பி ஆர் ஓ யூனியன் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

டைமன்ட் பாபு  தலைவராகவும் , பெரு.துளசி பழனிவேல் செயலாளராகவும்  , விஜயமுரளி பொருளாளராகவும் இருக்கும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன்  (பி ஆர் ஓ  யூனியன்) அமைப்பு,
 
திரைப்பட உலகத்துக்கும் ஊடகங்கள் வழியே பொது மக்களுக்கும் பாலமாக விளங்கும் முக்கிய அமைப்பாகும் .
 
சினிமாவின் பல்வேறு துறைகளிலும் அனுபவம் பெற்றவர்கள் பணியாற்றும் அமைப்பு இது 
 
இந்த தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் நடத்தும்முப்பெரும்  விழா ஒன்று, 
 
வரும் ஜனவரி மாதம் (2018) 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணா் அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது . 
 
சிறப்பான கலை நிகழ்ச்சிகள் வித்தியாசமான நிகழ்வுகள் என்று எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் விழாவை திட்டமிட்டு வருகிறது தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன்இது பற்றி வெளியிடப்பட்டுள்ள பத்திரிகையாளர் செய்தியில்… 
 
‘தமிழ் சினிமாவில் 1958ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படத்தின்  மூலம் மக்கள் திலகம் திரு. எம்.ஜி.ஆா். அவா்கள்,
 
திரு. பிலிம்நியூஸ்ஆனந்தன் அவா்களை “மக்கள் தொடா்பாளராக”நியமித்து திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
 
அதன் பின்னா் டாக்டா் கலைஞா் முதல்வரான பின் எங்கள் பிதாமகன்  பிலிம்நியூஸ் ஆனந்தன்  அவா்களுக்கு “கலைமாமணி” விருது வழங்கி கௌரவபடுத்தினார்.
 
அதன் பிறகு முன்னாள் முதல்வா் மாண்புமிகு ஜெயலலிதா அவா்கள் பிலிம்   நியூஸ் ஆனந்தன்  அவா்களின், 
 
திரையுலகின் சேகரிப்பான தகவல் மற்றும் புகைப்படங்களுக்கு நிதி கொடுத்து வாழ்த்தினார்.
 
ஆகவே எங்கள் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆா். அவா்களின் நூற்றாண்டு  விழாவும், 1958ல் மக்கள் தொடா்பாளா் என்ற தொழில் துவங்கப்பட்டு 60ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டியும், ,
 
 
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் 1993ஆம் ஆண்டு  பதிவு செய்யப்பட்ட 25 ஆண்டு வெள்ளி விழாவையும் சோ்த்து முப்பெரும் விழாவாகக்  கொண்டாட உள்ளோம்.
 
விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களின் படங்களில் பணியாற்றிய நடிகா்,நடிகையா் தொழில் நுட்ப கலைஞா்களுக்கு விருது வழங்கி கெளரவப்படுத்த உள்ளோம்.
 
யூனியன் சார்பில் மலா் ஒன்றையும் வெளியிட உள்ளோம்.
 
இசையமைப்பாளா் இன்னிசை வேந்தா் டாக்டா் (சங்கா்) கணேஷின் திரைப்பட  இன்னிசை நிகழ்ச்சியும், நடன இயக்குனா் கலா மாஸ்டா் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது. 
 
இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆா். பாடல்கள் மட்டும் இடம் பெறுகிறது.
 
தமிழக கவா்னா், தமிழக முதல்வா், தமிழக துணை முதல்வா், தமிழக செய்தித்துறை அமைச்சா், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவா்
 

மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம் , தென்னிந்திய திரைப்பட வா்த்தக சபை, கில்டு, டிஜி்ட்டல் தயாரிப்பாளர்  சங்கம், தென்னிந்திய நடிகா் சங்கம்,
 
 தென்னிந்திய திரைப்பட தொழிலாளா் சம்மேளனம், திரைப்பட இயக்குனா்கள் சங்கம் , திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம், விநியோகஸ்தா்கள் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கும் கடிதம் கொடுத்துள்ளோம்.
 
வரும் ஜனவரி மாதம் (2018) 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணா் அரங்கத்தில் இந்த முப்பெரும் விழா முழுக்க முழுக்க திரைத்துறை சம்பந்தப்பட்ட விழாவாக நடத்த திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . 
 
மிக சிறப்பாக அமைய எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ள இந்த விழா வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறோம்  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன்

புனைப் பெயர் : ராஜ திருமகன்

கல்வித் தகுதி : B.E. Mechanical

பிரசுரமான முதல் படைப்பு : கவிதை —

பெங்களூரில் நடந்த ‘பெரிய’ மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை…..
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )

பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்

மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது

விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)

விளம்பர முகவர் —ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)

கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் –மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)

சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)

நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)

பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)

சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )

தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )

நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )

நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )

திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் –ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)

நடிகர் — முழு நீள கதாபாத்திரம் — அஜந்தா (தமிழ் , தெலுங்கு )

— நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)

— கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்

பாடலாசிரியர் — அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),

முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )

அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து

தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *