சைத்தான் @ விமர்சனம்

sai-1

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க,

விஜய் ஆண்டனி இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க, அருந்ததி நாயர், ஒய் ஜி மகேந்திரன் , கிட்டி என்கிற கிருஷ்ண மூர்த்தி , முருகதாஸ் ஆகியோர் உடன் நடிக்க ,

எழுத்தாளர் சுஜாதாவின் ஆ நாவலை – உரிமை பெற்று படத்தின் முதல் பாதியை அமைத்து,  தொடர்ந்து திரைக்கதை எழுதி பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கி இருக்கும் படம் சைத்தான் .

sai-2

கணிப்பொறி மென் பொருள் புலியான தினேஷ் (விஜய் ஆண்டனி ) , மணப்பெண் விளம்பரத்தின் வழி ஓர் இளம்பெண்ணை (அருந்தாதி நாயர் ) பார்த்து விரும்பி மணக்கிறான் .

சில நாட்களுக்குப் பிறகு அவனுக்கு மண்டைக்குள் யாரோ பேசுவது போல குரல் கேட்கிறது , அவனுக்கு யாரென்றே தெரியாத — ‘ஜெயலட்சுமி’யை கொல்ல வேண்டும் என்று கட்டளை இடுகிறது .

மாடியின் உச்சியில் இருந்து குதிக்கத தூண்டுகிறது.  

sai-5

அந்த குரலால் நண்பனின் (முருகதாஸ்) மரணத்துக்கே காரணமாகிறான் தினேஷ் . இதற்கிடையே அந்தக் குரல் அவனை தஞ்சாவூருக்கு அழைக்கிறது . அங்கே போனால் …..

அறுபது அன்டுகளுக்கு முன்பு, தன் வளர்ப்பு மகன் கோபாலனுடன் வாழ்ந்த சர்மா என்ற தமிழ் ஆசிரியரை (விஜய் ஆண்டனி இரண்டாம் வேடம்) ,

உதவி கேட்டு வந்த ஜெயலட்சுமி என்ற ஏழை பிராமணப்பெண் (ஜெயலட்சுமி) மணந்து கொண்டு , அதே நேரம் நடராஜ் என்ற ஆங்கில ஆசிரியர் மீது  கள்ளக் காதல் கொண்டதும், 

sai-7

அதன் விளைவாக நடந்த சம்பவங்களால் சர்மாவும் கோபாலனும் ஜெயலட்சுமியாலும் அவளது கள்ளக் காதலனாலும் கொல்லப் பட்டதும் சொல்லப்படுகிறது .

இந்த நிலையில் தினேஷின் மனைவி ஓர் தவறான இளைஞனிடம் சிக்கி , காணாமல் போகிறாள் . மனைவியைத் தேடும் தினேஷுக்கு நடக்கும் சம்பவங்களே சைத்தான் .

நடிப்பில் இன்னொரு உயரத்தை தொட்டு இருக்கிறார்  விஜய் ஆண்டனி.  பிச்சைக்காரனில் நெகிழ்த்தியவர் இதில்  மன நோயாளியாக மிரண்டு சைத்தானாக மிரட்டுகிறார் .

sai-8

நடிப்பதற்கு கஷ்டமான ஒரு கேரக்டரில் உழைத்து நியாயம் செய்து இருக்கிறார்  பாடல்கள் ஒகே . பின்னணி இசை பிரம்மாதம்.

அருந்ததி நாயர் ஒகே . முருகதாஸ் கிட்டி, ஒய் ஜி மகேந்திரன், சாரு ஹாசன், விஜய் சாரதி, மீரா கண்ணன்,  ஆகியோரும் ஜஸ்ட் நடிக்கிறார்கள் . அவ்வளவுதான் .

சுஜாதாவின் ஆ நாவல் படத்தில் வரும்வரை படம் சுவாரஸ்யம்தான் . ஆனால் அதன் பிறகு ஸ்டீராய்டு மருந்தோடு கலக்கும் ஆவி, உடல் உறுப்பு திருட்டு , பொண்டாட்டி துரோகம் என்று… 

sai-6

அநியாயத்துக்கு வழுக்கி விட்டார்கள் . லூசி , என்னை அறிந்தால் , சிவாவின் காக்கி சட்டை , சிவாஜியின் புதிய பறவை எல்லாம் வந்து போகிறது .

முதல் பாதி நவீனத் தன்மையில் இருந்து பின் பாதி முற்றிலும் மாறாக பழைய – பார்த்து சலித்த விஷயங்களுக்குள் பயணிக்கிறது படம் .

sai-3

ஆரம்பக் காட்சியில் ஓய ஜி மகேந்திரன் ஒரு  எலக்ட்ரானிக் கார்ட் பற்றி சொல்கிறாரே , அதை வைத்து பின் பாதியில் திரைக்கதை அமைத்து இருந்தால் படம் வேறு பரிமாணத்தில் விஸ்வரூபம் எடுத்து இருக்கும்

படத்தின் ஒவ்வொரு பகுதியும்  அளவுக்கு மீறிய  நீளத்தில் இருக்கிறது . ஜெயலட்சுமி யார் என்பதை கண்டு பிடிக்க இடைவேளை வரை பயணிக்க வேண்டிய கதை இல்லை இது .

sai-4

அடுத்து என்ன என்பதை படம் முழுக்கவே வெகு சுலபமாக யூகிக்க முடிவது பெரிய குறை

சைத்தான் …. அர்ஜுனன் (‘விஜய’ன்)  கையில் அட்டைக் கத்தி

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *