பீச்சாங்கை @ விமர்சனம்

??????????????????????????????????
இடது கையால் ஜஸ்ட் லைக் தட் பிக் பாக்கெட் அடிப்பதில் வல்லவனாக இருக்கும் நாயகன் , கொஞ்சம் மன  சாட்சி உள்ளவனாகவும் இருக்கிறான் .

ஒரு கல்யாணச் செலவுக்கான தொகையை பிக் பாக்கெட் அடித்து அதை திரும்பக் கொடுக்கப் போய் , காதலில் விழுந்து ,

அப்புறம் காரில் விழுந்து பீச்சாங்கை அடிபட்டு ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரம் என்ற நோய்க்கு ஆளாகிறான் .

அதாவது அவன் இடது கை  அவன் மூளை சொல்கிற ஒட்டு மொத்த உடம்புக்கான செயல்பாடுகளை செய்யாமல் தன்  இஷ்டத்துக்கு செயல்படும் .

pee 3
அது விபரீதமாக நடந்து கொள்ளும்போது அதை கட்டுப் படுத்துவதே பெரிய வேலையாக இருக்கும் .

இதன் காரணமாக அவன் ஒரு தாதாவிடம் சிக்குகிறான் , சில அரசியல்வாதிகளின் உள்குத்து சண்டைக்குள்  தானும் ஒரு கருவியாகிறான் . அதனால் ஏற்பாடு விளைவுகளே இந்தப் படம் .

இப்படி ஒரு கேரக்டரில் நடிப்பது மிக கஷ்டமான விஷயம் . மிகப் பெரும் திறமை,  பயிற்சி , உடல் உறுப்புகளை ஆளும் திறன் ஒரு நடிகனுக்கு இருந்தால் மட்டுமே இது சாத்தியம் .

அதை சிறு குறை கூட இன்றி பிரம்மாதமாக செய்து வியக்க வைக்கிறார் நாயகன் ஆர் எஸ் கார்த்திக் . அருமை
மற்றபடி நகைச் சுவை என்ற பெயரில் என்னத்துக்கோ எதுக்கோ என்று பயணிக்கிறது படம் .

pee 2

ஒரு காலத்தில் ரம்பம், அறுவை , மொக்கை மொண்ணை என்று சொல்லப்பட்ட ஜோக்குகளை எல்லாம் டார்க் காமெடி என்று பெயர் வைத்து கொட்டி முழக்குகிறார்கள் .

உங்களை யாருங்க காமெடியில் லைட் போட வேணாம்னு சொன்னது? போட  வேண்டியதுதானே ?

மற்றபடி நிஜமான டார்க் காமெடி என்பதெல்லாம் வேற பாஸ் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *