வித்தியாசமான கதைக் களத்தில் ‘சிம்பா’

simba 1

சினிரமா ஸ்டுடியோஸ் சார்பில் கே .சிவனேஸ்வரனும் , யசோதா பிலிம்ஸ் சார்பில் கோல்டு மனோஜும் சேர்ந்து தயாரிக்க,

பரத், பிரேம்ஜி .ரமணா, பானு மெஹ்ரா, சுவாதி தீட்சித் , பவர் ஸ்டார் நடிப்பில் அரவிந்த் சித்தார்த் இயக்கி இருக்கும் படம் சிம்பா .

இசை விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு சினு சித்தார்த் .

கஞ்சா குடித்து விட்டு கற்பனையில் வாழும் மனிதனின் கதையை படமாக்கினால் அதற்கு ஆங்கிலத்தில் ஸ்டோனர் படம் என்று சொல்வார்கள் .

அந்த வகையில் தமிழின் முதல் ஸ்டோனர் படமாக வருகிறது சிம்பா (ரொம்ப முக்கியம் !)

simba 2

அப்படி ஒரு போதையாளர் பாத்திரத்தில் நடிகர் பரத்! தனிமை காரணமாக வாழ்க்கை திசைமாறி கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி, 

அதன் எதிர்விளைவாக எப்போதுமே ஒரு வித பிரம்மை மன நிலையில்  உழலும் ஒருவனின் உலகம் எப்படி இருக்கும்? அதுதான் சிம்பா

படத்தின் கதைப்படி அதீத கஞ்சா பழக்கம் காரணமாக நினைப்பது எல்லாம் நேரில் நடப்பது போல உணரும் நிலைக்கு போய்விட்ட பரத்தின் கண்களுக்கு பிரேம்ஜி நாயாகத் தெரிகிறார் .

எனவே நாயின் உடல் மொழிகளோடு நாயின் தோற்றத்தில் நடித்து இருக்கிறார் பிரேம்ஜி . அதோடு பரத்தின் தாத்தாவாகவும் நடித்து இருக்கிறார் .

simba 33

ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த், மலையாளத்தில் பதினைந்து படங்களுக்கு மேல் பணியாற்றியவர்.  ஒளிப்பதிவில் பிரத்யேக உபகரணங்களை இறக்குமதி செய்தும்,

புதிய உபகரணங்கள் பலவற்றை உருவாக்கியும் பயன்படுத்தும் தனித்துவமானவர். 

கதாநாயகியாக தெலுங்கில் ஹிட்டடித்த வருடு பட நாயகி பானு மெஹ்ரா நடித்து இருக்கிறார்.    ராம் கோபால் வர்மா படங்களில் நடித்த ஸ்வாதி தீக்‌ஷித், 

ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுடன் சில முக்கிய காட்சிகளிலும் நடித்திருக்கிறார். பரத் , பிரேம்ஜி இருவரையும் அழிக்க நினைக்கும் ஒரு வில்லன் கேரக்டரில் ரமணா நடித்து இருக்கிறார் .

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஷால், ஜெயம் ரவி, மிஷ்கின் , இயக்குனர் காந்தி கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டு பாடல்களையும் முன்னோட்டததையும் வெளியிட்டனர் .
simba 22
எல்லா பாடல்களிலும் மெட்டு, கருவிகள் பயன்பாடு என்று இசையில் அசத்தி இருந்தார் விஷால் சந்திரசேகர் .  எந்த அளவுக்கு என்றால் நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், விஷால் இருவருமே ,
” கூடிய விரைவில் விஷாலோடு  பணி புரிவேன் ” என்று மேடையில் சொல்லிப் பாராட்டும் அளவுக்கு !

அதே போல சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவும் மிக பிரம்மாதமாக இருந்தது.

காட்சிகளில் கிம்மிக்ஸ் தன்மையால் கவனம் கவர்கிறார் இயக்குனர்

நிகழ்ச்சியில் பேசிய பிரேம்ஜி

simba 11
” நாயாக நடிப்பதற்காக சாக்குத் துணி போன்ற ஒரு உடை , நாய் போல முக அமைப்பு மற்றும் மேக்கப் எல்லாம் போட்டு நடிக்க வேண்டி இருந்தது.
புழுங்கித் தள்ளி விடும் . ரொம்ப சிரமம் .  பொருட்காட்சி அரங்குகளில் கரடி போல மிக்கி மவுஸ் போல உருவம் கொண்ட உடை அணிந்து சிலர் நிற்பார்களே…  
அவர்கள் எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது இந்தக் கேரக்டரில் நடித்தபோதுதான் எனக்கு தெரிந்தது. ஒரு காட்சியில் இருபது நாய்களோடு சேர்ந்து நடிக்க  வேண்டி இருந்தது.
பயந்து கொண்டே நடித்தேன்  ” என்றார்

இசை அமைப்பாளர் விஷால் சந்திர சேகர் பேசும்போது

simba 7
‘ இயக்குனர் எனக்குக் கொடுத்த சுதந்திரம் என்னை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கான ,
ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது ” என்று கூறி  பாடல்களில் பணியாற்றிய அனைவரையும் அங்கீகரித்து நன்றி சொன்னார்

“உண்மையிலேயே எனக்கு இது வித்தியாசமான கேரக்டர் . இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது

simba 6
‘ என்னங்க இப்படி ஒரு கதை!இதை எப்படி விஷுவலாக புரிய வைப்பீர்கள்?’ என்று
சந்தேகமாகக் கேட்டேன். ஆனால் இயக்குனர் அட்டகாசமாக விளக்கியதோடு , அட்டகாசமாக எடுத்தும் இருக்கிறார் . ” என்றார் பரத்

இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர்  தன் பேச்சில் “தயாரிப்பாளர் சிவனேஷ்வரனின் முதல் தயாரிப்பாக இருந்தாலும், படப்பிடிப்பு தளத்தில் நான்  பரீட்சார்த்தமாக செய்துப்பார்க்கும் புதிய காட்சியமைப்புகளுக்கு, 

simba 5

முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார்.ஒரு நிலையில் படததை தொடர்வது சிரமம் என்றானபோது  கோல்டு மனோஜ் வந்து இணைந்தார் . பாடல்களைப் பார்த்தீர்கள் .

மிக வித்தியாசமான பின்னணி இசையைக் கொடுக்க இருக்கிறார் விஷால் சந்திரசேகர் ” என்றார்

படக் குழுவை பாராட்டிப் பேசிய மிஷ்கின் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணி சார்பாக பேசினார்

” விஷால் போன்ற நல்ல மனிதனை பார்க்க முடியாது . அவரை விஷம் என்கிறார் ஒரு பெரிய தயாரிப்பாளர் .

simba 9

நடிகர் சங்கத் தேர்தலில் கொடுத்த எல்லா வாக்குறுதிகளையும் விஷால் நிறைவேற்றி விட்டார் . மிச்சம் உள்ள கட்டிடம் கட்டும் பணியும் ஆரம்பிக்க உள்ளது .

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் எங்கள் விஷால் அணி ஜெயித்தால் , ஒரே வருடத்தில் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் .

இல்லை என்றால் ஓர் ஆண்டு முடிந்த உடனே ராஜினாமா செய்வோம்.

எனது படம் ஒன்றுக்கு விரைவில் விஷால் சந்திரசேகர் இசை அமைப்பார் ” என்றார் .

ஜெயம் ரவி பேசும்போது

simba 8

” பொதுவாக ஒரு படத்துக்கு கஷ்டப்பட்டு நடிச்சத பத்தி சொல்லும்போது ‘நாயா உழைச்சேன்’னு சொல்வோம் .

ஆனா பிரேம்ஜி இந்தப் படத்துல நாயாவே நடிச்சு உழைச்சு இருக்கார் ” என்று கலகலக்க வைத்து விட்டு படக் குழுவை பாராட்டிப் பேசினார் .

“படத்தில் விஷால் சந்திர சேகரின் பாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது . கூடிய விரைவில் என் படத்துக்கு அவர் இசை அமைப்பார்” என்று இசை அமைப்பாளர் விஷால் சந்திர சேகரைப் பாராட்டிப் பேசிய விஷால்,

தொடர்ந்து 

simba 4

” நாங்கள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தப் படத்துக்கு நல்ல ரிலீஸ் தேதியை உருவாக்கித் தருவேன் .

ஆன் லைனில் படத்தை வெளியிடும் அநியாயத்தை ஒழிப்பேன் . இந்த விசயத்துல ரெண்டுல ஒண்ணு பாக்கறதா முடிவு பண்ணிட்டேன் .

இந்த ஒரு படத்துக்கு மட்டுமில்ல . நான் சொல்றது எல்லா படத்துக்கும்தான் ” என்றார்.

அப்படியே ஆகட்டும் ! ததாஸ்து ! இன்ஷா அல்லா ! ஆமென் !

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *