ரம்யா நம்பீசனின் ‘வட போச்சே’ !

Katham-Katham-Movie-Trailer-Launch-Photos-20100  படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியதோடு ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் , விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள், நானே ராஜா நானே மந்திரி , கார்த்திக் நடித்த கேள்வியும் நானே பதிலும் நானே , உள்ளம் கவர் கள்வன் ஆகிய படங்களை தயாரித்த –  மறைந்த தூயவனின் மகனும் திரைப்படக்கல்லூரி மாணவருமான பாபு தூயவன் இயக்கி இருக்கும் படம் கதம் கதம் .

“பொதுவாக படங்களில்  மோசமான போலீஸ் அதிகாரியோடு ஹீரோ மோதுகிற கதையும், நல்ல போலீஸ் அதிகாரியோடு வில்லன் மோதுகிற கதையும்தான் பார்த்து இருப்பீர்கள். ஆனால் இந்தப் படம் ஒரு நல்ல போலீஸ் அதிகாரிக்கும் மோசமான போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் போராட்டம் . இதுவரை தமிழ் சினிமாவில் இந்தக் கதை வந்ததில்லை என்றே நினைக்கிறேன் ” என்று படத்துக்கு அறிமுகம் தருகிறார் இயக்குனர்.

Katham-Katham-Movie-Trailer-Launch-Photos-1நல்ல போலீஸ் அதிகாரியாக நந்தாவும் , அடாவடி போலீஸ் அதிகாரியாக சதுரங்க வேட்டை புகழ் நட்ராஜும் நடித்து கலக்கி இருப்பது பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட டிரைலர் மற்றும் பாடல்களில் தெரிந்தது . தாஜ்நூர் இசையில் பாடல்கள்  ஈர்க்கும்படியாகவே உள்ளன . நந்தாவுக்கு ஜோடியான அம்புலி படத்தில் நடித்த சனம் ஷெட்டியும் நட்ராஜுக்கு ஜோடியாக அரும்பு மீசை குறும்பு பார்வை படத்தில் நடித்த ஷாரிகாவும் நடித்து இருக்கிறார்கள்.

அபோகலிப்டா , சூப்பர் மேன்  ரிட்டர்ன்ஸ், ஃ பண்டாஸ்டிக்ஃ  போர் , கேப்டன் அமெரிக்கா, இம்மார்டல்ஸ் படங்களை உருவாக்கிய பானாவிஷன் என்ற கேமராவை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படத்தின் படத் தொகுப்பாளர்  முத்துலட்சுமி வரதன்  கமல் யூனிட்டில் பணியாற்றியவர் .

Katham-Katham-Movie-Trailer-Launch-Photos-2படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் வட போச்சே என்ற ஒரு பாடலை பாடியுள்ளார் . (உத்தமான உப தொழில்!)​ . இது என்ன மயக்கம் நேர பாடலை கிரீன் மேட்  தொழில் நுட்பத்தில் படமாக்கி இருக்கிறார்கள் .(ஒரு கோடி செலவு பண்ணி செட் போட்டு எடுத்தோம்னு  பொய்  சொல்லிக்கத் சொல்லத் தெரியாம.. இப்படியா ஒத்துக்கறது ?)

படத்துக்கு இரண்டு வசனகர்த்தாக்கள் . இதில் ராதாகிருஷ்ணன் என்பவர் நல்ல போலீஸ் அதிகாரியான நந்தா கேரக்டருக்கான வசனங்களையும் நிமிஷ் என்பவர் கேட்ட போலீஸ் அதிகாரியான நடராஜ் கேரக்டருக்கு பொருத்தமான வசனங்களையும் எழுதி இருக்கிறார்களாம். இது புதுசு .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →