‘களவாணி 2’- வில் வில்லனாக பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்.

விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு, தடை பெற்றது தான். இயக்குநர் சற்குணத்தின் நடவடிக்கையால் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், ஹீரோ விமலின் பிரச்சினையால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது.

இதற்கிடையே, சமீபத்தில் விமலும், விநியோகஸ்தரும் சமரசமாக போவதாக, தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டதை தொடர்ந்து ‘களவாணி 2’ பத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டது.  விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த  ‘களவாணி 2’ வில் அரசியல்வாதி  வில்லனாக நடித்திருக்கிறார்  பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். 

ஆரம்பத்தில் சில சிறு முதலீட்டு படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், பிறகு சினிமாவில் ஒரு நடிகராக நிலைத்து நிற்க வேண்டும் என்பதால் கதை தேர்வில் கவனம் செலுத்தியதோடு, சிறு வேடமாக இருந்தாலும், பெயர் சொல்லும் வேடமாக இருப்பதோடு, முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களின் படங்களாக இருக்க வேண்டும் என்று எண்ணியதோடு, அதற்காக காத்திருக்கவும் முடிவு செய்தார்.

அதன்படி, சற்குணம் கண்ணில் பட்டவருக்கு களவாணி 2 படத்தில்  வில்லன் வேடம் கிடைத்தது. அதுவும் அரசியல்வாதி வேடம். கிடைத்த வேடத்தை சரியாக பயன்படுத்தி, இயக்குநர் சற்குணமிடம் பாராட்டு பெற்றவர் அப்படியே சில முன்னணி இயக்குநர்களின் படங்களில் வாய்ப்பும் பெற்று வருகிறார்.

இருப்பினும் தான் நடிக்கும் படங்கள் குறித்த தகவல்களை இயக்குநரின் அனுமதி இல்லாமல் வெளியே சொல்லாமல் இருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் , கலைவாணி 2 படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் .

வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடமாகட்டும், சிறியதோ, பெறியதோ எந்த வேடமாக இருந்தாலும் மக்கள் மனதில் நிற்கும்படியான வேடமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன், என்கிறார்  பப்ளிக் ஸ்டார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *