சாய் இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் 6ஆம்ஆண்டு பட்டமளிப்பு விழா!

IMG_8159

Picture 2 of 31

சாய் இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ் மெண்ட்டின் 6வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

நிகழ்ச்சியில் சாய் இண்டர் நேஷனல் முதல்வர் வினோத்குமார்  அனைவரையும் வரவேற்றார்..

தொலைக்காட்சி புகழ் தலைமை செஃப்கள்  சன்டிவி’ கிச்சன் கலாட்டா’ புகழ் பழனி முருகன்,  ஜிடிவி சித்தார்த், ‘புதுயுகம்’ பாலகிருஷ்ணன்  ,

ஹோட்டல் அம்பிகா எம்பயர் பொது மேலாளர் முரளி, ஹாப்லிஸ் ஹோட்டல் பொது மேலாளர்  சுவாமி சக்திவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு ,

படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தனர்.

விழாவில் சாய் இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட்டின் பயிற்சி மற்றும் ப்ளேஸ்மெண்ட் அலுவலர் ராமலிங்கம்,

துறை நிபுணர்கள் ,நிர்வாக அலுவர்கள் வல்லராஜ், ஜெயராமன், முருகன், வெங்கடேஷ் சதிஷ்குமார், ராஜலட்சுமி, முத்து லட்சுமி ,பாஸ்கர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

ஹோட்டல் அம்பிகா எம்பயர் பொது மேலாளர் முரளி பேசும் போது” படிப்பை முடித்து இருக்கும் உங்களை இந்த உலகம் அன்புடன் வரவேற்கிறது. ” என்றார்.

‘சன்டிவி’ புகழ் செப் பழனிமுருகன் தன் பேச்சில் , ” இங்கே படிப்புடன் மனதையும் சுத்தப்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். எதிலும் இலக்கை நிர்ணயித்துப் பயணம் செய்யுங்கள் மேலே வரலாம்” என்றார்.

ஜிடிவி செப் சித்ததார்த் தனது உரையில் “படிப்பை முடித்து பணியுரியும் போது சின்ன ஹோட்டல்,பெரியஹோட்டல் என்று பாகுபாடு பார்க்காதீர்கள் .

எங்கும் அனுபவம் கிடைக்கும். கற்றுக் கொள்ளலாம். சீனியரிடம் கற்றதை உங்கள் ஜூனியரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உணவு இருப்பிடம், தங்குமிடம் எல்லாம் தரும் வேலை இதுதான்.

நேர்மையாக இருங்கள் உலகம் முழுக்க பணிபுரியலாம் ” என்றார்.

விழா முடிந்து சாய் இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மாணவர்கள்  செஃப்களிடம் ஆர்வமுடன் கலந்துரையாடினர். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →