தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணியும்போட்டியிடுகின்றன.
இவ்விரண்டு அணிகளைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள் அணி, முன்னேற்ற அணி என நான்கு அணிகள் போட்டியிட்டாலும்,
தேர்தல் களத்தில்” தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணிக்கும்-தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணிக்கு இடையில் மட்டுமே போட்டி என்கிற சூழல் நிலவி வருகிறது

ஒரு வார காலமே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது
இந்த நிலையில் கெளரவ செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி வேட்பாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது
“VPF பற்றிய தெளிவான முடிவினை எந்த சங்கமும் கூறவில்லையே?”
“தயாரிப்பாளர்கள் பல கூறுகளாக பிரிந்து இருப்பதால் இப்படி ஒரு கேள்வி வருகிறது தியேட்டர் உரிமையாளர்களும், டிஜிட்டல் நிறுவனங்களும் கூட்டு கொள்ளை நடத்தி வந்தது அம்பலத்திற்கு வந்துவிட்டது.
தேர்தல் முடிந்தபின் VPF கட்டணத்தை முற்றிலுமாக ஒழிக்க முயற்சிப்போம் அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.

VPF கட்டணம் அறவே ரத்து செய்யும் நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கநிதி நிலை பலப்பட வாய்ப்பு உண்டு”
“VPF கட்டணத்துக்கும் சங்கநிதி ஆதாராத்திற்கும் என்ன தொடர்பு?
“ஒவ்வொரு வருடமும் சுமார் 200 கோடி ரூபாய் டிஜிட்டல் புரவைடர்களுக்கு கட்டணமாக தயாரிப்பாளர்கள் மூலம் வருமானமாக கிடைக்கிறது.
இதனை முழுமையாக ரத்து செய்கிறபோது தயாரிப்பாளர்களிடம் குறைந்தபட்சம் 5% சங்க அறக்கட்டளைக்கு சேவை கட்டணமாக பெற்றாலே 10 கோடி ரூபாய் கிடைக்கும்.
பிற வணிக ரீதியான வருவாய்மூலம் 20 கோடி ரூபாய் கிடைக்கும் திட்டமும் உடனடியாக அமுல்படுத்தப்பட உள்ளது” என்றார்