ரஜினியின் கார் நம்பர் போலியானதா ?

ரஜினிக்கும் போத்ராவுக்குமான கொடுக்கல் வாங்கல் கோர்ட் வழக்கு விவகாரங்கள் அனைவரும் அறிந்தவைதான் . 

இந்த நிலையில்…..
 
அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரஜினியை ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு அழைத்துப் போகும் கார் என்று……
 
ஒரு காரின் புகைப்படம்  நமக்கு வாட்ஸ் அப்பில்  வந்துள்ளது . அதை அனுப்பியுள்ள ஒரு எண்ணின் புரபைலில் போத்ராவின் புகைப்படம் உள்ளது . 
 
வாட்ஸ் அப் எண்ணின் புரபைலில் உள்ள புகைப்படம்

அந்த வாட்ஸ் அப் செய்தியில் ‘புகைப்படத்தில் உள்ள — ரஜினி பயன்படுத்தும் காரில் TN06R 9297 என்ற எண் பயன்படுத்தப் பட்டுள்ளது .

 
ஆனால் அப்படி ஒரு  எண்  பற்றி போக்குவரத்து   எண், பதிவு அலுவலகத்தில் தகவலே இல்லை ” என்று கூறப்பட்டுள்ளது . 
 
அதாவது இந்த  எண் எந்த வாகனத்துக்கும் வழங்கப்படவில்லை என்று பொருள் . 
 
”சம்மந்தப்பட்ட எண்ணுக்கு போன் செய்தால் , போத்ராவே போன் எடுத்து பேசுகிறார் . இது எனது  பொன் நம்பர் மற்றும் வாட்ஸ் அப் நம்பர்தான்” என்கிறார் 
 
போத்ரா  சொல்லும் தகவல் உண்மையா ?
 
ஆம் எனில், அந்த காரில் வந்தது ரஜினிதானா ?
 
ஆம் எனில் அனுமதிக்கப் படாத போலி நம்பர் பொறித்த காரை ரஜினி பயன்படுத்துவது சரியா ? 
 
ஒரு வேளை அது  நட்பு ரீதியாக ரஜினியை அழைக்க வந்த கார் எனில் அது யாருடைய கார் ?
 
இல்லை எனில் ரஜினி மீது கூறப்படும் இந்த குற்றச் சாட்டுக்கு ரஜினி தரப்பின் எதிர்வினை என்ன ?
 
வீண் குற்றச் சாட்டை ரஜினி ஏன் சுமக்க வேண்டும் ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *