பப்பி @ விமர்சனம்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரிகணேஷ் தயாரிக்க, சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேல் வெளியிட , வருண் , சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு நடிப்பில் முரட்டு சிங்கிள் எனப்படுகிற நட்டு தேவ்இயக்கி இருக்கும் படம் பப்பி . 

பள்ளி கல்லூரி நாட்களில் பாலியல் விவகாரத்தில் வரம்பு மீறும் மாணவர்களைப் பார்த்து ஏங்குகிற — பயம் காரணமாகவோ அல்லது சூழல் காரணமாகவோ வாய்ப்பு அமையாத — மாணவர்களில் ஒருவன் ( வருண்) . தான் வளர்க்கும் நாயான பப்பி மீது மிகுந்த பாசம் கொண்டவன்.  அவனது சீனியர் நண்பன் ஒருவன் ( யோகிபாபு).

சீனியரின் உதவியோடு வரம்பு  மீற முயல்கிற வாய்ப்புகள் தவற — ஒரு நிலையில் அவன் வீட்டு மாடியில் குடியேறும் ஒரு குடும்பத்தைச் பெண்ணோடு ( சம்யுக்தா) நட்பு காதல் என்று வந்து எல்லை மீறுகிறது . 

பப்பியை ஆண் நாயோடு இணை சேர்க்க அது கர்ப்பம் ஆகிறது . 

பெண்ணுக்கு நாள் தள்ள , கர்ப்பம் ஆகி விட்ட பயத்தில் டாக்டரை பார்க்கப் போன இடத்தில் , முறை தவறி கர்ப்பமாகி கருவைக் கலைத்த மற்றொரு பெண்ணை  அந்த பெண்ணின்  அம்மா திட்டுவது கண்டு , மருத்துவமனையில் இருந்து வெளியேறுகிறாள் காதலி . 

காதலன் திட்ட , எதுவானாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவள் விலக, மனப் பிரிவு! 

இந்த நிலையில் கர்ப்பமான பப்பி உயிராபத்துக்குப் போக, அதைக் காக்க துடிக்கும் நாயகன் அதன் வழியே புரிந்து கொள்ளும் விஷயம் என்ன? அதன் விளைவு என்ன என்பதே பப்பி . ஆரம்பத்தில் விடலை இளைஞர்களை குறிவைத்து பலான விசயங்களை முன்னிறுத்தி காட்சிகள் நகர்கின்றன . அதில் நகைச்சுவையும் வருகிறது.

கடைசி  வரை இது ஹரஹர மகாதேவகி பாணி படமோ என்று எண்ணும் போது ,  பாசம் , உயிர்ப்பு , சமதர்மம்  என்று  மடை மாற்றி  படத்தைக் கொண்டு போகிறார் இயக்குனர் நட்டு தேவ். 

மேற்சொன்ன பலான விஷய காட்சிகளை விட அது போன்ற காட்சிகள் சிறப்பாக உள்ளன . குறிப்பாக  கால்பந்தில் திறமை உள்ள யோகி பாபுவை கார்ப்பரேஷன் பள்ளி மாணவன் என்று பலரும் ஒதுக்குவதும் அதன் முடிவும் அருமை . 

இது போன்ற காட்சிகளில் இயக்குனரின் படமாக்கல் திறமை  நன்றாகவே வெளிபடுவதைப் பார்க்கும்போது , இவர் பலான விசயத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமோ என்று கூட தோன்றுகிறது.

 சற்றே மெச்சூரிட்டி இல்லாத நாயகன் கதாபாத்திரத்தில் குரல் நடிப்பிலும் அக்கறை செலுத்தி நடித்திருக்கிறார் வருண். சம்யுக்தா இயல்பாக இருக்கிறார் .  யோகிபாபு ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். மாரிமுத்து , நித்யா ஒகே . 

தரன்குமார் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன . 
தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவும் ரிச்சியின் படத் தொகுப்பும்  ஒகே 

பப்பி … ஜொள்ளும் சொல்லும் 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *