பெட்டிக்கடை @ விமர்சனம்

லக்ஷ்மி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து கதை திரைக்கதை வசனம் எழுதி இசக்கி கார்வண்ணன் இயக்க, சமுத்திரக் கனி, மொசக்குட்டி வீரா,சாந்தினி , அஸ்மிதா, வர்ஷா, நான் கடவுள் ராஜேந்திரன்  நடித்து இருக்கும் படம்  பெட்டிக்கடை . நம்பி புழங்கலாமா ? பேசலாம் .

 ஒரு பெட்டிக் கடைக்காரரின் மகளை காதலிக்கும் இளைஞனுக்கு (மொசக்குட்டி வீரா) ஒரு நிலையில் காதல் (வர்ஷா ) தோற்கிறது . இன்னொரு பக்கம் ஆன் லைன் வர்த்தகத்தின் இரும்புப் பிடி அதற்கு துணை போகும் அரசியல் அதிகார எடுபிடிகள் காரணமாக பெட்டிக் கடையே அந்த ஊரில் இல்லாமல் போகிறது .

 எதுவாக இருந்தாலும் ஆன் லைன் மூலம்தான் வாங்க வேண்டிய நிலைமை . இதில் தரக் குறைவான பொருட்கள் மட்டுமல்லாது, பல சமயம் செல் போனுக்கு பதில் செங்கல் வருவது போன்ற அநியாயங்களும்  உண்டு .

 அந்த ஊருக்கு வரும்  டாக்டர் ஒருவர் (சாந்தினி) இதற்கு எதிராக போராட முடிவு செய்து அணி திரட்டுகிறார் . ”பெட்டிக்கடை இருந்தால் நமக்கு என்ன தேவையோ அதை வாங்கி வைப்பார்கள் .

தவிர நேருக்கு நேர் பழக்கம் காரணமாக நல்ல பொருட்களும் கிடைக்கும் . ஆன்லைன் வர்த்தகத்தில் அவர்களிடம் உள்ளதை மட்டும் விற்பார்கள் . தரமும் இருக்காது “என்று விளக்குகிறார் .

 அப்போது அவரிடம்,  இதற்கு முன்பு இப்படி போராடிய  ஒருவர்( சமுத்திரக்கனி )  ஆன் லைன் வர்த்தக முதலாளிகளால் கொல்லப்பட்ட கதை சொல்லப் படுகிறது .

அதையும் மீறி டாக்டர் போராட , அப்புறம் என்ன நடந்தது என்பதுதான் படம் . 

நல்ல விஷயம்தான் . ஆனால் அதை சரியாக இயல்பாக யதார்த்தமாக சொல்லத் தெரியாமல் சொல்லி இருக்கிறார்கள் . நிஜ பிரச்னையை சொல்லும்போது லாஜிக் முக்கியம் . ஆனால் இங்கே லாஜிக் என்ற விசயமே படத்தில் இல்லை .

 இன்றைய மாநில ஆள்வோர்கள் எப்படி நமது மண்ணை  பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு விற்கிறார்கள் என்பதையும் சொல்கிறார்கள் . ஓ. பன்னீர் செல்வத்தை நினைவுபடுத்தும் ஓஹோ  கேரக்டரில் பசங்க சிவகுமார் . அவர் எடப்பாடியை கிண்டல் செய்வது போல எல்லாம் வசனங்கள் . சபாஷ் . 

இந்த நாட்டில்  பொம்பளைங்க அம்மணமா நின்னாதான் அடிப்படை நியாயமாவது கிடைக்குமா ? என்ற கிளைமாக்ஸ் வசனமும் கனம் சேர்க்கிறது . 

வடகிழக்கு மாகாண போராட்டங்களில் இருந்து அந்த காட்சியை எடுத்து இருக்கிறார் இயக்குனர் .

 இவற்றை விட்டால் அரதப் பழசான காதல் காட்சிகள் , பக்குவமற்ற இயக்கம் ,  செயற்கையான நடிப்பு  இவை படம் முழுக்க நிறைந்து கிடக்கின்றன . 

காதுகளில்  ரத்த ஆறு ஓட வைக்கிறார் இசை அமைப்பாளர் .

 பெட்டிக்கடை….. சொல்ல முயன்று இருக்கும் விசயத்துக்காக பாராட்டலாம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *