ரூபாய் @ விமர்சனம்

941A2525

காட் பிக்சர்ஸ் மற்றும் ஆர் பி கே என்டர்டைன்மென்ட் சார்பில் இயக்குனர் பிரபு சாலமன்,மற்றும் ஆர். ரவிச்சந்திரன் தயாரிக்க, 

கயல் சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன் , அறிமுகம் கிஷோர் ரவிச்சந்திரன் நடிப்பில் 
சாட்டை படத்தை இயக்கிய அன்பழகன்  கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ரூபாய் . நோட்டு செல்லுமா ? பார்க்கலாம் . 
வட்டிக்கு விடும் சேட்டிடம் பணம் வாங்கி அதில் பார்ட்னர் ஷிப் போட்டு சரக்கு வேன் வாங்கி ஓட்டும் நண்பர்களான பரணியும் பாபுவும் (முறையே சந்திரன், கிஷோர் ரவிச்சந்திரன் ) ,  
VEL_3663
முதல் முறையாக லோடு ஏற்றிக் கொண்டு சென்னை கோயம்பேடு வருகிறார்கள் . சரக்கை இறக்கி விட்டு விட்டு காத்திருக்கும் நிலையில் , 
வீடு காலி செய்து புது வீடு போகும் ஓர் எளிய மனிதர் (சின்னி ஜெயந்த்)  வீட்டு சாமான்களை ஏற்ற ஒரு வண்டி தேடி அலைவதைப் பார்கின்றனர் .
அதை ஏற்றிக் கொடுத்து விட்டு காசு வாங்கிக் கொண்டு போகலாம் என்று முடிவு செய்து பெரியவர் வீட்டுக்குப் போகின்றனர் .
அங்கே பெரியவரின் மகளை (ஆனந்தி) பார்த்ததும் பரணிக்குக் காதல் . 
941A1277
பெரியவருக்கு வீடு எதுவும் செட் ஆகாத நிலையில் அவருக்கும் பாபுவுக்கும் சண்டை வருகிறது .  ஒரு நிலையில் எல்லோரும் தேனிக்குப் போக முடிவு செய்து கிளம்புகிறார்கள் .
இந்த நிலையில் பேங்கை கொள்ளையடித்து சுமார் மூன்று கோடி ரூபாயை எடுக்கும் ஒரு கொள்ளைக்காரன் (ஹரீஷ் உத்தமன்) வழியில் வாகன சோதனைக்கு பயந்து ,
நூறு மீட்டர் தூரத்துக்குள் சிக்னல் தரும் ட்ரான்ஸ்மிட்டர் பொருத்திய  பணப் பையை,  இந்த சரக்கு வேனில் போடுகிறான் . சுங்கச் சாவடி கடந்த நிலையில் வேனைத் தவற விடுகிறான் . 
வழியில் சரக்கு வேனில் பாபுவுக்கும் பெரியவருக்கும் சண்டை வர , பெரியவருக்கு மாரடைப்பு வர , அதே  நேரம் பணப்பை  விரிய,  நாலு லட்ச ரூபாய் எடுத்து சிகிச்சை அளித்து காப்பாற்றுகின்றனர் . 
VEL_2784
அப்புறம் துணி மணி நகைக்கு , பணம் எடுக்கின்றனர் . மூணாறு பக்கத்தில் உள்ள பெரியவரின் சொந்த ஊருக்குப் போய், பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள அவரது பூர்வீக வீட்டை 25 லட்ச ரூபாய்க்கு வாங்குகின்றனர் . 
ஹோட்டல் ஆரம்பிக்கின்றனர் . ஊர்க் கோயில் திருவிழாவை முழுக்க தங்கள் செலவில் நடத்துகின்றனர் . 
ஒரு நிலையில் கொள்ளைக்காரன் அவர்களைப் பிடிக்கிறான் . செலவான தொகையை திருடித் தரச் சொல்கிறான் . முடியாத நிலையில் இவர்களைப்  ஒரு வங்கிக் கொள்ளையில் ஈடுபடுத்துகிறான் . 
அந்த நேரம் பார்த்து என்கவுண்டர் போலீஸ் அவர்களை சுற்றி வளைக்க அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த ரூபாய் .
பணத்தின் மீதான ஆசையே தீமைகளுக்கு வேர் என்கிறது படம் . 
941A1103 (1)
சரக்கு வேன் நண்பர்கள், சென்னைப் பயணம்,  வாடகை வீடு அலைச்சல் , பணப் போராட்டம், எளிய காதல் என்று போகும் படம்,  ஒரு நிலையில் பல கோடி பணப்பை என்ற சாத்தியம் மிக்க அதிசயத்துக்குள் நுழைகிறது . 
எனினும் இயல்பாகவே பயணிக்கிறது . கிராமத்து வாழ்வியல் காட்சிகள் அழகு . செலவழித்த பணத்தை அவர்களையே திருடித் தரச் சொல்லும் வில்லன் கேரக்டர் கவனிக்க வைக்கிறது . 
கடைசியில் எதிர்பாராத நெகிழ்வான கிளைமாக்சில் முடிகிறது 
எளிய காதலர்களாக சந்திரனும் ஆனந்தியும் அழகு, யதார்த்தம்,  பாந்தம் .  நண்பராக வரும் கிஷோர் ரவிச்சந்திரன் சிறப்பு . 
941A7066
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரன்னிங் ரோலில் வின்னிங் போஸ்ட் தொடுகிறார் சின்னி ஜெயந்த் 
கொள்ளைக்காரனாக வரும் ஹரீஷ் உத்தமன் மிரட்டுகிறார் 
இமானின் பின்னணி இசை படத்துக்கு ஆக்சிஜன் ஊட்டுகிறது . வி. இளையராஜாவின் ஒளிப்பதிவில் கண்களைக் கட்டிப் போடுகிறது மூணாறின் அழகு .
வீடு தேடும்ஆ ரம்பக் காட்சிகளில் இன்னும் தெளிவு தேவை . பெரியவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்ற சித்தரிப்பு இந்தக்  கதைக்கு எதற்கு ?
நாலு பேரையும் காரில் வைத்துக் கொண்டு கொள்ளைக்காரன் கேரக்டர் ஊர் ஊராகக் கார் ஓட்டுவது எல்லாம் ரொம்ப ஓவர் . 
941A8388
விட்டால் எட்டு போட்டுக் கூட காட்டுவார் போல. 
கடைசி காட்சிகளை இவ்வளவு கமர்ஷியலாக மாற்றி இருப்பது படத்தின் அடிநாதமாக இருக்கும் வாழ்வியலில் இருந்து விலகி நிற்கிறது .
இன்னும் கவனமாக சிறப்பாக படத்தின் கடைசிக் கட்டக் காட்சிகளையும் கிளைமாக்சையும் உருவாக்கி இருக்கலாம் .
என்றாலும் படம் மனதில் நிற்கிறது 
ரூபாய் …. டெபாசிட் பண்ணலாம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *