கார்த்திக் சுப்புராஜின் புதிய படங்கள்

stone 2

வித்தியாசமான படங்களால்  கவனம் கவர்வது மட்டுமின்றி குறும்பட உலகிலும் சாதனை படைக்க விரும்பி 2014 ல் ஸ்டோன் பெஞ்ச் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் கார்த்திக் சுப்புராஜ் .

பெஞ்ச் பிலிக்ஸ், பெஞ்ச் காஸ்ட், பெஞ்ச் சப்ஸ் என மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் முறையே நல்ல குறும்படங்களை தயாரித்தல், திரையிடல்,

நடிகர் நடிகையர் தேர்வு போன்ற துறைகளில் செயல்படுவது மட்டுமின்றி 150 படத்துக்கு மேலாக சப் டைட்டிலிங் செய்துள்ளது 

stone 4

2015 ல் பெஞ்ச் டாக்கீஸ் என்ற பெயரில் 5 குறும்படங்களை இணைத்து வெளியிட்டது.  2016 ல் அவியல் என்ற பெயரில் 4 குறும்படங்களை இணைத்து வெளியிட்டது.

இதன் மூலம் குறும்பட இயக்குநர்களுக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்க வழி காட்டப்பட்டது.

தற்பொழுது அடுத்தகட்டமாக, வெள்ளித்திரை மட்டுமின்றி, டிஜிட்டல் உலகிலும் சோமசேகர், கல்ராமன் என்ற அமெரிக்க தொழில் அதிபர்களுடன் கூட்டணி அமைத்துக் கால்பதித்துள்ள கார்த்திக் சுப்புராஜ் ,

ston 1

‘மேயாத மான்’ ‘மெர்குரி’ என்ற இரண்டு திரைப்படங்களையும், கள்ளச்சிரிப்பு என்ற வெப் சீரீஸ் ஒன்றினையும் தயாரித்துள்ளார் கார்த்திக் சுப்பாராஜ்.

மெர்குரி படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ளார். பிரபுதேவா நடித்திருக்க்கிறார். திரு ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மேயாத மான் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, சின்னத்திரை நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் ரத்தினகுமார் இயக்க,

stone 3

புதுமுக ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் இசையமைத்துள்ளனர்.

கள்ளச்சிரிப்பு என்ற வெப் சீரீஸ் ஸை ரோஹித் எழுதி நடித்துள்ளார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (1986 ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் (1988- 89) மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது (1989 ) விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *