கபாலி சர்ச்சை ; கலைப்புலி எஸ் தாணு விளக்கம்


கபாலி பட விநியோக உரிமையைத்  தருவதாகச் சொல்லி பணம் வாங்கிவிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஏமாற்றி விட்டார் என ஜி.பி. செல்வகுமார் என்பவர்  குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
 
இது தொடர்பாக  பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ் தாணு விளக்கமளித்தார் 
 
“ஜி.பி.செல்வகுமாருக்கும், கபாலி படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செல்வகுமார் கபாலி படத்தை வாங்கவில்லை, விநியோகஸ்தர் வேணுகோபாலுக்கு சாட்சிக் கையழுத்துப் போட வந்தவர் தான் செல்வக்குமார் .
அவர் அழைத்து வந்த வேணுகோபால் என்பவர்தான் வாங்கினார். அவருக்கும் எனக்குமான பணப்பரிவர்த்தனைகள் வெளிப்படையாகவும் ,நேர்மையாகவும் நடந்து வந்திருக்கின்றன. 
 
தியேட்டர் எடுத்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில்  இது வரை, ரூ 61 லட்சம்   அவருக்கு நான்  உதவியிருக்கின்றேன்.
 
கபாலி படம் நஷ்டம் என கூறுவது முற்றிலும் பொய். கபாலி மாபெரும் வெற்றி படம், சென்னையில் மட்டுமே 13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது தயாரிப்பாளரான நானே சொல்கிறேன் படம் வணிகரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது .யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால் அவர்களை அழைத்து பிரச்னையைக்  கேட்டு உதவி செய்வது சூப்பர்ஸ்டார் ரஜினியின் பழக்கம்,அதைப் பயன்படுத்தி ரஜினியை ஏமாற்றத்தான்   கபாலி நஷ்டமென்று சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்..
 
தற்போது கபாலி படம் நஷ்டம் என்று பொய்களைக் கூறி ரஜினி சாரின் காலா படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டுத் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். கடைசியில் நீதியே வெல்லும் ” என்றார்  எஸ் தாணு .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *