”20 லட்சம் கோடியும் ஏழைகளுக்கே போகட்டும்”- சொ.சிவக்குமார்

பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி,  மத்திய அரசின் 20’ லட்சம் கோடி ஏழை மக்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்கிறார்,  ‘ஆடவர்’ படத்தின் தயாரிப்பாளரும், மக்கள் செயல் பேரவைத்  தலைவருமான சொ.சிவக்குமார் பிள்ளை
 
”கட்டுப்படுத்த முடியாத நிலையில் மத்திய மாநில அரசு இருக்கிறது நான்காம் கட்ட ஊரடங்கில் என்ன செய்யபோகிறது இந்தியா அரசு தெரியவில்லை …
 
பொருளாதாரம் வளர்ச்சி பெற இருபது லட்சம் கோடி திட்டம் கொண்டு வரப்போவதாக பிரதமர் திரு மோடி அவர்கள் கூறியுள்ளார் அந்த திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனளிக்க கூடியவகையில் இருக்க வேண்டும் … பணக்காரர்களுக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் இருக்க கூடாது …
 
இன்றைக்கு இருந்த காசுகளை செலவு செய்துவிட்டு பணப்புழக்கம் இல்லாமல் இருப்பது அவர்கள்தான் அவர்கள் கைகளில் காசு புழங்கினால்தான் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பெரும் …பணக்காரர்களிடம் அந்த பணம் போனால் பணப்புழக்கம் இல்லாமல் முடங்கிவிடும். “என்கிறார்  சொ.சிவக்குமார் பிள்ளை
 
கொரோனா வீடடைவுக் காலத்தில் தமிழக அரசு மதுக்கடைகளைத் திறந்த போது, “சிங்கம் இல்லா காட்டுக்குள் நரி நாட்டாண்மை பண்ணுவதுபோல் ஆளுமை இல்லா தமிழகத்தில் காசுக்காக, பதவி சுகத்துக்காக ஆட்சியில் இருக்கும் முதல் அமைச்சர் முதல் சட்டமன்ற உறுப்பினர்வரை ஆளும்கட்சி என்று சொல்லிக்கொண்டு அவர்கள் செய்வதை பார்த்ததால் தமிழக மக்களை வேதனையில் விழி பிதுங்க வைக்கிறார்கள்…..
 
கடந்த மூன்றுமாதமாக கொரனவை ஒழிக்கிறோம் நீங்கள் வீட்டில் இருங்கள் என்று சொன்னார்கள்  .
 
கொரானாவின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை….கோவில்களின் கதவுகளை இழுத்து மூடிவிட்டு மதுக்கடைகள் கதவுகளை திறந்து காசு பார்க்க போகிறார்கள் ….கொரானாவின் காற்றும் குறையாது ….மதுவின் நாற்றமும் குறையாது ….
 
உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ….நம் கிராமங்களில் இருப்பவர்களை மதுக்கடைக்கு போகவிடாதீர்கள் ….மது  குடிப்பவர்களை அழித்துவிடும்…. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை கொள்ளும் விஷம் என்று தெரியாமல் குடிக்கிறார்கள்.
 
இந்த நேரத்தில் மதுக்கடைக்கு போவதால் கொரானாவின் தாக்கம் அவர்களுக்கு வந்து அவர்களுக்கு மட்டுமல்லாது அவர்கள் குடும்பத்தையே பாதிக்கும்….இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் இளைஞர்களும், தாய்மார்களும் கவனமாக இருக்கவேண்டும் ….  
 
உங்கள் இடத்தில் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்….  யாரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பாதீர்கள். மதுவை குடிப்பதற்கு அனுமதிக்காதீர்கள் ….
 
மது குடிப்பதினால் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் காலம் முழுவதும் கவலை படும்படி செய்துவிடும்…. மதுவை தவிர்ப்போம்… மகத்தான வாழ்வை தொடர்வோம்….” என்று இவர் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *