டி.ராஜேந்தர் – நடிப்பில் ‘இன்றையக் காதல் டா ‘

ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், எங்க வீட்டு வேலன், மோனிஷா என் மோனாலிசா , சொன்னால்தான் காதலா, வீராசாமி,

சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகம் ஆன காதல் அழிவதில்லை ஆகிய படங்களை தயாரித்த சிம்பு சினி ஆர்ட்ஸ், 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தயாரிக்கும் படம் டி.ராஜேந்தரின் இன்றையக் காதல் டா.  தமிழ் தெலுங்கு , இந்தி ஆகிய மூன்று மொழிகளில்  தயாராகிறது இந்தப் படம். 

நமீதா வித்தியாசமான டான் வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் பல  இளம் நாயக நாயகிகள் மற்றும் நகைச்சுவை நடிகர்களை அறிமுகம் செய்கிறார் ராஜேந்தர் . இவர்களுடன் ராதா ரவி, இளவரசன், வி டி வி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, தியாகு,  ரோபோ ஷங்கர் , மதன் பாபு, ‘கவண்’ ஜெகன்,
 
‘மைதிலி என்னை காதலி’ சுரேஷ், கூல் சுரேஷ் , நினைத்தாலே இனிக்கும் ராஜப்பா, கொட்டாச்சி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள் . 
 
” இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ற இளமை சொட்டும் காதல் கதை இது ” என்கிறார், கதை , திரைக்கதை, வசனம் , பாடல்கள், இசை , ஒளிப்பதிவு மேற்பார்வை செய்து  , இயக்கும்  டி. ராஜேந்தர் . 
 
இணை தயாரிப்பு உஷா ராஜேந்தர் , துணை தயாரிப்பு பாரூக் பிக்சர்ஸ் டி. பாரூக் . 

இலக்கணப் படி ‘இன்றைய காதல் டா ‘ என்பதுதானே சரி, இன்றையக் காதல் டா என்று எக்ஸ்ட்ரா ஒரு க் வைத்து இருக்கிறாரே என்று பார்த்தால், 
 
உயிருள்ளவரை உஷா படத்தில் இருந்து தனது படங்களின் பெயர்கள் ஒன்பது எழுத்தில் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார் ராஜேந்தர் .
 
எனவேதான் எக்ஸ்ட்ரா ஒரு க் விழுந்துள்ளது . 
 
ஒருவேளை கதையில் ஏதாவது ஒரு க் வைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம் . 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *