சினிமா பி ஆர் ஓ யூனியன் நடத்தும் முப்பெரும் விழா

டைமன்ட் பாபு  தலைவராகவும் , பெரு.துளசி பழனிவேல் செயலாளராகவும்  , விஜயமுரளி பொருளாளராகவும் இருக்கும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன்  (பி ஆர் ஓ  யூனியன்) அமைப்பு,
 
திரைப்பட உலகத்துக்கும் ஊடகங்கள் வழியே பொது மக்களுக்கும் பாலமாக விளங்கும் முக்கிய அமைப்பாகும் .
 
சினிமாவின் பல்வேறு துறைகளிலும் அனுபவம் பெற்றவர்கள் பணியாற்றும் அமைப்பு இது 
 
இந்த தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் நடத்தும்முப்பெரும்  விழா ஒன்று, 
 
வரும் நாளை அதாவது ஜனவரி  3ஆம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணா் அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது . 
 
தமிழ் சினிமாவில் 1958ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படத்தின்  மூலம் மக்கள் திலகம் திரு. எம்.ஜி.ஆா். அவா்கள்,
 
திரு. பிலிம்நியூஸ்ஆனந்தன் அவா்களை “மக்கள் தொடா்பாளராக”நியமித்து திரை உலகிற்கு  மக்கள் தொடர்பாளர் என்ற தொழிலை அறிமுகப் படுத்தியதன் 60  ஆம் ஆண்டு விழா… 
 
தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் சங்கம் உருவாக்கி , 25 ஆண்டுகள் ஆன நிலையில் அதன் வெள்ளி விழா, 
 
மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா  ஆகியவையே அந்த முப்பெரும் விழாக்கள் !  
 

இந்த விழாவில் ரஜினி, கமல், பாரதிராஜா, AVM சரவணன், சரத்குமார், சிவகுமார், பிரபு, விஷால், நாசர், மு க ஸ்டாலின் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்

விழாவில் எம்.ஜி.ஆருடன் பணியாற்றிய 76 கலைஞர்கள் கெளரவிக்கப்பட இருக்கிறார்கள்.  இதில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பணியாற்றிய கலைஞர்களில் கலைஞர் கருணாநிதியும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அவரை நேரில் சென்று தென்னிந்திய திரைப்பட பத்திரிகையாளர் தொடர்பாளர் சங்க  நிர்வாகிகள் விழாவிற்கு அழைத்துள்ளனர்.   

கலைவாணர் எஸ் எஸ் கிருஷ்ணனின் பேத்தி ரம்யா தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார் . 

 யூனியன் சார்பில் பல்வேறு பிரபலங்களின் கட்டுரைகள் அடங்கிய மல  மலா் ஒன்றையும் வெளியிட உள்ளார்கள் 
 
இசையமைப்பாளா் இன்னிசை வேந்தா் டாக்டா் (சங்கா்) கணேஷின் திரைப்பட  இன்னிசை நிகழ்ச்சியும், நடன இயக்குனா் கலா மாஸ்டா் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது. 
 
இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆா். பாடல்கள் மட்டும் இடம் பெறுகிறது.
 
நிகழ்ச்சியைஅப்துல் ஹமீது மற்றும் அர்ச்சனா இருவரும் தொகுத்து வழங்குகிறார்கள் 
 
தமிழக கவா்னா், தமிழக முதல்வா், தமிழக துணை முதல்வா், தமிழக செய்தித்துறை அமைச்சா், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவா்
 
மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம் , தென்னிந்திய திரைப்பட வா்த்தக சபை, கில்டு, டிஜி்ட்டல் தயாரிப்பாளர்  சங்கம், தென்னிந்திய நடிகா் சங்கம்,
 
 தென்னிந்திய திரைப்பட தொழிலாளா் சம்மேளனம், திரைப்பட இயக்குனா்கள் சங்கம் , திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம், விநியோகஸ்தா்கள் சங்கம் ஆகியோர்க்கும் அழைப்பு வைக்கப்பட்டுள்ளது . 
 
இந்த விழா மிக சிறப்பாக வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறோம்  . 
 

 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *