ராஜு முருகன் எழுத்தில் சரவணன் ராஜேந்திரன் இயக்கும் படத்தின் பூஜை !

ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில்  தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனம்  எழுத, கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாக,
 
 பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றிய சரவணன் ராஜேந்திரன், 
 
திரைக் கதை எழுதி இயக்கும் புதிய படம் ஒன்று உத்வேகமாக உருவாகத் துவங்கி இருக்கிறது .
 
படம் பற்றிப் பேசிய ராஜுமுருகன், 
 
” படத்தை இயக்கும் சகோதரர் சரவணன் ராஜேந்திரன் நீண்ட அனுபவமும் ரசனையும் கொண்டவர் . படத்தை மிக சிறப்பாகக் கொண்டு வருவார் .
 
எனவே இந்தப் படத்துக்கு மிக உற்சாகமாக என்னால் எழுத முடிந்தது . அவர் வெற்றி என் சந்தோசம் . அது எனக்கு வாய்க்கும் . 
 
(தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது பழமொழி. தம்பி உடையான் படத்துக்கு அஞ்சான் என்பது புது மொழி !)
 
அடர்த்தியான கதை, எளிமையும் அழகியலுமான திரைக்கதை, நல்ல தயாரிப்பாளர், இயக்குனர்  எல்லாம் அமைந்துவிட்டது.
 
இதன் பிறகு தொடர்ந்து கதாநாயகனுக்கான தேடலில் இருந்தோம். பலரையும் பார்த்து எதுவும் சரியாக அமையாமல் சலித்து போன நேரத்தில், 
 
நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு நானும்  இயக்குனர் சரவணன் ராஜேந்திரனும்   கோவை சென்றிருந்தோம். அங்கே திருமண விழாவில் சாப்பாடு நன்றாக இருந்தது.
 
இந்த அற்புதமான உணவுக்கு காரணமான சமையல்கலை நிபுணரான ரங்காவை நண்பர் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
 
அவரைப் பார்த்து பேசிய தருணத்தில் சட்டென்று இவர் நமது கதைக்கு சரியாக இருப்பாரோ என்று தோன்ற நான் சரவணன் ராஜேந்திரனைப் பார்த்தேன்.
 
அவரும் என்னைப் பார்த்தார். இருவருக்கும் பிடித்துப்போக அவரிடம் நடிப்பதற்கு உங்களுக்கு விருப்பமா என்று கேட்டோம்.
 
முதலில் தயங்கிய ரங்கா சிறிய மௌனத்திற்க்கு பின் ஒப்புக்கொண்டார். இப்போது அர்ப்பணிப்போடு எங்களோடு இணைந்திருக்கிறார் ” என்றார் ராஜுமுருகன்.
 
இந்தப் படத்தின் நாயகி ஸ்வேதா திரிபாதி. இசை ஷான் ரோல்டன். கேமரா- மாநகரம் செல்வம்.
 
ஆர்ட் டைரக்‌ஷன்- சதீஷ். ஸ்டண்ட் – பில்லா ஜெகன்.  படத்தின் தலைப்பு, மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
                                                                                                                       சான் ரோல்டன்

ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்ற படத்துவக்க விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குடும்பத்தினர்,

 
ஆரா மகேஷ் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்துக்கொண்டு  வாழ்த்தினர்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன்

புனைப் பெயர் : ராஜ திருமகன்

கல்வித் தகுதி : B.E. Mechanical

பிரசுரமான முதல் படைப்பு : கவிதை —

பெங்களூரில் நடந்த ‘பெரிய’ மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை…..
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )

பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்

மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது

விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)

விளம்பர முகவர் —ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)

கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் –மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)

சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)

நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)

பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)

சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )

தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )

நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )

நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )

திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் –ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)

நடிகர் — முழு நீள கதாபாத்திரம் — அஜந்தா (தமிழ் , தெலுங்கு )

— நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)

— கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்

பாடலாசிரியர் — அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),

முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )

அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து

தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *