வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 31வது ‘தமிழ் விழா’

வடஅமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 31ஆவது  ‘தமிழ் விழா ‘ , வரும்  ஜூன் மாதம் 29,30, மற்றும் ஜூலை 1 ஆம் தேதிகளில், 
 
 டெக்சாஸில் உள்ள  ப்ரிஸ்க்கோ சிட்டி  என்ற இடத்தில்  ‘ மரபு , மகளிர் , மழலை ‘ என்ற தலைப்பில் மிகப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.
 
இது குறித்த செய்திக்காக இவ்விழாக் குழுவின்  செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. 
 
இதில் மாண்புமிகு. மா.பா பாண்டியராஜன் ( தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் ) , கல்வியாளரும் , திரைப்படத் தயாரிப்பாளருமான  ஐசரி கணேஷ் , பேராசிரியர் முனைவர் கா. ஞானசம்மந்தன் , விஜிபி சந்தோசம் , நடிகர் ஆர்.பாண்டிய ராஜன், கால்டுவெல் வேல்நம்பி , மது சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பாண்டிய ராஜன் , “சிக்காகோ உலகத் தமிழ் மாநாடு 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
 
இது அங்கீகாரம் பெற்ற 10வது உலகத் தமிழ் மாநாடு ஆகும். FETNA பேரவையின் 31வது தமிழ் விழாவும்  வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
 
இதன் அறிக்கையில் ” செந்தமிழ் இருக்கை செய்வோம் ” என்ற வாசகம் உள்ளது. அது எனக்கு மிகவும் பிடித்தது.
தமிழ் மக்கள் யூதர்களுக்கு இணையானவர்கள். தமிழ் மக்களின் மக்கள் தொகை தமிழகத்தில் மட்டும் 71/2 கோடி உள்ளது .
 
ஆனால் தமிழ் மக்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். உலக அளவில் யூதர்களுக்கு இணையாக தமிழ் மக்களின் மக்கள் தொகையும் உள்ளது.
 
யுனஸ்க்கோ உலகத்தின் மதிக்க தகுந்த மொழிகளுள் தமிழுக்கு 14வது இடத்தை கொடுத்துள்ளது.
 
நாம் தமிழை 14வது இடத்திலிருந்து 10வது இடத்துக்கு கொண்டுவரவேண்டும். உலகத்தில் முதலில் சிங்கப்பூர்தான் தமிழை தங்கள் ஆட்சி மொழியாக அறிவித்தது அதன் பின்னர் இலங்கை போன்ற நாடுகள் அறிவித்தன.
 
பண்டைய காலத்தில் தமிழர்கள்  நாடு பிடிக்க , வணிகத்துக்காக , மருத்துவத்துக்காக , தொழில்நுட்பத்துக்காக என நான்கு அலையாக தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்தனர்.
 
நமது புலம் பெயர்ச்சியின் வேர்கள் வித்தியாசமாக இருக்கும். யூதர்களை விரட்டியது  போல் நம்மை யாரும் விரட்டி அனுப்பவில்லை.
 
தமிழர்களின் படையை எதிர்க்கவே அன்று பல நாடுகளில் படைகள் இல்லை . அப்படி ஒரு வீர வரலாறு நமக்கு உண்டு . 
Trinity School of Music வெஸ்டர்ன் இசைக்கு இருப்பது போல் இங்கே தமிழ் பண்பாட்டு மையம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
 
நாங்கள் research portal ஒன்றை உருவாக்க உள்ளோம். சிக்காகோ ஆறாவது நாடாக உலக தமிழ் மாநாட்டை நடத்துகிறது.
 
அமெரிக்காவில் யூதர்களுக்கு பிறகு அவர்களுக்கு இணையாக அதிகமாக சம்பளம் வாங்கும் இனம் தமிழ் இனம் தான்.
 
நமது பெருமையை அமெரிக்கர்களுக்கும் , உலகத்துக்கும் புரிய வைக்க வேண்டும்” என்றார்.
ஐசரி கணேஷ் தன்பேச்சில் “Fetna  பேரவையின் 31வது விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. 
இந்நிகழ்ச்சியில் என்னோடு  கலந்து கொண்டிருக்கும், 
 
அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் மட்டுமே  இன்றைய தமிழக சட்டப்பேரவையில் உள்ளவர்களில்  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய ஒரே நபர். 
 
விஜிபி சந்தோசம் அவர்கள் தான் எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கே ஒரு திருவள்ளுவர் சிலையை வைப்பவர் . அவருடைய சிறப்பே தனி சிறப்புதான்.
 
தந்தையும் மகனும் சேர்ந்து படிக்கும் ஒரே பல்கலைகழகம் எங்கள் வேல்ஸ் பல்கலைகழகம் தான்.
 
நடிகர் ஆர்.பாண்டியராஜன் விரைவில் டாக்டர். பாண்டியராஜன் ஆகப் போகிறார்.” என்றார் 
திருக்குறளுடன் தன்னுடைய பேச்சை ஆரம்பித்த   வி.ஜி .சந்தோசம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்று கணியன் பூங்குன்றனார் அவர்களின் வரிகளையும் கூறி ,
 
தொடர்ந்து, ” தமிழ் என்றும் வாழ்ந்துக்கொண்டே இருக்கிறது. எல்லா நாடுகளிலும் தமிழ் சங்கம் உள்ளது. பெட்னா அமைப்பு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
 
தமிழர் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த வருடம் நானும் Fetna தமிழ் விழாவில் கலந்துகொள்கிறேன்” என்றார் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *