சூரரைப் போற்று… ஏன் பார்க்கணும்? !- ஆர்வம் தூண்டும் அடடே காரணங்கள் 4

சுதா கொங்கரா இயக்கத்தில்,  சூர்யா நடிப்பில் குனீத் மோங்காவின் சீக்யா எண்டர்டெய்மெண்ட் தயாரித்திருக்கும் சூரரைப் போற்று, நவம்பர் 12ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது. 
 
சூர்யாவோடு  மோகன் பாபு, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுரளி ஆகியோர்  நடித்திருக்கின்றனர். குறைந்த விலை விமான சேவையான ஏர் டெக்கானின் நிறுவனரும், ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் கற்பனைக் கதை இது  
 
தங்களது சீட் பெல்டினை அணிந்து கொண்டு, ஒவ்வொரு ரசிகர்களும், அழகாகக் கோர்க்கப்பட்டுள்ள இந்தக் கதையை அனுபவிக்கக் காத்திருக்கின்றனர். 
.
ஏன் சூரரைப் போற்று திரைப்படத்தை ரசிகர்கள்  பார்க்க வேண்டும் என்பதற்கான 4 காரணங்கள் …
 
1 – உண்மைக் கதையின் அடிப்படையில் உருவானது – இந்தப் படம் எவ்வளவு தாக்கத்துடன் உருவாகியுள்ளது என்பதே குறிப்பிட்டுப் பேச வேண்டிய விஷயம். நிஜ வாழ்வின் அடிப்படையில் சொல்லப்படும் ஒரு கதை என்பதே ரசிகர்களை சுவாரசியப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகும்.
 
தேவையற்ற எந்த விஷயங்களும் இன்றி, நிஜ வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்களை எடுத்து வந்திருக்கிறார்கள். நடந்த சம்பவங்களின் உண்மையாகவும், அந்த சம்பவங்கள் ரசிகர்களின் கண்களுக்காக அழகாகவும் படம்பிடிக்கப்பட்டுள்ளன. 
 
2 – பரபரப்பான கதை – சூரரைப் போற்று, ஊக்கம் தரும், பரபரப்பான, ரசிகர்களை முழுமையாக ஆழ்ந்து ரசிக்க வைக்கும் கதையைக் கொண்ட திரைப்படம். அதிகம் போற்றப்படாத ஒரு நாயகனின் வாழ்க்கையைப் பற்றிய கதையான இது, அவரது பயணம், பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நேர்மையுடன் உழைத்த அவரது துணிச்சல் ஆகியவற்றைப் பேசுகிறது.
 
நெருக்கடியான காலகட்டத்தில், இது போன்ற ஒரு கதை கண்டிப்பாக ரசிகர்களின் நெஞ்சில் ஊக்கத்தை நிரப்பி, பல விஷயங்களைக் கற்பிக்கும். 
 
3 – தேசிய அளவில் அனைவரையும் ஈர்க்கும் படம் – அமேசான் ப்ரைம் வீடியோவுடன், இந்தத் திரைப்படம் சுவாரசியமான கதையம்சத்துடன் 200 தேசங்களில் தரையிறங்குகிறது.
 
உங்கள் வீட்டின் வசதியான சூழலில் உட்கார்ந்து உணர்ச்சிகள் நிறந்த இந்த அட்டகாசமான ஆக்‌ஷன் கதையை நீங்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பீர்கள் என்பதற்கு இன்னொரு காரணம். 
 
4 – சுதா மற்றும் சூர்யா, சொல்லி அடிக்கும் கூட்டணி – சுதாவின் நுட்பமும், சூர்யாவின்  திறமையும் சேர்ந்து கண்டிப்பாக இந்தத் திரைப்படத்தை வெற்றிப் படமாக ஆக்கும்.
 
துல்லியமான பார்வை இருக்கும் ஒரு இயக்குநராக சுதா அறியப்படுகிறார். இவ்வளவு ஊக்கத்தைத் தரும் ஒரு கதையைச் சொல்ல 2 வருடங்களாக பேரார்வத்துடன் கடுமையாக உழைத்திருக்கிறார். சூர்யா, 
 
முழுமையான இயக்குநரின் நடிகர். இயக்குநரின் பார்வையைத் திரையில் கொண்டு வர 100 சதவீதம் உழைப்பவர். சுதாவிடமிருந்து சூரரைப் போற்று படப்பிடிப்பில் சூர்யா நிறைய கற்றிருக்கிறார். இந்த இயக்குநர் – நடிகர் இணையின் நட்புறவுக்குப் பல ரசிகர்களின் ஆதரவு உள்ளது. 
 
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *