பிக் பாஸ் பிரபலங்கள் நடித்த ”ஓவியாவை விட்டா யாரு ?”

oviya 1

வேலம்மாள் கிரியேஷன்ஸ் சார்பில் பத்திரிகைத் தொடர்பாளர் மதுரை செல்வம் தயாரிக்க, புதுமுகம் சஞ்சீவியுடன் கஞ்சா கருப்பு , வையாபுரி ஆகியோர் நடிக்க,

 சினேகன் பாட்டு எழுத ராஜதுரை  இயக்கி இருக்கும் சீனி என்ற படத்தின் கதாநாயகி………. ஓவியா! ஓவியா !! ஓவியா !

மேற் சொன்னவர்கள் தவிர அறிமுகக் காமெடியனாக பரத் , மற்றும் ராதாரவி, செந்தில், சரவணன் , மனோஜ்கிருஷ்ணா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம்,
 oviya 2
ஒரு படித்த இளைஞன் உழைப்பை நம்பாது அதிர்ஷ்டத்தை நம்பியதால் வரும் ஏமாற்றங்களை சொல்கிறது . 
படத்தில் எம் ஜி ஆரால் ரேஷன் கார்டு வழங்கப்பட்ட சீதா யானை முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்ற அதன் தோழியாக நடித்துள்ளார் ஓவியா . (யானை சென்ற வருடம் இறந்து விட்டது )
படத்தின் ரிலீசுக்காக மதுரை செல்வம் போராடிக் கொண்டு இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு கிடைத்த புகழ் இந்தப் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது . 
oviya 3
சீனி என்ற பெயரை ‘ஓவியாவை விட்டா யாரு?’ என்று மாத்தி பிக் பாஸ் புகழ் ஓவியாவுக்கு ‘பிக் மாஸ்’ என்று அடைமொழி கொடுத்து படத்தை ரிலீசுக்குக் கொண்டு வரத் தயாராகிறார்கள் . 
இந்தப் படத்துக்கு பதினோரு பிஆர் ஓக்கள் பணி புரிகிறார்கள் 
இந்த நிலையில் நடந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன், சண்டை இயக்குனர் ஜாகுவார் தங்கம் , இயக்குனர் சக்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் 
Oviyavitta-Yaaru-Movie-Teaser-Launch-Stills-16 (1)
மதுரை செல்வம் , தான் இந்தப் படத்துக்காக பட்ட கஷ்டங்களை எல்லாம் சொல்லி ”அப்போது எனக்கு பெரிய உதவியாக இருந்தவர் கதிரேசன் சார் . பல பிரச்னைகளை அவர் தீர்த்து வைத்தார் .
அதே போல சூழலுக்கு ஏற்ற மாதிரி படத்துக்கு ஓவியாவை விட்டா யாரு என்ற பெயரையும் ஓவியாவுக்கு பிக் மாஸ் என்ற பட்டத்தையும்  இயக்குனர் சக்தி சிதம்பரம் செய்தார் ” என்றார் 
 oviya 7
“தயாரிப்பாளர் சங்கம் சார்பில் எல்லா உதவிகளும் செய்யப்படும் ” என்று  கதிரேசன் சொல்ல , ”கில்டு சார்பில் எல்லா உதவிகளும் செய்யப்படும்” என்றார் ஜாகுவார் தங்கம் .
 oviya 6
” நான் பெயர் வைத்துக் கொடுத்தது எல்லாம் பெரிய விஷயம் இல்லை . பொருத்தமாக இருந்ததால் வைத்துக் கொடுத்தேன் .
மதுரை செல்வம் எப்போதோ செய்த புண்ணியம்தான் இந்தப் படத்தில் ஓவியா நடித்திருந்தது ” என்றார் சக்தி சிதம்பரம் 
oviya 4
“கிளாமர் கிருஷ்ண மூர்த்தி, பி டி செல்வகுமார் ,  நான் ,  ஆர் எஸ் அந்தணன் , ரியாஸ்  உட்பட  இதுவரை எட்டு பி ஆர் ஓக்கள் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறோம் .
அந்த வரிசையில் மதுரை செல்வமும் இணைகிறார் . அவர் வெற்றி பெற வேண்டும் ” என்றார்  விஜயமுரளி . 
oviya 99
பெரு. துளசி . பழனிவேல் பேசும்போது ” படம் காமெடி, செண்டிமெண்ட் , ஆக்ஷன் எல்லாம் கலந்து நன்றாக வந்திருக்கிறது.
இந்தக் காலகட்டத்துக்கு தேவையான ஒரு மெசேஜ் இருக்கிறது . படம் வெளிவந்து நன்றாக ஓடும் ” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *