
பங்களாவில் கூடி தண்ணி அடிப்பது , வெட்டியாய் ஊர் சுற்றுவது , குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயல்வது என்று  சுற்றும் கூட்டம் அது . 
 
இந்த நிலையில் ஒரு பிரபல ரவுடியின் தங்கையை(ரித்விகா)  யார் என்று தெரியாமலே கடத்தி வரும் நண்பர்கள் அவள் யார் என்று தெரிந்ததும் உயிரோடு விட்டால் ஆபத்து என்று அவளை கொன்று விடுகிறார்கள் . 
 
பிணத்தை அங்கேயே புதைத்து சமாதி மேல் ஒரு பிள்ளையார் சிலையை வைத்து விடுகின்றனர் . எனவே அந்த பெண்ணின் ஆவியால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை(யாம்) .
 
இந்த நிலையில் மாமாவிடம் உள்ள பெரும்பணத்தை சுருட்ட , அவளது மகளான சிறுமியை — அதாவது தன் அக்காள் மகளையே கடத்துகிறான் அழகு . 
 
மாமா உடனே பணத்தை கொடுக்க, குழந்தையை அனுப்பாமல் மேலும் மேலும் பணம் கேட்கிறான் . அவரும் பணம் கோடி கோடியாகக் கொடுத்துக் கொண்டே இருக்க, 
 
இந்த நிலையில்  தன்னை மாமாதான் கடத்தி வைத்துள்ளான் என்பது சிறுமிக்கு தெரிகிறது .  அவளுக்கு தெரிந்து விட்டது என்பது  அழகுக்கும் தெரிய வருகிறது . 
 
எனவே அக்காவிடம் எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டு மன்னிப்புக் கேட்கலாம் என்கிறான் . ஆனால் அழகுவால் பணத்தாசை ஊட்டப்பட்டு பண வெறி பிடித்த மற்ற  யாரும் அதை ஏற்கவில்லை . சிறுமியை கொல்ல முடிவு செய்கின்றனர் .  கதறியபடி ”என் கண் முன்னால் செய்யாதீங்க ” என்கிறான் அழகு  . 
 
இளம்பெண்ணை அழகு கொடூரமாக அடித்துக் கொன்றது போல , சிறுமியை வாட்ச் மேன் அடித்துக் கொல்கிறான். 
 
சிறுமியை புதைத்து விட்டு அதன் மேல் சாமி சிலை வைக்க மறந்து விட , சிறுமியின் ஆவி வெளியே வருகிறது . 
 
அதன் உதவியால் இளம்பெண்ணின் ஆவியும் வெளியே வருகிறது .  அப்புறம் என்ன நடக்கிறது என்பதே இந்த ஓநாய்கள் ஜாக்கிரதை .
 
இளம்பெண்ணை அழகு கொடூரமாக கொல்வதில் துவங்கும் படம் பிறகு தம்பதியின் மகள் மீதான பாசத்துக்குப் போகிறது . 
 
அழகு அன் கோ வின் திட்டங்கள் பதட்டம் தருகின்றன 
 
குழந்தை கடத்தப்பட்ட நிலையில் தவிக்கும்  தவிப்பில் விஜய் கிருஷ்ணராஜும் நித்யாவும் கவனிக்க வைக்கிறார்கள் . கடைசி காட்சியில் விஜய் கிருஷ்ணராஜின் தொடர் புலம்பல் குமுறல் நெகிழ்வு 
 
கடத்தியது மாமன்தான் என்று சிறுமி உணரும் தருணம் லாஜிக் சொதப்பல் என்றாலும் எதிர்பாரா திருப்பம் . 
 
அதன் பின்பு அழகுவின் மனப்போராட்டம் நண்பர்களின் பண வெறி என்று  பதட்டம் கூட்டுகிறது படம். 
 
இப்படி சில சிறப்பான விஷயங்கள் இருந்தாலும் சொதப்பல்களுக்கும் பஞ்சம் இல்லை . 
 
மாமா கிட்டத்தட்ட வாரிசு போலவே நடத்தும் நிலையில் எதற்கு அழகு அதை விடக் குறைவான பணத்துக்காக தவறான வழியில் போக வேண்டும் ? இந்த அடிப்படையே ஆட்டம் காணுவதுதான் பெரிய குறை . 
 
தவிர நமக்கு பணத் தேவை இருந்தால் யாரையும் ஏமாற்றலாம் , கஷ்டப் படுத்தலாம் , கடத்தலாம் , கொள்ளை அடிக்கலாம் , கொலை செய்யலாம் என்பதை நியாயப் படுத்திக் கொண்டே இருகின்றன வசனங்கள் . அந்தப் பேனா முனை முறிந்து போக !இதை விட முக்கியம் ‘சாமி அயோக்கியனுக்கு உதவி பண்ணும் . நியாயத்துக்கு துணை போகாது’ என்று கடைசி வரை சொல்லும் படம் இது. நாத்திகத்தை வளர்க்க இதை விட நல்ல படம் இல்லை . ஹா ஹா ஹா ஹா … 
 
எனினும் ‘துரோகம் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம் . நாம் யாரை சந்தேகப் படவே கூடாது என்று நம்புகிறோமோ அவர்களிடம் இருந்து கூட துரோகம் வரலாம் . கவனம் ‘ என்று சொல்லும் வகையில் கவனத்துக்கு உரியதாகிறது படம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *