சூரரைப் போற்று- விசேஷ போஸ்டர் வெளியீடு

‘சிம்ப்ளி ஃப்ளை’ என்ற புத்தகத்தின் கற்பனை வடிவமான, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் திரைப்படமான சூரரைப் போற்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் வெளியாகும் வேளையில், ஒரு விசேஷ போஸ்டரை சூர்யா மிக உயரமான இடத்திலிருந்து வெளியிட்டார்.

இந்திய பொழுதுபோக்குத் துறை வரலாற்றிலேயே முதன்முறையாக கடல் மட்டத்திலிருந்து 34000 அடி உயரத்தில் -62°C தட்பவெப்பத்தில் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் சூர்யாவுடன் நடைபெற்ற ஒரு நிகழ்வின் மூலம் ரசிகர்களிடமிருந்து பெறப்பட்ட 58,000 கையெழுத்துகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 கையெழுத்துகள் விண்வெளியில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.

இது பற்றி  சூர்யா கூறும்போது, ‘ இப்படத்துக்கு கிடைத்த அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கனவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதை சாதிப்பது சாத்தியமே எனபதையும், வானம் கூட எல்லை இல்லை என்பதையும் என் ரசிகர்கள் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் சூரரைப் போற்று திரைப்படமும் இந்த சமர்ப்பணமும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

படத்தின் வெளியீட்டையும், பார்வையாளர்களின் எதிர்வினைகளையும் நான் எதிர்பார்த்திருக்கிறேன்’ என்றார்.

ஒரு அச்சமற்ற புரட்சியாளரின் அசாதாரணமான சாதனைகளுக்கு சிறகுகளை அளிக்கும் இந்த உணர்ச்சி நிறைந்த ஆக்‌ஷன் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகி இருக்கிறது.

சுதா கொங்காரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், நிகேத் பொம்மி ஒளிப்பதிவில், சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ப்ரேஷ் ராவல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் மற்றும் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் (2டி) மற்றும் குணீத் மோங்காவின் ஷிக்யா எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் 200க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படம்  வெளியாகியுள்ளது.\

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *