சகா @ விமர்சனம்

செல்லி சினிமாஸ் சார்பில் ஆர் செல்வகுமார் மற்றும் ராம் பிரசாத் இருவரும் தயாரிக்க,

சரண் , பிருத்வி , கிஷோர் , ஸ்ரீராம், பாண்டி  ஆய்ரா, நீரஜா நடிப்பில் முருகேஷ் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் சகா .

இந்த சகா தோழனா , தொல்லையனா ? பேசுவோம் .

அனாதைகளாக உலகை எதிர்கொண்டு, ஒரு திருநங்கை பெண்மணியால் வளர்க்கப்பட்ட

சத்யா( சரண்) மற்றும் கதிர் ( பாண்டி) இருவரும் , அந்த வளர்ப்புத் தாயை கொன்ற நபர்களை எதிர்த்து

அதன் விளைவாக ஜெயிலுக்கு வருகிறார்கள் .

 இந்த நண்பர்களுக்கும் ஜெயிலுக்குள் இளம் தாதாவாக இருக்கும் கைதி கங்காவுக்கும் (பிருத்வி)   இடையே பகை உண்டாகிறது .

 ஜெயிலுக்குள் காசு வைத்து சூதாட்டமாக ‘மல்யுத்தம் செய்கிறோம்’  என்ற பெயரில் பிடிக்காதவர்களை கொன்று ஒழிப்பது கங்காவின் வேலை .

 காதலித்த பெண்ணுக்காக காசு திருடி ஜெயிலுக்கு வரும் சிவாவையும் (கிஷோர்) கங்கா சீண்டுகிறான் .

எனவே  சத்யா மற்றும் கதிருக்கு சிவா  நண்பன் ஆகிறான் . 
சிறைக்கு வரும் இன்னொரு சிறுவன்  ஜாக்கிக்கும்( ஸ்ரீராம்) , சத்யாவுக்கும் ஒத்துப் போகாத நிலை .

சிறையில் சத்யாவை கங்கா கொல்ல திட்ட மிட , அந்த பிரச்னையை பாண்டி தன்பக்கமாக திருப்பிக் கொள்ள , அதன் விளைவாக பாண்டியை கொல்கிறான் கங்கா . 

கங்காவை கொல்ல சத்யா திட்டமிடுகிறான் . 

அந்த நேரம் பார்த்து கங்கா சிறையில் இருந்து வெளியே வந்து விட , அவனை கொல்வதற்காக சத்யாவும் , காதலியை பார்ப்பதற்காக சிவாவும் தப்பிக்க திட்டமிடுகின்றனர் . 

அதை ஜெயில் அதிகாரியிடம் ( தீனா) காட்டிக் கொடுப்பது போல பாவ்லா செய்யும் ஜாக்கி , ஒரு நிலையில் சத்யா,  சிவாவுடன் சேர்ந்து தப்பிக்க  விரும்புகிறான் . 

ஆனாலும் அவனை நம்பாத சத்யா, சிவா இருவரும் அவனை மாட்டி விட்டு விட்டு தாங்கள் மட்டும் தப்பிக்கின்றனர் . 

தப்பிய இருவரில் சத்யா கங்காவை கொல்லவும் சிவா காதலியை பார்க்கவும் போகின்றனர் . 

இருவரையும் பிடிக்க ஜெயிலர் வெறியோடு தேடுகிறார் 
ஜாக்கியும் தப்பிக்கிறான் . 

ஆறு பேரும் சந்தித்த போது நடந்தது என்ன என்பதே இந்த சகா . 
வழக்கமான கதைதான் .

ஆனால் உண்மைக்கு மிக நெருக்கமான எடுத்து படத்தின்  முதல் பாதியில் நாமும் ஜெயிலுக்குள் கைதிகளில் ஒருவராக இருக்கும் உணர்வை தருகிறார் இயக்குனர் . சபாஷ் 

சரண் , பிருத்வி , கிஷோர் , ஸ்ரீராம், பாண்டி  ஆய்ரா, நீரஜா  அனைவருமே சிரமப்பட்டு உழைத்தும்  நன்கு நடித்தும் உள்ளனர் . 

பாடல்கள் எழுதி இசை அமைத்து இருக்கும் ஷபிர் அசத்தி இருக்கிறார் 

”யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே.”

– என்ற குறுந்தொகைப் பாடலை பயன்படுத்தி அவர் எழுதி இருக்கும் பாடலும் அந்த ”ஏலேலே ஏலேலோ…  ஓ ஓ…  ஹம்மிங்கும்

அந்த தீம் மியூசிக்கும்….  ஆகா ஆகா ஆகா …… காதில் தேன் பாய்ச்சுகிறது . படத்தின் பெரும் ஆறுதல் பாடல்களும் இசையும்.

நிரன் சந்தரின் ஒளிப்பதிவும் ஜெயில் காட்சிகளில் மிக சிறப்பு .

 முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் நண்பர்கள் ஜெயிலில் இருந்து தப்பிய உடன் குறைகிறது .

 அப்புறம் தறிகெட்டு அலைகிற திரைக்கதை , ஒரு முழுமையான நோக்கம் இல்லாத ஒரு வகையில் இருக்கிறது .சில காட்சிகளில் ஓவர் பில்டப் வேறு படத்தின் உடம்புக்கு ஆகலை 

ஜாக்கி பற்றிய அந்த கடைசி திருப்பம் அட போட வைக்கிறது . எனினும் திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *