‘ கூகுள் குட்டப்பன் ‘ ஆகும் ‘ ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்’

ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில்  2019-ம் ஆண்டு வெளியான மலையாளப் படம்  ‘ ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்’ . 

கொண்டாடப்பட்ட இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகள் கிடைத்தது. 

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார்இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். பலரும் அவர் இயக்குவதற்காகக் கைப்பற்றியுள்ளார் என எண்ணினார்கள்.

ஆனால் கமல் நடித்த ‘தெனாலி’ படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார், ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்’ தமிழ் ரீமேக்கைத் தயாரித்து நடிக்கிறார்.

‘கூகுள் குட்டப்பன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, இயக்குநர் விக்ரமன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் படப் பூஜையில் கலந்துக் கொண்டு படக் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்’ கதையைத் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி சுவராசியமாகத் திரைக்கதை அமைத்துள்ளனர்.

இந்தப் படத்தை சுமார் 10 ஆண்டுகளாக கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்து வரும் சபரி மற்றும் சரவணன் இருவரும் இணைந்து இயக்குகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தென்காசியில் தொடங்குகிறது.

‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான சுராஜ் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், செளபின் கதாபாத்திரத்தில் தர்ஷன் நடிக்கவுள்ளார்கள். ஆர்.கே செல்லுலாய்ட்ஸ் சார்பாக கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கிறார்.

இதில் நாயகியாக லாஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், யோகி பாபு, மனோபாலா, மாரியப்பன், ப்ராங் ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

‘பண்டிகை’, ‘ரங்கா’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ஆர்வி ஒளிப்பதிவாளராகவும், இசையமைப்பாளராக ஜிப்ரானும், பாடலாசிரியராக மதன் கார்க்கியும் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, தென்காசி, சென்னை மற்றும் சில காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்கவுள்ளனர். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாகக் களமிறங்கியுள்ளது படக்குழு.

‘கூகுள் குட்டப்பன்’ படக்குழுவினர் விவரம்

தயாரிப்பு: கே.எஸ்.ரவிகுமார்
கதை: ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால்
திரைக்கதை, வசனம், இயக்கம் – சபரி – சரவணன்

நடிகர்கள்: கே.எஸ்.ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, மனோபாலா, மாரிமுத்து, ப்ராங்ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர்
தயாரிப்பு வடிவமைப்பு: பி.செந்தில் குமார்

ஒளிப்பதிவாளர்: ஆர்வி
இசையமைப்பாளர்: ஜிப்ரான்
எடிட்டர்: ப்ரவீன் ஆண்டனி

கலை: சிவகிருஷ்ணா
பாடலாசிரியர் – மதன் கார்க்கி
ஆடை வடிவமைப்பு: ஜே. கவிதா

படங்கள்: ராமசுப்பு
டிசைன்ஸ்: ரெட்டாட் பவன்
பி.ஆர்.ஓ – யுவராஜ்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *