நடிகைகளை வைத்து பிரபலத்தை வளைக்கும் சகதி லெவல் தாமரை !

பெருசாக திரிஞ்சு போய்க் கிடக்கிறார்கள் அந்த இரண்டு நடிகைகளும் என்றால் அந்த அச்சு அசல் பிரபலத்தின் நிலமையோ கட் கட கட கட !
 
பின்னே முறைப்படி ஜனங்களை  வெல்லத் தெரியாமல் இப்படி நம்ம உயிரை வாங்கி அதில் நாற்காலி செய்ய நினைப்பார்கள் என்று யார்தான் நினைப்பார்கள் ?
 
விஷயம் இதுதான் !
 
சமீபத்திய தமிழக நிகழ்வுகளில் அடிக்கடி பேசப்படுபவை வருமானவரித்துறை ரெய்டு… அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகளை மட்டுமே குறி வைத்த ரெய்டு சமீப காலமாக அதிகாரிகள் வீடுகளுக்கும் பரவியிருக்கிறது.
ஆட்சியாளர்களுக்கு சாதமாக நடந்து கொள்ளாமல்போனால் இதுபோன்ற ரெய்டு பயமுறுத்தல்கள் எல்லா ஆட்சியிலும் வழக்கமான ஒன்றுதான்.
 
அதிலும் கடந்த 4 ஆண்டுகளில் வருமானவரித்துறை இத்தகைய ரெய்டுகளிலேயே பல மாநிலங்களில் ஆட்சிமாற்றங்கள் நடந்திருக்கிறது என்றாலும் அது மிகையில்லை…
 
விஷயம் ரெய்டு பற்றியும் இல்லை….
 
தாமரை மலர் பார்த்திருப்பீர்கள்… குளங்களில் மிக அழகாக பூத்திருக்கும்… தாமரையின் அழகில் மயங்கி அதை பறிக்கவேண்டும் என்று யாரும் குளங்களில் இறங்கினால் அவ்வளவுதான்…. மேலே அழகாக கண்ணுக்கு தென்படும் தாமரை மலரை தாங்கிப்பிடித்திருக்கிற அதன் தண்டுகள் கொடிகளாக அந்த தண்ணீருக்கடியில் வலைப்பின்னலாக பரவியிருக்கும். மலர் பறிக்கும் ஆசையில் இறங்குகிறவன் கால்களை, 
 
கொடிகள் பிடித்து இழுத்து சேற்றில் சிக்க வைத்து விடும் வெளியில் வருவது அத்தனை சுலபமில்லை.
 
அதேபோல, அந்த குளத்து தண்ணீரில்தான் தாமரை மலர்ந்தாலும் அந்த தண்ணீரையோ, மழையாக பொழியும் நல்ல நீரைகூட தன் இலை மீது ஒட்டிக் கொள்ள அனுமதிக்காமல் நாசுக்காக தவிர்த்து விடும் பழக்கம் தாமரைக்கு உண்டு…
சரி தாமரையை பற்றி தெரிந்து கொண்டீர்கள்… அந்த நடிகை தமிழ் சினிமாவில் சமீபத்திய பிரபலம்… தொழிலில் நிலைத்து நிற்க வேண்டுமானால் பலரின் அறிமுகம் அவசியம் என்பதால் ஒரு கிரிக்கெட் விழா நிகழ்வில் ஒரு பிரபலத்தை சந்தித்திருக்கிறார்…
 
அதன்பிறகு அவர்களுக்குள் அதிக நெருக்கம்… சரி அது அவர்கள் தனிப்பட்ட விருப்பம்…  
படிக்கிற நீங்களும் நானும் அப்படிதான் நினைச்சி அடுத்த செய்திக்கு போயிடுவோம்…
 
ஆனா, தாமரைக்கு அந்த பிரபலம் மேல ஒரு பார்வை, தனது  வலைப் பின்னலுக்குள் சிக்க வைத்து சேற்றில் அழுத்தி , அதன் மூலம் தான் எல்லா திசையிலும் பூத்துக் கொள்ள வேண்டும் என்று .  அதற்கென்று தம்மிடம் உள்ள வித்தையான — தங்கள் வழக்கமான ரெய்டு வலை வீசியும் பலன் இருக்காது என்று தெரிந்து கொண்டது… காரணம், அந்த பிரபலம் ஒழுங்கா வரிகட்டி பல காலமாக சமூகத்தில் பல தலைமுறையாக ஒரு அந்தஸ்தில் இருப்பவர்… 
 
இப்படி  வீழ்த்த முடியாத நபர்களை வீழ்த்த வேண்டும் என்றால் அடுத்த கட்டமாக 
 அடுத்து அவர்கள் தனித்தகவல்கள்,  தகவல் தொடர்புகள் ஆராயப்படும்… செல்போன்… வீட்டுப்போன்… ஆபீஸ் போன் எல்லாம் யாரோ ஒருவரால் பதிவு செய்யப்படும்…
 
அப்படி செய்யும்போது சில நேரங்களில் பல பிரபலங்களின் அந்தரங்கங்களின் மறைக்கப்பட்ட பக்கங்கள் வெளிச்சத்திற்கு வந்து சந்தி சிரித்திருக்கிறது…
 
முன்பெல்லாம் ஒரு தகவலை சொல்ல வேண்டுமானால் கடுதாசி எழுதி, தந்தி அடித்து, ஆள் அனுப்பி செய்தி சொல்வது வழக்கம்…
இப்போது பல சமூக வலைதளங்கள் வந்து விட்டதால் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அது அடுத்த மூலையில் இருப்பவரை போய் சேர்ந்து விடுகிறது…
 
தாமரையின் கண்ணில் சிக்கிய அந்த பிரபலத்தின் தொடர்புகள் கண்காணிக்கப்பட்டது… செல்போன் பேச்சுக்களில் நடிகையின் தொடர்புகள் சிக்கியதும்… ஏக குஷியடைந்த தாமரையின் கொடிகள், 
 
இப்போது அந்த நடிகையையும், அந்த பிரபலத்தையும் தனித்தனியாக தங்கள் வசப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது…
 
அந்தரங்கம் அம்பலத்திற்கு வந்து விடுமோ என நடிகையை விட அதிக அதிர்ச்சியில் இருப்பவர் அந்த பிரபலம்… 
அதே நேரம் நடிகை ஷாக் ஆனதோடு ரொம்ப கவலையாகியிருக்கிறாராம்… காரணம், பதிவு சிக்கியதல்ல…  தான் பல ரூட்டில் ஓடும் ஒரு வண்டி என்பது தெரிந்துவிடக்கூடாதே என்பது அவரின் கவலை…
 
எதையோ நினைத்து  தொலைபேசிப் பதிவை தொடங்கிய தாமரைக்கு பலரின் பர்ஸ்னல்கள் சிக்கியதால்… அடுத்தடுத்து அவர்களை வளைக்கும் பணியை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது…
 
அதேநேரம், ரெக்கார்டு ரெய்டையும் சத்தமில்லாமல் ஒரு பக்கம் செய்து வருகிறது தாமரையின் தனிப்படை. 
 
இப்படி  சத்தமில்லாமல் தொடங்கிய ரெக்கார்டு ரெய்டு… பல அதிர்ச்சிகளை நடிகர், நடிகைகளுக்கு தெரியாமலேயே தாமரைக்கு வாரி வழங்கியிருக்கிறது…
இதை வைத்து எப்படியும் தாமரையை மலர வைத்து விடலாம் என கணக்கு போடுகிறார்கள்… ஐய்யோ பாவம்…
 
சேற்றில் முளைத்தாலும்… பூஜைக்கு கோயிலுக்கு போனாலும்… தலையில் சூடிக்கொள்ள தாமரை லாயக்குபடாது என்பது அவர்களுக்கு தெரியவில்லை…!
 
இப்படி,  விளக்கு பிடித்துதான் விஸ்வரூபம் எடுக்க வேண்டுமா என்ன ?.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *