பேய்க்குப் பயப்படும் அனிருத் இசையில் பேய்ப்படம் ‘ரம்’

rum-1
ஆல் இன் பிச்சர்ஸ்’ சார்பில் விஜய ராகவேந்திரா  தயாரிக்க, 
வேலை இல்லாப் பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த  ஹ்ரிஷிகேஷ் நாயகனாக நடிக்க , 
உடன் ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், மற்றும் முக்கிய வேடங்களில் நரேன்   விவேக் ஆகியோர் நடிக்க, 
 கனடாவில் டைரக்ஷன் கோர்ஸ் படித்த அறிமுக இயக்குனர்  சாய்பரத் இயக்கி இருக்கும் ‘ படம் ‘ரம்’ 
படத்தின் அழைப்பிதழ் கிடைக்கப் பெற்ற அனைவரும் சந்தோஷத்தில்  பல ரவுண்டு வந்தார்கள்…..
rum-2
— என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் .
(நடிகர் விவேக் பாணியில் சொல்வது என்றால் புரிஞ்சவங்க புரிஞ்சுக்குங்க , புரியாதவங்க புரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க )
 படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ,
நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், நடிகர் ஆதவ் கண்ணதாசன், சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் கதாநாயகன் கோகுல் ஆனந்த் ஆகியோரும், 
rum-3
ரம் திரைப்படத்தின் படக்குழுவினர்களான தயாரிப்பாளர்   ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா, இயக்குநர் சாய் பரத், இசையமைப்பாளர் அனிரூத், ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, நரேன், விவேக், அம்ஜத்,
அருண் சிதம்பரம், பாடகர் சிட் ஸ்ரீராம்,  பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேக் வேல்முருகன் மற்றும் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு ஆகியோர் பங்கேற்றனர்.
நடிகர் நரேன் பேசும்போது ” இந்தப் படத்துக்குன் என்னை கேட்டபோது படத்தில் நான் ஹீரோ இல்லை என்பதால் நடிக்கத் தயங்கினேன். ஆனால் இசை அனிருத் என்றார்கள் .
rum-6
அனிருத் இசையில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே படத்தை ஒத்துக் கொண்டேன் ” என்றார் 
“ரம் திரைப்பட குழுவினரை போன்ற இளம் கூட்டணியோடு பணியாற்றியது, எனக்கு புது உற்சாகத்தை அளித்ததோடு மட்டுமில்லாமல், என்னை மீண்டும் இளமையாகவும் மாற்றி இருக்கின்றது.
நம்முடைய இளைஞர்களின் மனதை இசையால் கவருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.ஆனால் அதை தன்னுடைய மனதை வருடும் இசையால் செய்திருக்கிறார் அனிரூத். 
இந்தப்  படத்தில் பெரிய புகழ்பெற்ற நடிகர்கள் இல்லாமல் இருக்கலாம் . ஆனால் அனிருத் இசை என்ற ஒன்றே அந்தக் குறையை தீர்க்கும் ” என்றார்  நடிகர் விவேக்.
“பொதுவாகவே பேய் படங்கள் என்றால் எனக்கு அவ்வளவு பயம்….
rum-4
இதுவரை நான் பார்த்த ஒரே பேய்ப்படம் மை டியர் குட்டிச்சாத்தான் மட்டும்தான் 
அப்படிப்பட்ட என்னை இந்த பேய் படத்துக்கு இசை அமைப்பாளர் ஆக்கி விட்டார்கள் . ..படத்தை துவங்கும்போது எனக்கு இது பேய்ப்படம் என்பதே தெரியாது 
 13 ஆம் நம்பர் என்பது பேய்களை குறிக்கும் எண் என்பதால், அந்த எண்ணின் மீதும் எனக்கு பயம் தான். ஆனால் தற்போது நான் இசையமைத்திருக்கும் இந்த ‘ரம்’, என்னுடைய 13 ஆவது படம்.
அதுவும் பேய் படம்.” என்று பேச்சிலேயே உருவேற்றினார்  இசையமைப்பாளர் அனிரூத்.  
“ஒரு திரைப்படத்தை தயாரித்துவிட்டு, அதை வியாபாரம் செய்வது தான் மிகவும் கடினமான காரியம்….ஆனால் அந்த வியாபாரத்தை,
rum-5
தன்னுடைய கடின உழைப்பால் சிறப்பான விதத்தில் செய்து முடித்திருக்கும்  இளம் தயாரிப்பாளர்  ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திராவை பார்க்கும்பொழுது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இந்த ரம் திரைப்படம் அமோக வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்…..” என்றார் ஸ்டுடியோ  கிரீன்’ ஞானவேல் ராஜா.
rum-7
படத்தை முழுமையாக வியாபாரம் செய்து விட்டே ஆடியோ லான்ச் வரை வந்துள்ளார்  விவரமான தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா  

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *