சீரியசான திரில்லர் படம் ‘ராட்சஷன்’

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீதர்  இணைந்து தயாரித்திருக்க,
 
விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில்,  முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய  ராம்குமார் இயக்கியிருக்கும் திரில்லர் படம் ‘ராட்சசன்’. 
 
ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடல்கள் மட்டும் சிறு முன்னோட்டங்கள் திரையிடப்பட்டன .
 
வழக்கத்துக்கு மாறான வித்தியாசமான கொலைகாரனை தேடும் படம் இது என்பது புரிந்தது. 
நிகழ்ச்சியில் பேசிய ஸ்கைலார்க் ஸ்ரீதர், ” ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்கும் முடிவில் நாங்கள் இருந்தோம்.
 
ராட்சசன் படத்தின் கதையைக் கேட்டு,  இந்தப் படத்தில் நாங்களும் உங்களோடு சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்டோம்.
 
டில்லி பாபு சார் அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டார். நாங்கள் பண விஷயத்தில் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் அதை பொறுத்துக் கொண்டார் டில்லி பாபு சார்.
 
இயக்குனர் ராம் என்ன கதை சொன்னாரோ, அதை விட மிகச்சிறப்பாக எடுத்துக் கொடுத்திருக்கிறார். நான் படம் பார்த்தேன், மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.
 
கதை தெரியாத எனது நண்பர் ஒருவர் படம் பார்த்து விட்டு மிகப் பிரமாதமாக இருப்பதாக சொன்னார், அதுவே படத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன்” என்றார் .
இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பேச்சில், “பொதுவாக படங்களின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க எனக்கு பதட்டம் அதிகமாகி கொண்டே இருக்கும்.
 
ஆனால் இந்த படத்தின் மீதான நம்பிக்கையால் பயம் இல்லாமல் இருக்கிறேன். கதையை கேட்டவுடனே எனக்கு ரொம்பவே பிடித்தது.
 
படத்தில் நடிகர்களின் நடிப்பு மிகச்சிறப்பாக இருக்கிறது, அதுதான் பின்னணி இசையமைப்பில் எனக்கு உதவியாக இருந்தது” என்றார். அமலா பால் பேசும்போது, “இந்த படத்தில் நடிக்கும் போதில் இருந்தே, படம் எப்போ ரிலீஸ் ஆகும் என ரிலீஸுக்காக ரொம்ப நாளாகவே காத்திருக்கிறோம்.
 
இயக்குனர் ராம் கதை சரியாக சொல்லவில்லை, பின் விஷ்ணுதான் அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர் என சொல்லி, அவரே கதையை எனக்கு விளக்கினார்.
 
கதை ரொம்பவே பிடித்தது. ராம் ரொம்பவே கடின உழைப்பாளி, நேரம் எடுத்து மிகவும் விரிவாக, தெளிவாக படத்தை எடுப்பார்.
 
சினிமாவில் எனக்கு அவ்வளவாக நண்பர்கள் கிடையாது, விஷ்ணு இந்த படத்துக்கு பிறகு எனக்கு நல்ல நண்பராகி விட்டார்.
 
நடிக்க வருபவர்களுக்கு விஷ்ணு ஒரு இன்ஸ்பிரேஷன். படத்துக்காக அவருடைய உழைப்பு அபரிமிதமானது.
 
ஒட்டுமொத்த படக்குழுவும் படம் சிறப்பாக வருவதற்கு தங்கள் பங்களிப்பை கொடுத்திருக்கிறது. திரில்லர் படம் என்றாலே ஹாலிவுட்டுடன் ஒப்பிடுவார்கள்.
 
ஆனால் இது நம்ம ஊரு திரில்லர் படம் என்று சொல்லும் அளவுக்கு நேட்டிவிட்டியுடன் இருக்கும். திரில்லர் படங்களில் இது ஒரு பெஞ்ச்மார்க்காக இருக்கும்” என்றார் 
தயாரிப்பாளர் டில்லி பாபு தன் பேச்சில், “நல்ல கதையுள்ள படங்களை எடுக்கும் நோக்கத்தில்தான் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி இயங்கி வருகிறது.
 
பொதுவாகவே திரில்லர், ஹாரர் படங்களின் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. மரகத நாணயம் இயக்குனர் மூலம்தான் இந்த கதையை நான் கேட்க நேர்ந்தது.
 
விஷ்ணு, அமலாவிடம் கதை சொல்லும்போது கொஞ்சம் பதட்டமாக இருந்த ராம், என்னிடம் கதையை மிகத் தெளிவாக சொன்னார், மிகச்சிறப்பான கதை.
 
இரண்டரை மணி நேரம் மிகவும் சீரியஸான, திரில்லர் படத்தை கொடுத்து ரசிகர்களை சீட்டில் உட்கார வைக்க முடியும் என்பதை ராம் நிரூபித்திருக்கிறார்.
 
படத்தின் ரிசல்ட்டை இப்போதே என்னால் உணர முடிகிறது. காசு இருந்தால் யார் வேண்டுமானாலும் படத்தை எடுத்து விடலாம்.
 
ஆனால் அதை கொண்டு சேர்ப்பதுதான் கஷ்டம். அதிர்ஷ்டவசமாக எங்கள் படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சார் ரிலீஸ் செய்கிறார்.
 
ஆக்சஸ் தொடர்ந்து நல்ல படங்களை எடுப்பதால் உங்களின் அடுத்தடுத்த படங்களையும் நானே ரிலீஸ் செய்கிறேன் என உறுதி அளித்திருக்கிறார்.
 
இந்த படத்தின் டீசர், டிரைலர் வந்தவுடன் பல்வேறு பிரபலங்கள் எங்களை பாராட்டினார்கள். அந்த அளவுக்கு படமும் நல்ல தரமாக இருக்கும்” என்றார். விஷ்ணு தனது பேச்சில், “முண்டாசுப்பட்டி படத்தின்போதே, இயக்குனர் ராமிடம் நாம் இன்னொரு படம் பண்ணலாம் என்று கேட்டேன்.
 
அவர் கதை எழுதிட்டு இருக்கேன்,  கொஞ்சம் நேரம் ஆகும் என்றார். பின் அந்த கதை உங்களுக்கு செட் ஆகாது என்றார், எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
 
பின்னர் ரொம்ப நாள் கழித்து ஒரு நாள் என்னை அழைத்து கதையை சொன்னார், கதையில் ஆக்‌ஷன் அதிகமாகவே இருந்தது.
 
எனக்கு  அவ்வளவு ஆக்‌ஷன் செட் ஆகாது என்று கூறினேன். பல தடைகளுக்கு பிறகும் இந்த கதை என்னையே தேடி வந்தபோதுதான் எனக்குதான் இந்த கதை போல என்ற உணர்வு எழுந்தது.
 
கதை ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நடக்கும். அதில் அமலா பால் கதாபாத்திரமும் ஒன்று.
 
அவர் 25 நாட்களுக்கும் மேல் நைட் ஷூட்டிங்கில் நடித்துக் கொடுத்தார். படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் ரிலீஸ் நேர பயம் எனக்கு இல்லை.
 
இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், அப்படி படம் ஓடலைன்னா தயாரிப்பாளருக்கு அடுத்த படம் நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று இந்த மேடையில் சொல்லிக் கொள்கிறேன்” என்றார் .
இயக்குனர் ராம்குமார் பேசும்போது, “படத்தின் டீசர், டிரைலர் பார்த்து விட்டு எல்லோரும் சொன்ன கமெண்ட்ஸ் பார்த்து படத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.
 
முண்டாசுப்பட்டி படத்துக்கு பிறகு இந்த கதையை கிட்டத்தட்ட 20 தயாரிப்பாளர்கள் மற்றும் 17 ஹீரோக்களிடம் சொல்லி விட்டேன்.
 
சீரியஸ் படம் என்ற உடனே அவர்கள் யோசித்துச்  சொல்கிறேன் என சொல்லி விட்டார்கள்.
 
ஆனால் டில்லி பாபு சார்தான் என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார். விஷ்ணு என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.
 
படத்தை பார்க்கும்போது இந்த குழுவின் உழைப்பை நீங்கள் உணர்வீர்கள். ராதாரவி, நிழல்கள் ரவி சார் ஆகியோரின் குரலுக்காகவே இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம்.
 
அமலா பால் ரீ-டேக் வாங்கவே மாட்டார். அவருக்கு காட்சிகள் குறைவு என்றார்கள், ஆனால் அழுத்தமான கதாபத்திரமாக இருக்கும்.
 
காளி வெங்கட், ராமதாஸ் இருவருமே நல்ல நடிகர்கள். இந்த படத்தின் வெற்றியில் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு பாதி பங்கு உண்டு,
பின்னணி இசை மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. மனதளவிலும், உடலளவிலும் சோர்ந்து போனாலும் எனக்கு சிறந்த பங்களிப்பையே செய்தார் எடிட்டர் ஷான் லோகேஷ்.
 
பிவி சங்கர் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும். இந்த படம் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் அருண்ராஜா காமராஜ். திரையரங்கில் போய் பார்க்கும் யாரையும் இந்த படம் ஏமாற்றாது” என்றார் 
 
இந்த விழாவில் நடிகர் காளி வெங்கட், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், கலை இயக்குனர் கோபி ஆனந்த், ஒளிப்பதிவாளர் பிவி சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
 
அக்டோபர் 5ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *