செப்டம்பர் 21இல் திரைக்கு வரும் ‘ராஜா ரங்குஸ்கி.’

வாசன் புரொடக்சன் மற்றும் பர்மா டாக்கீஸ் தயாரிப்பில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடிக்க, 
 
பர்மா , ஜாக்சன் துரை ஆகிய படங்களை இயக்கிய தரணிதரன் இயக்கி இருக்கும் படம் 
 
 யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் இதுவரை சிறு சிறு வேடங்களில்  நடித்து விஜய் சத்யா ஒரு முழு நீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
விஜய் சத்யா

வரும் செப்டம்பர் 21ஆம் தேதி படம் வெளியாகும் நிலையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 

 
படத்தின் முன்னோட்டம் சிறு முன்னோட்டம் மற்றும் பாடல்கள் திரையிடப்பட்டன .
 
 ஒரு வசதியான குடியிருப்பு .. கொலை செய்யப்படும் ஒரு பெண் … சந்தேகப்படும்படி நடந்து கொள்ளும் நாயகன் (சிரிஷ்)  ,
அந்த சந்தேகத்தை ஆதாரமாக்கும் வகையில் செயல்படும் சக போலீஸ் அதிகாரி ( விஜய் சத்யா)  என்று…
 
படத்தின் கதை போவது , காட்சிகளில் தெரிந்தது .  படமாக்கல் நன்றாக இருந்தது   
 
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சத்யா , ” இது எனக்கு முதல் மேடை . இந்த மேடையை அமைத்துக் கொடுத்த  இயக்குனர் தரணிதரன், தயாரிப்பாளர் வாசன் ஆகியோருக்கு நன்றி.
சின்ன சின்ன வேடங்கள் நடிச்சுட்டு இருந்தேன். ஷார்ட் பிலிம்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன் .
 
அதைப் பார்த்துட்டு தரணிதரன் சார், ‘ உங்க முகம் ரஃப் -ஆ இருக்கு . காமெடி ட்ரை பண்ணுவோம் வாங்க’ன்னு தைரியம் உற்சாகம் கொடுத்து நடிக்க வச்சார்.
 
படத்துக்குள் வந்தேன் . ஆரம்பத்துல சின்ன படம்னுதான் நினைச்சேன் .
ஆனா போகப் போக யுவன் சங்கர் ராஜா எல்லாம் வந்ததும் பெரிய படமா ஆகிடுச்சு .
 
இயக்குனர் , தயாரிப்பாளர் , ஹீரோ மூவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
படம் ரொம்ப அருமையா வந்திருக்கு. எனக்கும் இந்த படத்துக்கும் உங்க எல்லாருடைய ஆதரவும் வேணும் . ” என்றார் .
“தரணிதரன் சாரின் பர்மா, ஜாக்சன் துரை படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் எப்படி என்னை ஒரு போலீஸாக யோசித்தார்  என்று தெரியவில்லை.
 
அந்தக் கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருந்தது. முதலில் எனக்கு நம்பிக்கையே இல்லை, ஆனால் இயக்குனர் சொன்னபடி நடித்தேன்.
 
இப்போது படத்தில் பார்க்கும்போது நன்றாக இருக்கிறது. சாந்தினி வித்தியாசமான படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். சிரிஷ் மிகவும் எளிமையாகப் பழகுபவர்.
நண்பர்களுக்கு நல்ல மரியாதை கொடுப்பவர். யுவன் சார் படத்துக்கு தன் இசையின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்” என்றார் நடிகர் கல்லூரி வினோத்.
 
“சிரிஷ் சின்ன வயதில் இருந்தே எனக்கு பழக்கம். இந்த படத்தில் நான் நடிக்க காரணமே சிரிஷ் தான். அவர்தான் இயக்குனரிடம் என்னை பரிந்துரை செய்தார்.
 
எனக்கு இந்த படத்தில் பாராட்டுக்கள் கிடைத்தால், 
அவை இயக்குனரையே போய்ச் சேரும்” என்றார் நடிகர் ஜெயக்குமார்.
 
நாயகி சாந்தினி தமிழரசன் பேசும் போது, “வஞ்சகர் உலகம் படத்தைத்  தொடர்ந்து மீண்டும் இன்னொரு மர்டர் மிஸ்டரி படம். ஆனால் இரண்டுமே வித்தியாசமான கதைகள் .
 
இந்த படத்தின் கதையைக் கூட கேட்க எனக்கு வாய்ப்பில்லை, உடனே ஓகே சொல்ல வேண்டியதாயிற்று.
ஆனால் படத்தில் நடித்து முடித்தபோதுதான் கதாபாத்திரம் பற்றி உணர்ந்தேன். சிரிஷ் நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒரே டேக்கில் நடிக்கும் நடிகர்.
 
ஆனாலும் ஒரு ஷாட்டுக்கு மட்டும் 19 டேக் வாங்கினார். அது என்ன காட்சி என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
யுவன் ஷங்கர் ராஜா என் முதல் படத்தில் ஒரு பாடகராக, எனக்கு ஒரு ஹிட் பாடல் கொடுத்தார்.
இப்போது இந்தப் படத்தில் இசையமைப்பாளராக எனக்கு ஒரு சூப்பர் ஹிட் பாடல் கொடுத்திருக்கிறார்” என்றார் 
 
 நாயகன் மெட்ரோ சிரிஷ் தனது பேச்சில், “ படத்தை ஆரம்பிக்கும் போது ஒரு அப்பாவியான முகம் தேவைப்பட்டது, அதற்கு நான் பொருத்தமாக இருந்ததால் நடிக்க உள்ளே வந்தேன்.
 
முதல் விஷயம்…  யுவன் சார் இசைதான் இந்த படத்துக்கு வேணும் என நான் ரொம்ப தீவிரமாக இருந்தேன்.
தயாரிப்பாளர், இயக்குனர், நான் மூவரும் அவரை போய் சந்தித்தோம். அவர் கதையைக்  கேட்டு உடனே ஒப்புக் கொண்டார்.
 
சாந்தினி நல்ல தோழி, நல்ல நடிகை. திடீரென ஒரு இக்கட்டான சூழலில், நான் அழைத்ததற்காக கதையே கேட்காமல் நடிக்க வந்தார்.
 
என் மீதும், இயக்குனர் மீதும் அவர் வைத்திருந்த நம்பிக்கையை அது காட்டுகிறது. அவர் கதாபாத்திரமும் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்.
 
இயக்குனர் தரணிதரன் பேசுகையில், “மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த் என் நண்பர், அவர் மூலமாகத்தான் சிரிஷ் எனக்கு அறிமுகம்.
 
‘நானே இந்த படத்தை தயாரிக்கணும்னு ஆசைப்பட்றேன், எனக்கு நிதி உதவி மட்டும் தேவை’ என்றேன். தயாரிப்பாளராக சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்து விட்டோம்.
 
படத்துக்கு அடையாளமாக ஒருவர் வேண்டும் என யோசித்தபோது, யுவன் சார் என் மனதுக்குள் வந்தார். பட்ஜெட் பற்றி யோசித்தோம்.
என்ன ஆனாலும், ‘சரி…. முயற்சி செய்து பார்ப்போம்’ என நினைத்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான தொகையை மட்டுமே  பெற்று, 
 
எங்களுக்காக பெரிய உதவியை செய்தார் யுவன். சிரிஷ் நல்ல நடிகர். திட்டமிட்டதை விட குறைந்த நாட்களில் படத்தை முடிக்க அவர் மிகப்பெரிய காரணம்.
 
சாந்தினி கற்பூரம் மாதிரி, சொன்னதை சரியாக புரிந்து கொண்டு நடிப்பை கொடுப்பார். தமிழ் தெரிந்த நல்ல நடிகை, அவரே இந்த படத்துக்கு டப்பிங்கும் பேசியிருக்கிறார்.
எடிட்டர் இந்த படத்தின்மூலம்தான் அறிமுகம் ஆகியிருக்க வேண்டியது, அதற்குள் மேயாத மான் ரிலீஸ் ஆகி பிரபலமாகியிருக்கிறார்.
 
கலை இயக்குனர் கபிலன் ஒரு இலங்கை தமிழர், சென்னைக்கும் இலங்கைக்கும் வந்து வந்து  வேலை செய்திருக்கிறார். 
 
நிறைய நல்ல உள்ளங்களின் ஆதரவால்தான் இந்த அளவுக்கு வந்திருக்கிறது. 8 மாதத்தில் படத்தை முடித்து விட்டோம்.
ரிலீஸ் தேதியை நாம் முடிவு செய்தாலும் அதை இந்த சினிமாவில் சாத்தியப்படுத்த முடிவதில்லை. இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர வேண்டும்” என்றார்
 
உண்மைதான். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *